• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 18 பிப்ரவரி, 2012

    இந்நிலைக்கு இடம் தந்தவர் யார்?


                   
    பலன் ஒன்று படி இறங்கி வந்ததனால், அபிராமி தன் மடியில் வந்த மகவைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டித் தன் தோளில் போட்டுச் சீராட்டி சப்பாணிப்பருவம், சாய்ந்தாடுபருவம், எனப் பருவந்தோறும் நாட்டுப்பாடல்கள் பாடி இயற்கையாய் அன்பையும் கலந்து வளர்த்த பிள்ளை அட்ஷயா, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை என
                  
                    மலர் பருவம் தளிர் பருவம்
                    மகிழ்ந்தின்பச் சுவை ததும்பும்
                    மாங்கனிப் பருவம் தேன் சுவைப்பருவம்
                    தித்திப்பாய் தெளிந்து நிற்கும் பருவம்
                            
                   வந்தடைந்தாள். கன்னிப்பருவத்தில் எத்தகைய பெண்ணாகிலும் ஒருவித களைகட்டியே காணப்படுவாள். இது இயற்கை. இறைவன் இனத்தை வளர்க்க இயற்றி வைத்த சூன்யம். காட்சிப்பொருளாகக் காலமெல்லாம் அவள் வாழத் தோற்றம் பெற்றதல்லவே வாழ்க்கை. ||மாங்கல்யம் தந்துநானே|| ஒலிக்க அவள் கழுத்திலே தொங்கி மார்பிலே தவழ மங்கலநாண் அணிந்து அடுத்த தலைமுறைக்கு வலிமை சேர்க்க வேண்டியதல்லவா அவள் வாழ்க்கை. 
                   
                      எனவே பருவமடைந்த பெண்ணைப் பலரும் அறிய பூப்புனிதநீராட்டுவிழா செய்யப் பெற்றோர் சித்தம் கொண்டனர். ஐரோப்பியநாட்டிலே தமிழர்கள் பூப்புனித நீராட்டுவிழா செய்வதென்றால், அழைப்பிதழ் தொடக்கம் அணிகலன் வரை தாய்நாட்டில் இருந்து கொண்டு வருவார்கள். அதுமட்டுமல்ல வாழைமரத்தை வாழைக்குலையுடன் இணைத்தே தாய்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து நட்டுவார்கள். பெண்ணைப் பெற்றவுடன் அவள் பூப்புனித நீராட்டு விழாவிற்கென்றே பணம் சேகரிக்கும் பணியில் தம்மை முழுதாக ஈடுபடுத்துவார்கள். பலருக்கும் தமது பெண்ணின் பூப்புனித நீராட்டு விழாவே சிறந்தவிழா என்று பெயர்பெற வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். விதவிதமான ஆடையில் விலைமதிக்கவொண்ணா படாடோபத்துடன் ஆடம்பரத்தை விரவவிட்டு விழாவைச் சிறப்பிப்பர். ஐரோப்பியர்கள் வியந்து நிற்கும் வண்ணம் விருந்தினரை அழைப்பார்கள். ஏனெனில் இவ்வாறு மண்டபம் நிறைந்த மக்களை ஐரோப்பியர்கள் மேடை நிகழ்வுகளில்தான் கண்டிருப்பார்கள். ஆனால், தமது குடும்ப விழாக்களுக்கு இப்படி அழைப்பது அவர்களுக்கு அதிசயமாகத் தெரிவது ஒன்றும் வியப்பில்லை. விருந்தினரை அழைப்பது மட்டுமன்றி உறவினர்களையும் ஸ்பொன்சர் செய்து தாயகத்திலிருந்து அழைப்பது வழக்கமாக இருந்தது. பெற்றோர் தமது பெற்றோர் உறவினர்களை சகோதரர்களை அவர்கள் ஆசீர்வாதம் பெறுவதற்கு அழைப்பார்கள். அரவிந்த் தம்பதியினர் இந்நடைமுறைக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. 

