உயிரைத் தினமும் குடித்திடும்
உடனிருந்தே கொல்லும் நோய்
வெளியே இருந்து வரும் மருந்தே - உன்
உடல் நோயைத் தீர்க்கும்
இடியாய் வரும் துன்பமும் ஒருநாள்
மழையாய் மறுதலிக்கும்
இன்பமும் துன்பமும்
இணைவதுதான் இவ் வாழ்க்கை
இழந்துவிட்ட இன்பம்
இணைகள் சேர இணைந்துவிடும்
பகிர்ந்தளிக்கும் துன்பம்
படிதாண்டி ஓடிவிடும்
எண்ணி எண்ணி மாய்வதல்ல
இவ் வாழ்க்கை
எதிர்நீச்சல் போட்டுவிடு
எண்ணமதைச் செயல்படுத்து
எள்ளிநகை யாடிட இதுவல்லோ நேரம்
எடுத்து வைக்கும் காலடிகள்
ஏற்றத்தைக் காட்டிவிடும்
பனிகாலம் உறங்கும் மரம்
கோடையிலே குதூகலிக்கும்
கரை வந்த அலை கடல் நோக்கி
மீண்டும் திரும்பிவிடும்
கன்னத்துக் கரம் கடுதியாய் விலகட்டும்
எண்ணத் திடம் சுடராய் மிளிரட்டும்
''..பகிர்ந்தளிக்கும் துன்பம்
பதிலளிநீக்குபடிதாண்டி ஓடிவிடும்
எண்ணி எண்ணி மாய்வதல்ல
இவ் வாழ்க்கை..''
இந்த மனநிலை வாழ்வை மறுபடி துளிர்க்க வைக்கும்
பதிவு நன்று.
பணி தொடரட்டும்.
அற்புதமான கருத்துடன் கூடிய
பதிலளிநீக்குஅழகான அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்