• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 9 மே, 2013

    தந்தையர் தினம்

    அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்
     

    தந்தையே எனதருமை தந்தையே
    தந்தையே எனதருமை தந்தையே

    தோளில் என்னை சுமந்திடவே
    கால்கள் மார்பில் உதைத்தனவே
    கால்களுக்கு வலுத் தந்து – நான்
    வாழ்வதற்கு வழி காட்டிய
    தந்தையே எனதருமைத் தந்தையே

    விழுந்தவுடன் தூக்கிடாது
    எழுந்திருக்க எத்தனிக்கும்
    எண்ணத்தினை வளர்த்துவிட்டு – என்
    முயற்சிக்கு வழி காட்டிய
    தந்தையே எனதருமை தந்தையே

    சோர்ந்திடாத குணத்தினாலே
    குலங்களையே வாழவைத்தீர் – எதையும்
    தாங்குகின்ற மனத்தினராய்
    தாழ்வுகளை எதிர்த்து நின்றீர்
    தந்தையே எனதருமைத் தந்தையே

    ஊருக்காக உழைத்த நெஞ்சம்
    யாருக்காக சென்றதுவோ
    மறைந்து சென்ற மாயத்தினால் - எங்கள்
    மனங்களெல்லாம் தவிக்க வைத்த
    தந்தையே எனதருமை தநதையே

    சொன்ன சொற்கள் மனமெங்கும்
    சோர்வில்லாது நிறைந்திருக்க
    சோர்ந்த உங்கள் கண்களையே - இன்றும்
    சோர்விலாது தேடுகிறேன்
    தந்தையே எனதருமைத் தந்தையே

    சொந்தங்கள் சேர்ந்திடலாம்
    சொர்க்கத்தையே காட்டிடலாம்
    எந்த சொந்தம் அருகிருந்தும் – எந்தன்
    தந்தை சொந்தம் போலாமோ
    தந்தையே எனதருமைத் தந்தையே





    6 கருத்துகள்:

    1. சிறப்பு கவிதை அருமை...

      தந்தையர் தின வாழ்த்துகள்...

      பதிலளிநீக்கு
    2. சற்று நேரம் விழிகள் பனித்துப் போனேன் சகோதரி...
      படிக்கின்ற நாழிகைகளில் என் தந்தை
      விழிகளிலே வந்துவந்து சென்றார்...
      ===
      அந்த ஒரு வித்துதான் இன்று பல விருட்சங்களை
      உருவாக்கிச் சென்றுள்ளது..
      ==
      அவருக்கு, அந்த சொந்தத்திற்கு ஈடு இணை உண்டா...?
      உங்கள் வார்த்தைகள் அப்படியே தந்தையரின்
      குணங்களை வெளிக்காட்டியுள்ளது...
      ==
      இருகைகள் கொண்டு வாரி அணைக்காது
      ஒன்றைச் சுண்டு விரலை மட்டும் எனக்காக கொடுத்து..
      எழுந்து வா...
      உன்னுள் நம்பிக்கையை வளர்த்துக்கொள் என்ற
      எமக்கான நம்பிக்கையை எம்முள் ஆணிவேராய்
      பாய்த்தவர் அல்லவா...
      ==
      மனம் நிறைக்கும் கவிதை சகோதரி...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உறவுகளில் மகத்தான உறவு பெற்றோர் என்னும் உறவு . அது நிலைக்காது மறைந்து போகும்போது உறவையே வெறுக்கத் தோணுகின்றது .நன்றி சகோ .

        நீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...