                அரவிந்த் தம்பதியினர் தமது ஏக புதல்வி அட்சயாவின் பூப்புனிதநீராட்டுவிழாவிற்கான ஆயத்தங்களைத் தடபுடலாக நடத்தத் திட்டமிட்டனர். விருந்தினரை இவ்விழாவிற்கு அழைப்பதன் நோக்கமே பெண் நல்லமுறையில் வாழவேண்டும் என்று வாழ்த்துகளை, வாழ்ந்த அநுபவம் பெற்றவர்களிடம் இருந்து பெறுவதற்காகவும், தமது மகிழ்ச்சியைப் பலருடன் இணைந்து பகிர்ந்து கொள்வதற்காகவும், எனது மகள் வயதுக்கு வந்துவிட்டாள். அதனால், ஆணைப் பெற்றோர்களே! அவதானமாக இருங்கள். எங்கள் வீட்டிலும் ஒரு பெண் இருக்கின்றாள் என உலகுக்கு அறிவிப்பதற்குமாகவே அமைகின்றது. 
                             
                       அரவிந்த் தனது தந்தையை தாய்நாட்டிலிருந்து வரவழைத்திருந்தார். தன் தந்தையை அழைத்திருந்த பெருமையில் சில கடமைகளை அவரிடமே ஒப்படைத்திருந்தார். அவரும் ஓடியாடி வேலைகளை செய்து கொண்டிருந்தார். 

                      விழாவிற்கான நாளும் நெருங்கியது. நல்வாழ்த்துச் சொல்லப் பலரும் பங்குபற்றினார்கள். மண்டபம் நிறைந்த விருந்தினர்கள். அழகான மண்டபம் அதில் அழகுத் தேவதையாய் பருவப் பெண்களெல்லாம் கண்டு பொறாமை கொள்ளும் அளவிற்கு பேரழகியாய் மண்டபத்து மேடையிலே வீற்றிருந்தாள் அட்சயா. சொர்க்கத்துத் தேவதைக்குத் தொடக்குக் கழிக்கும் வைபவம் நடந்தேறியது. புகைப்பட வீடியோ கலாசாரங்கள் அமர்க்களமாய் அமைந்தன. பிற்காலத்தில் பெற்றோரும் மற்றோரும் இந்நாளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கவென ஒப்பனை மாறாத பொலிவுடன் படங்கள் வீடியோக்கள் அவதானமாக எடுக்கப்பட்டது. விருந்தினர் உபசரிப்பு முற்றுப்பெற்று அன்பளிப்பு வரிசை நீண்டது. மெல்லமெல்ல வரிசை நீளம் குறைய மண்டபம் காலியாக அரவிந்த் குடும்பமும் வீடு திரும்பியது.

                      தன் மகளின் பூப்புனித நீராட்டுவிழாவைச் சிறப்புடன் நடத்திமுடித்த பெருமையுடன் அரவிந்தன் தம்பதியினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மாதமொன்று கழிந்தது. மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் தன் மகளுக்கு ஏற்படவில்லையென அபிராமி மனதில்  ஓர் ஏக்கம் எழுந்தது. ஆனால், இப்பருவத்தில் சில பெண்கள் 2 வருடங்களின் பின்னும் அடுத்த மாதவிடாய் காண்பார்கள் என அயலவர் பகர்ந்து நிற்க அபிராமியும் அமைதியானாள். மாதங்கள் ஒவ்வொன்றாய்க் கடந்து செல்ல அட்சயா வயிற்றைக் குமட்டி வாந்தி எடுக்கத் தொடங்கினாள்.  உடலில் வாட்டம் ஏற்பட்டது. உணவுகளைக் காணும் போது வெறுப்பு எற்பட்டது. பலரின் கண்ணும் என் பிள்ளைமேல் பட்டுவிட்டதே. வராதநோய் ஏதோ வந்துவிட்டது. என அங்கலாய்த்த தாய் அபிராமி, தன் மகளை வைத்தியரிடம் கொண்டு சென்றார். தகுந்த பரிசேதனையின் பின் தன் மகளின் வயிறு வாரிசொன்றைச் சுமக்கிறது என்னும் இடியொன்று அபிராமி காதுகளில் வந்து விழுந்தது. ஒடுங்கிப் போனாள் அவள். அசையாது பிரமை பிடித்தவள் போளானாள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பிள்ளையை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அப்பாவியாய் நின்ற அந்தப் பச்சைக் குழந்தை ஒரு குழந்தையை சுமக்கும் நிலை பெற்றது கண்டு துடித்துப் பேன பெற்றோர்கள், காரணம் வினவி காரண கர்த்தாவை அடையாளங் கண்டு பிடித்தனர். 

