என்று உயிரோடு இணைந்து உடல் பிறந்த முக்கியத்துவமே பிறருடன் அன்பு செலுத்தி வாழ்வதற்காகவே என எமது முப்பாட்டன் வள்ளுவனார் அழகாய் எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.
தோண்டத்தோண்ட ஊற்றெடுக்கும் ஊருணி, அள்ளஅள்ள ஊற்றெடுக்கும் ஆழ்ந்த அன்பு. இவ்வாறான அன்பானது இறுக்கமான இதயத்தைக் கூட இளகவைக்கும் பண்பு கொண்டது. இதனாலேயே திரைப்படங்களில் உள்ளத்தை உருக்கும் காட்சிகளைப் பார்க்கும் போதும் எம்மையறியாமலே பொலபொலவென்று கண்ணீர் ஊற்றெடுக்கின்றது.
தோண்டத்தோண்ட ஊற்றெடுக்கும் ஊருணி, அள்ளஅள்ள ஊற்றெடுக்கும் ஆழ்ந்த அன்பு. இவ்வாறான அன்பானது இறுக்கமான இதயத்தைக் கூட இளகவைக்கும் பண்பு கொண்டது. இதனாலேயே திரைப்படங்களில் உள்ளத்தை உருக்கும் காட்சிகளைப் பார்க்கும் போதும் எம்மையறியாமலே பொலபொலவென்று கண்ணீர் ஊற்றெடுக்கின்றது.
வெற்றிடத்தை நிரப்பும் காற்றுப்போல் அன்புள்ளார் இதயத்தை நாடி அகிலமே சென்றடையும். இவ்வாறான பண்பு கொண்ட அன்பைப் பெறதவர்களுடைய உயிர் வாழ்க்கை பாலைநிலத்திலே பட்டுப்போன மரம் தளிர்த்ததைப் போன்றிருக்கும்.
''இல்லானுக் கன்பிங் கிடம்பொருள் ஏவல் மற்று
எல்லாம் இருந்துமவற் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க்கு ஏது முதுநூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு''
''இல்லானுக் கன்பிங் கிடம்பொருள் ஏவல் மற்று
எல்லாம் இருந்துமவற் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க்கு ஏது முதுநூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு''
பேசத்தெரியாதவர்களுக்கு தொன்மையான நூல்கள் இருப்பினும் அவற்றால் ஒரு பயனும் இல்லை. பார்க்கும் கண் அற்றார்க்கு விளக்கு இருந்தும் பயன் இல்லை. அதுபோல் குடியிருக்கும் வீடும், செலவழிக்கப் பொருளும், பணிசெய்ய ஏவலாரும் இருந்தாலும் நெஞ்சில் அன்பில்லாதவனுக்கு இது எதிலுமே பயன் இல்லை. என நன்னெறி எடுத்துக்காட்டுகின்றது.
''வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்று கூறிய வள்ளலார் போல் உள்ளத்திலே அன்பென்னும் மாளிகைளைக் கட்டிவைப்போம். அங்கு குடியிருக்க அனைத்து நுண்ணுயிர்களையும், விலங்குகளையும், பறவைகளையும், மனிதர்களையும், இனமதபேதமின்றி ஏற்றுக் கொள்வோம். அன்புள்ளார் இதயத்திலே வன்முறைக்கு இடமில்லை. மனிதாபிமானம் நிறைந்திருக்கும். பணிவு பரிமளிக்கும், விட்டுக்கொடுக்கும் பண்பு வீற்றிருக்கும், கல்லையும் கனியவைக்கும் கலை கலந்திருக்கும். ஆதலால்,
ஆழ்ந்த அன்பில் வீழ்ந்த மனதை
ஆட்டிப் படைக்கும் சோதனை – அதை
மீட்டிப்பார்க்க விரும்பாது மீண்டும்
ஆழ்ந்த அன்பில் ஆழ்ந்திருப்போம்.
//அன்புள்ளார் இதயத்திலே வன்முறைக்கு இடமில்லை. மனிதாபிமானம் நிறைந்திருக்கும். பணிவு பரிமளிக்கும், விட்டுக்கொடுக்கும் பண்பு வீற்றிருக்கும், கல்லையும் கனியவைக்கும் கலை கலந்திருக்கும். //
பதிலளிநீக்குஅழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
மிக்க நன்றி சார்
நீக்குஅருமையாக அன்பின் பெருமையினை பதிவிட்டுள்ளீர்கள் சகோதரியாரே. நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்
நீக்குஆழ்ந்த அன்பில் முழுமையாக
பதிலளிநீக்குஆழ்ந்திடில் தினம் செழுமையாக
வாழ்ந்திடும் சூழல் உருவாக்கலாம்.
வீழ்திடும் பகை நினைவும்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
பின்னூட்டத்திற்கு நன்றி
நீக்குகுஞ்சுக்கு உணவூட்டும் பறவைகளும், குட்டியை அணைத்தபடி கிளைவிட்டுக் கிளைபாயும் குரங்குகளும், சிறகுக்குள் குஞ்சுகளைத் தூங்கவைக்கும் கோழிகளும், காதலால் இணைந்து பிணைந்து நிற்கும் பாம்புகளும் இப்படி எத்தiனையோ எத்தனையோ ஜீவராசிகளின் அன்பின் வெளிப்பாடுகளை அளந்து பாக்க முடிகின்றது. அன்பின் திறம் சொல்லும் அற்புதமானப் பதிவு
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சார்
நீக்கு