• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 11 மே, 2013

    வலி தாங்கி வாழ்வளித்த வாழ்விளக்கு

    கவிதையை என் குரலில் கேட்க பச்சை பட்டனை அழுத்தவும்



    கரு தாங்க நிறை வலி உடலெங்கும் பாய
    உடலுள்ளுள்ளே புரியாத உயிரொன்று புரண்டிடவே
    ஒவ்வாத குணம் கொண்ட குடலது வயிற்றை குமட்டி வர
    வாந்திவாந்தி என்று குடலே வெளிவருமாப் போல்
    குணமொன்று தொண்டையிலே தொடர்ந்து வர
    கருவென்ற காரணம் கருத்தே புரிந்து கொண்டு
    உணவெதுவும் உடலுக்கு உதவாது வெளிவரினும்
    உணர்வெல்லாம் கருவிலே பதிந்திருக்க
    சிறிதளவு தானேதும் கருவுக்குச் சேர்ந்திடவே
    வலியோடுணவு உண்ட மகத்தான மாதாவே! – நான்
    உறங்க உன் மடி என்றும் தேவை.

    கடினமான கல்போல் கருவொன்று உந்தியிலே உதைத்திருக்க
    கட்டிலிலே புரண்டு திரும்பி சரிந்து படுக்கவொண்ணா
    நிலையது தோன்றிடினும் வயிறது தடவி
    நிலையது புரிந்து நீண்ட மூச்சை உள்இழுத்து வெளியிட்டு
    நயனமது இறுகமூடி நவரத்தினம் அத்தனையும் ஒன்றாய்க்
    கூட்டிய அழகுமகவு காண பொறுத்திருக்கும்
    பொறுமையின் பெட்டகமே பேருண்மைப் பாசமே!
    என் தலைதடவ உன் கரமென்றும் தேவை.

    இருபது எலும்புகள் இணைந்தே உடைவதுபோல்
    உடலிலே வலி எடுக்க மனிதன் தாங்கும் வலி
    உலகக் கணக்கு நாற்பத்தைந்தே அலகுகளாயிடினும்
    உடல் துடிதுடிக்க ஐம்பத்திரண்டு அலகுகள் பிரசவவலி
    அதிசயமாய் தாங்கியே தான் கருவறை தாங்கிய உயிர்
    உலகிலே நடமாட உருத்தந்த உன்னத உயிரே!
    உயிருள்ளவரை உன் அருகிருக்க அருளொன்று தேவை.

    பிரண்டு தவண்டு நடந்து நிமிர்ந்து நலமெல்லாம் நாம்காண
    வலியெல்லாம் தான்கண்டு சுகமெல்லாம் எமக்களித்து
    பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவையென
    பருவங்கள் அத்தனையும் பாடாய்ப்படுத்தி
    பருவங்கள் தோறும் பற்பல பிரச்சனைகள் பலவிதமாய்
    வகைவகையாய்த் தந்தே பாடாய்ப்படுத்திய எம்மை
    ஆதரவாய் அணைத்தெடுத்து ஆறுதலாய் அறிவுரைகள்
    ஆற்றியே வழிப்படுத்திய அன்புரிவே!
    ஆயுள்வரை உன் அரவணைப்பு எமக்கென்றும் தேவை.

    அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்







    9 கருத்துகள்:

    1. சிறப்பான கவிதை...

      அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

      பதிலளிநீக்கு
    2. அன்று நெஞ்சில் நமைச்சுமந்த
      தந்தையைப் பற்றிய பதிவு..
      இன்று கருவில் சுமந்து
      பெரும்வலி கண்டு நமை ஈன்று
      வளர்ந்த நாட்களெல்லாம்
      கண்ணுக்குள் மணியாக
      பொத்திவைத்து காத்து
      வீழ்ந்த போதெல்லாம்
      உயிர்நாடிவரை துடித்து
      சோர்ந்துபோன பொழுதெல்லாம்
      சோர்வினை புறம்வைத்து
      விழி அயராது
      எமை ஆளாக்கிய அன்னையின்
      ஆளுமை சொல்லும்
      அழகிய கவிதை சகோதரி...

      பதிலளிநீக்கு
    3. ஆயுள்வரைஅன்னையர் அரவணைப்பு என்றும் தேவை.

      அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்

      பதிலளிநீக்கு
    4. சரியாக சொன்னீங்க சகோதரி .அன்னையர் தின வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    5. //ஆயுள்வரை உன் அரவணைப்பு எமக்கென்றும் தேவை.

      அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் //

      அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    6. வலிதாங்கி வாழ்வு தந்த அன்னைக்கு அருமையான வாழ்த்துக்கள் சொல்லியுலீர்கள்.உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    7. பெயரில்லா13 மே, 2013 அன்று AM 7:51

      இனிய அன்னையர் தின வாழ்த்து.
      Vetha.Elangathilakam.

      பதிலளிநீக்கு
    8. சிறப்புக் கவிதை வெகு சிறப்பு வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...