                                              

                 வயது செல்லச் செல்ல பகுத்தறிவு பண்பட்ட நிலையில் தொழிற்படும். இது மனிதப்பண்பு. ஆனால், இப்பண்பற்ற மிருகமாகும் மனிதர்கள் சமுதாயத்தில் துடிக்கத் துடிக்க உயிருடன் புதைகுழியில் புதைக்கப்பட வேண்டியவர்கள். இக்காலத்தில் 11,12 வயதிலேயே பெண்கள் பருவமடைகின்றனர். பார்க்கும்போது குழந்தைகள் என எண்ணத் தோன்றும் உள்ளம் வர வேண்டும். ஆனல், மிருகமாய் வாழும் கிழட்டு ஜென்மங்கள்; பண்பட்ட கலாசாரம் என்று சொல்லப்படுகின்ற எம்மினத்தில் வாழ்வது வெட்கப்பட வேண்டியது. தாயகத்தில் இருந்து விமானம் ஏறி வந்து தன் மகனின் பிஞ்சுக் குழந்தையைத் தொடுவதற்கு அந்த முற்றிய மரத்திற்கு எப்படி மனம் வந்தது? மௌனமாய் நாடு திரும்பி விட்டாலும்  தன் கேவலமான துரோகச் செயல் ஒர்நாள் வெளிப்படும் என ஏன் அந்த மிருகம் எண்ணவில்லை? 

                    உண்மை தெரிந்த பெற்றோர் துடித்துப் போனார்கள். தன் மகளின் பெண்மையைச் சீர்குழைத்த தன் தந்தையை நினைத்து அரவிந்த் ஆடிப்போய்விட்டார். அரவிந்த் எடுக்க வேண்டிய நடவடிக்கை யாதென வாசகர்களே! வந்து தீர்ப்பளியுங்கள்.

       மிருகமாய் வாழும் ஜென்மங்கள் என்னும் தலைப்பில் என்னால் எழுதப்பட்ட இக்கதை தினக்குரல் என்னும் பத்திரிகையில் 26.02.12அன்று பிரசுரிக்கப்பட்டது                                                                           

    17 கருத்துகள்:

    1. மனதைப் பிசைகின்றது. இனம் அறியாக் கோபம் மேலோங்குகிறது. மனிதனாகத்திரியும் அந்த மிருகத்தை அழிக்க மனம் துடிக்கிறது.

      பதிலளிநீக்கு
    2. உள்ளத்தில் உள்ளதைக் கொட்டிவிட்டீர்கள். கூடவே இருந்து குழிபறிக்கும் ஆசாமிகளை குத்தும் வார்த்தைகள் போதும் புழுங்கிச் சாவதற்கு

      பதிலளிநீக்கு
    3. வணக்கம். முதலில் அட்சயாவிடம் தீர விசாரிக்க வேண்டும். அட்சயாவுக்கு 12 வயது என்று வைத்துக்கொணடால் தகப்பனுக்கு குறைந்தது 40 வயது இருக்கும். அவரது தகப்பனுக்கு குறைந்தது 70 வயதுகள் தாண்டி இருக்கும். இந்த நிலையில் அவருக்கு உணர்வுகள் இருந்தாலும் கருத்தரிக்கும் வீதம் மிக மிகக் குறைவு. சரி இது உண்மையாக இருந்தால் வைத்தியரிடம் உண்மையைச் சொல்லி கருவைக் கலைத்துவிட்டு அட்சயாவை வாழவைப்பதே தகப்பனின கடமை என்று நான் கருதுகிறேன். இயக்கங்கள் ஈழத்தில் காட்டுமிராண்டிகளையே வளர்த்துவிட்டுச் சென்றிருக்கிறது. (கங்கைமகன்)

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நிச்சயமாக . தற்போது இவ்வாறான தவறுகள் பல நடந்துகொண்டுதான் இருக்கின்றன . அரும்பாடுபட்டு வள்ளுவரும் அவ்வையாரும் இன்னும் பல பெரியார்களும் வளர்த்தெடுத்த கலாசாரம் இன்று தலைகெட்டு நிற்கின்றது.

