"செத்துக் கிடக்கும் பிணத்தருகே
இனிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கென்ன காண்
கயிலாயத்தானே''
- பட்டினத்தார் -
வரிகள் காட்டிய தெளிவு
இறந்தார் இழந்தாரே!
வாழத்தான் வந்தோம் வாழ்ந்துதான் பார்த்தோம்
வாழ்க்கையும் இனித்தது, சில நாள்கள் கசந்தது
வாழ்ந்தே தீரவேண்டுமென வாழ்க்கையும் வழி தந்தது
போராடிப் போராடி வாழ்க்கையும் தோற்றது
போதுமடா சாமியென போகத்துணிந்த உயிரும்
போகவழிநாடி நோயுமொன்று தேடியே கண்டது
உறவுக்கு ByeBye உலகுக்கு ByeBye - இன்று
வாழ்க்கை மறந்து நான் வானம்பாடியாய்
உடலற்ற உயிராய்ப் பறந்துதான் போனேன்
சொந்தம் ஏதுமில்லை உலகம் தேவையில்லை
உறவுகள் நினைவுமில்லை உடல்தான் இல்லையே
மூளையும் தொலைந்தது வாழ்க்கையும் இழந்தது
வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வடிவமற்ற காற்றுநானே
போதுமடா சாமியென போய்விட்ட என்னை
இறந்தவருடன் உரையாடவென அழைப்பதும்தான் ஏனோ!
உடலுண்டா? குரலுண்டா? அலையலையாய் என் குரலும்
உலகெங்கும் நிறைந்திருக்க குறிப்பாய் பிரித்தெடுக்கும்
பெருந்திறனைப் பெற்றவர் திறனாலே – நான்
பேசிவிட்ட சொற்கோர்வையைப் பிரித்தெடுத்து கேளுங்கள்
புதிதாய்ப் பேச குரல்வளையை நான் எங்கே பெறுவேன்
நினைத்துப் பேசும் மூளையை எப்படி முளைக்கவைப்பேன்
காலம்காலமாய் கற்று வந்த மொழியுமில்லை
பயிற்சியாலும் பழக்கத்தாலும் உணவாலும்
வளர்ந்து வந்த உடலுமில்லை
காற்றுக்குக் குரலேது உங்கள் கேள்விக்குப் பதிலேது
புதிதாய்ப் பிறந்தாலும் பிறக்கவிருக்கும் புதிய
உறவுக்கே நான் சொந்தம்
புரியேன் உங்கள் சொந்தங்களை
ByeBye
மூன்று பத்திகளில் மூன்று நிலைகளைச்
பதிலளிநீக்குசொல்லிப்போனதை மிகவும் ரசித்தேன்
ஆழமாக அருமையான வித்தியாசமான
சிந்தனையுடன் கூடிய கவிதை மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
விளக்கத்திற்கு நன்றி...
பதிலளிநீக்கு//போதுமடா சாமியென போய்விட்ட என்னை, இறந்தவருடன் உரையாடவென அழைப்பதும்தான் ஏனோ!//
பதிலளிநீக்குஒருசிலரின் வயிற்றுப் பிழைப்புக்கான ஏமாற்று வேலையைத்தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
சிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பான படைப்பு. பாராட்டுக்கள்.
கவிதை மூன்றும்
பதிலளிநீக்குமுக்கனி
பொருளோ
தத்துவக் கனி.
நன்றி
கவிதை மூன்றும்
பதிலளிநீக்குமுக்கணி
பொருளோ
தத்துவக் கணி
ரசித்தேன்
வியந்தேன்
நன்றி
வடிவமற்ற காற்றுநானே
பதிலளிநீக்குபோதுமடா சாமியென போய்விட்ட என்னை
இறந்தவருடன் உரையாடவென அழைப்பதும்தான் ஏனோ!///நல்ல கேள்வி
அரூபமாகிப்போன
பதிலளிநீக்குஆகிருதி உயிரலையின்
ஆதங்க வார்த்தைகள்...
ஆங்கே நான் மறைந்தபோதும்..
ஆலிங்கனம் செய்கிறதே
அவிழ்ந்துவரும் உணர்வுகள்..
ஆணி அடித்து
ஆலமரத்தில் கட்டினாலும்..
ஆவி தான்
ஆட்களுடன் உறவில்லை இனி...
==========
பட்டினத்தாரின் நான்கு வரிகள்
உங்கள் எண்ணங்களை சிறகடிக்க வைத்திருக்கிறது...
எண்ணங்கள் விதையாகி..
உங்கள் தூரிகை வழிவந்த
பாமாலை விருட்சம்...
எங்கள் விழிகளுக்கு விருந்தாகியது...
அருமை அருமை சகோதரி...