        நீக்கு
      2. ;( மிக நெருங்கிய உறவில், மனித உருவில் நடமாடும் மிருகங்களா?

        என்னால் இதை நம்பவோ ஜீரணிக்கவோ முடியவில்லை.

        பாவம், பாதிக்கப்பட்ட அந்தப்பெண் குழந்தை.

        நீக்கு
    4. அன்பினிய கெளரி,
      உங்களின் இப்பகிர்வு இதயத்தை சல்லடை போட்டுத் துளைத்து விட்டது. சமுதாயத்தின் வரம்புகளைக் கட்டிக் காக்க வேண்டிய வேலிகளே பயிரை மேய்கின்ற இந்நில்லைக்கு யார் காரணம்? என உள்ளம் தவிக்கிறது. பின்புல நாட்டின் அரசியல் சீர்கேடுகள், சமுதாய அழிவுகள் தான் இதற்குக் காரணம் என்று சொல்ல முடியாது. எந்தச் சமூகத்திலும் மனித உணர்வுகளைத் தொலைத்து விட்டு மனிதர் எனும் பெயரில் நடைபோடும் நெறி கெட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்விளம் மடந்தையின் வாழ்வைச் சீராக்கி அந்நிலைக்கு அவர் காரணமல்ல என்னும் உண்மையை அவருக்கு உணர்த்துவதே அப்பெற்றோரின் முன்னிற்கும் உடனடிக் கடமையாகும். தவறிழைத்தவருக்கு சட்டம் அழிக்கும் தண்டனையைத் தவறாமல் வாங்க்கிக் கொடுப்பதும் அவர்களது கடமையாகிறது.
      அன்புடன்
      சக்தி

      பதிலளிநீக்கு
    5. அந்த மிருகம் இன்னும் வாழ்வதை விட செத்துப் போவதே சரி

      பதிலளிநீக்கு
    6. காமத்தை அடக்கத் தெரியாதவர்கள் நாய்களுக்கு சமம். தங்களுக்கு பேர்த்தி பிறந்த மகிழ்ச்சியில் பறக்கிறார்களே, இதற்கா சீக் இவர்களெல்லாம் மனித ஜென்மங்களா? கிழட்டு ஜென்மமே உனக்கு எப்படி மனசு வந்தது.புலம் பெயர் தேசத்திலே கலாச்சாரம் கலாச்சாரம் என்று எவ்வளவு கஷ்ரப்பட்டு பிள்ளைகளை வளர்க்கிறார்கள். கிழட்டு ஜென்மமே அங்கிருந்து இங்கு வந்து சீரழித்து விட்டியே நீயெல்லாம் எதற்கு மனிதனாகப் பிறந்தாய்.

      பதிலளிநீக்கு
    7. கெளரி எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.தமது பேத்தியிடம் இப்படி நடந்து கொள்ள எந்த மனிதன் துணிவான்? எனக்கு வந்த கோபதிற்கு அளவேயில்லை.

      பதிலளிநீக்கு
    8. பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தாயின் பங்கும் பொறுப்பும் மிக மிக அதிகம் என்பதை அனைத்துத் தாய்மார்களும் உணர வேண்டும்.

      தவறுகள், எது எப்படி யாரால் நடந்து போனாலும் அதிகம் பாதிப்புக்கு ஆளாவது பெண்களே.

      சொந்த தந்தையோ, தாத்தாவோ, சகோதரனோ, மாமாவோ, மச்சானோ, நண்பனோ, உறவினரோ யாராக இருந்தாலும், ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளை கொஞ்சவோ, முத்தம் கொடுக்கவோ, கட்டிப்பிடிக்கவோ, தொட்டுப்பேசவோ, ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது.

      இதை ஒவ்வொரு தாயும் ஆரம்பத்திலிருந்தே தன் மகளுக்கு கண்டிப்புடன் சொல்லித்தர வேண்டும். தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். இதில் உள்ள நல்லது கெட்டதுகளை, மெதுவாக நாளடைவில் சொல்லிக்கொடுத்து விடவேண்டும்.

      இதில் எந்தவித தயவு தாட்சண்யத்திற்கே, எந்தத்தாயும் இடம் கொடுக்கக்கூடாது என்பேன்.

      பதிலளிநீக்கு
    9. இது உண்மைதானா?நம்ப முடியவில்லை,இப்படியுமா மனிதர்கள் இருக்கிறார்கள்? மகனை தலை குனியச் செய்த தந்தைக்கு தக்க தண்டனை வழங்கியே ஆக வேண்டும்

      பதிலளிநீக்கு
    10. படித்தவுடன் ஆடிப்போய்விட்டேன் சகோதரி..
      என்ன ஒரு கொடுமை..
      அந்தப் பிஞ்சுக் குழந்தையை எப்படி இந்த நிலைக்கு
      ஆளாக்க அந்த இதயமற்ற மனிதனுக்கு
      எண்ணம் உதித்தது..
      மிருகத்திற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது..
      காட்டில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் நாட்டில் இருக்கிறார்கள்..

      பதிலளிநீக்கு
    11. இதைப் படிக்கவே மனம் பதறுகிறது
      காட்டில் இருக்கவேண்டியவர்கள் நாட்டில்
      உலவிக் கொண்டிருக்கிறார்கள்
      மான்களையும் மயில்களையும் காக்க
      என்னசெய்யப் போகிறோம் ?
      மிக அழகான ஒரு பண்பாட்டு நிகழ்வாகச்
      சொல்லிக் கொண்டே வந்து இறுதியில்
      ஒரு அதிர்ச்சி தரும் விதமாக இதனைச் சொல்லிப் போனது
      கூடுதல் பாதிப்பை படிப்பவர்கள் மனதில்
      ஏற்படுத்திப் போகிறது
      பதிவின் நோக்கமும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்
      என்பதுதானே ?
      அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய பதிவு
      பகிர்வுக்கு நன்றி

      பதிலளிநீக்கு
    12. வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
      அன்புடன் vgk 24.02.2012

      பதிலளிநீக்கு
    13. இந்தக்கதையில் இடம்பெற்ற சம்பவம் உண்மையோ பொய்யோ என்பதற்கு அப்பால் நிஜமாகவே இதுபோன்ற பாலியல் வன்முறைகள் அல்லது பாலியல் துஸ்பிரயோகங்கள் நமது சமுதாயத்திலும் இடம்பெறுவது வேதனை தரும் யதார்த்தம். இதில் வேதனைக்குரிய முக்கிய விடயம் என்னவென்றால் இவ்வாறு செய்பவர்கள் பெரும்பாலும் அந்தப் பெண்பிள்ளையின் தூரத்து உறவினராக இருப்பார் அல்லது அவர்களது பெற்றோருடன் நெருங்கிப் பழகும் ஒரு நண்பராக இருப்பார். இதனால் இந்தவிடயத்தை தமது பெற்றோரிடம் சொல்லவும் பயந்து அந்தப்பிள்ளைகள் இந்தவிடயத்தை தமது மனதிற்குள்ளேயே வைத்து வேதனைப்படுகிறார்கள்.

      இளவயதுப்பிளைகளின் பெற்றோர்களே, இனியாவது உங்கள்து நண்பர்கள் உறவினர்கள் பற்றி சரியான கணிப்பீடுகள் செய்துகொள்ளுங்கள். சந்தேகத்திற்குரியவர்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். நட்புகள் உறவுகளைவிட உங்கள் குழந்தையின் நல்வாழ்வுதான் உங்களுக்கு முக்கியம். அதை மறந்துவிடாதீர்கள்.

      பதிலளிநீக்கு
    14. iwarana mirugangal niraiyawe ulana. pengalin palawenathai thanku sadhagama payanpaduthum kewalmana enap pirawigalum ullana. awargalin wedanaiyai payan paduthi thawaruku iluthu selum manase iladha pirawigal ulla ulagathilaye naam walginrom. enawe pengale enna than saidhalum mudiwil pengal than warutha pada wendum enbadhai jabagam waiungal

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...