• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

    பொறுமையின் கனிவு அங்கம் 3



                                                     
                      
     ரகு சிறுநீரகம் இரண்டும் பாதிக்குப்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தின. பழுதடைந்த சிறுநீரகத்தைத் தாங்கிய ரகுவின் உடலுக்கு மேலும் தாக்கம் ஏற்படாவண்ணம் வைத்தியம் துரிதமாக நடாத்தப்பட்டது என்பதுடன் முடிவடைந்த இரண்டாவது அங்கத்தைத் தொட்டுத் தொடர்கிறது இவ் அங்கம்......

                           
                                                                  அங்கம் 3


    கவிதா வாழ்வில் இணைந்ததனால், அவள் காலம் ரகுவைப் போட்டு ஆட்டுவதாய் பிறர் உரைக்கும் பழி அனைத்தும் கவிதா சுமந்தாள். தன் நெஞ்சில் சுமக்கும் ரகுவின் பாரத்துடன் இணைத்தே, தாதியாய், மனைவியாய் மட்டுமன்றி நோய்த் தாக்கம் கண்டு அதிகரிக்கும் ரகுவின் ஆத்திரத்திற்கும் அடிபணிந்து வாழும் அடக்கமானவளுமானாள். அதுமட்டுமன்றி இப்படி வடுச் சொற்களைத் தாங்க வேண்டிய பெண்ணாகவும் ஆயினாள். 

                    கவிதா நிலை இவ்வாறு இருக்க இரகுவின் நிலையோ பரிதாபத்திற்குரியதானது. இந்த சமூகம் இருக்கிறதே, வலி கொண்ட மனத்திற்கு ஆறுதல் கூற மனமில்லையானாலும் சூட்டுக்கோல் வைக்க மட்டும் தயங்காது.  கோடையதில் தாகம் கூடிநிற்க தாகம் தீரவெனத் தண்ணீர் உடற்குத் தந்துவிட்டால் கையது, காலது வீக்கம் கண்டு கழுத்தின் மேல் நீரளவு தாண்டி மூச்செடுக்கவொண்ணா நிலைகண்டு திக்குமுக்காடுவான் ரகு. கவிதா நெஞ்சில் சாய்ந்தபடி இரவிரவாய்க் கண்முழிப்பான். 

           வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு 
           பேரிகொண்டு நீர்திரண்டு பெய்ய வேண்டும் - அதுபோல்
           நீரையுண்டு தாகமின்றி நீநிலைக்க வேண்டுமென்றால்
           நீரழிவு நின்னுடலில் நேரவேண்டும்.
                         
                    நான் குறிப்பிட்டது நீரழிவு என்னும் நோயல்ல. சலமும் மலமும் வெளியேறாநிலையில் நீரின் அளவு கூடி நீருடன் எல்லாம் நிலைகலந்து விஷமளவு கூடி வாழ் காலத்தை முடித்துவிடும். ஒருநாள் ரகு மருத்துவமனையைத் தரிசிக்காவிட்டால் காவல் துறையினர் ரகு வீட்டைத் தரிசித்துவிடுவார்கள். தற்கொலை முயற்சி என்று கையுடன் கொண்டு சென்றுவிடுவர். நம்மைவிட நம் உடலில் ஐரோப்பியர் அதிக அக்கறை வைத்திருக்கின்றார்கள். எத்தனை விடயம் நம் உடலில் இருக்குதுடா சாமி.

           பிஞ்சு முகங்கள் இவர்கள் நெஞ்சைக் கவரும். வாஞ்சையுடன் அள்ளிக் கொள்ள சொந்தக் குழந்தை இல்லையெனும் வேதனை நெஞ்சில் புதைந்து கொள்ளும். அவர்கள் உறவினர் குழந்தைகளில் அன்பு காட்டினாலும் சொந்தக் குழந்தை போலாகுமா? உடலும் உள்ளமும் வேதனை கொண்டாலும் எங்கோ தூரத்து வெளிச்சம் இருவர் மனதில் மின்னிக் கொண்டுதான் இருக்கும். வனவாசம், அஞ்ஞாதவாசம் செய்த காவியநாயகர்போல் இந்த 5 வருட காலம் ரகு தம்பதியினர் வாழ்வில் துயர் குடி கொண்டுவிட்ட காலங்கலாயின. இடையில் மனமாற்றங்கள் தர உறவினர், நண்பர்கள் அறிவுரை இவர்கள் அறிவைக் கெடுக்கும். இவை தூறல்கள். இடையிடையே வந்து போய் நின்றுவிடும். 
    '' தம்பி நான் சொல்றதைக் கேளுங்கள். இந்த ஜேர்மன் காரர் இப்படித்தான் போட்டு இழுப்பார்கள். நல்லா பழுதாகினபின் கையை விரித்துவிடுவார்கள், இந்தியாக்குப் போங்கள். அங்கு உங்கள் காசுக்கு மலிவாக சிறுநீரகம் வாங்கலாம். அங்கு இப்போது சீறுநீரக மாற்று ஒப்பரேசன் நன்றாகச் செய்கின்றார்கள்'' இப்படிப் பலருடைய சம்பாஷணை ரகுவைக் குழப்பியது. ஆனால், '' சீச்சீ அங்கு போய் நோய்ப்பட்டிருக்கிற உடலுக்கு வேறு ஏதாவது தொற்று வருத்தங்களை வாங்கிக் கொண்டு வந்துவிடாதீர்கள். இப்படித்தான் ஒருவர் இந்தியாக்குப் போய் சிறுநீரகம் மாற்றி நன்றாகத்தான் இருந்தார். பிறகு ஏதோ தொற்று ஏற்பட்டு இறந்துவிட்டார். அதனால் பொறுத்ததும் பொறுத்தது இன்னும் கொஞ்சநாள்கள் பொறுத்துப் பாருங்கள். நல்லதே நடக்கும்'' இப்படிச்சிலர் வார்த்தைகள். அனைத்தும் மாறிமாறி இருவர் நெஞ்சிலும் அலைமோதிக் கொண்டிருந்தன

                 ஒருநாள் திடீரென வைத்தியசாலையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. உடனடியாக ரகு வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டும். கவிதா நெஞ்சிலே பயவுணர்வு ஒட்டிக் கொண்டது. இறுதியாகக் கொடுத்த இரத்தப்பரிசோதனையில் பிழையேதோ இருக்கின்றது என உறுதியாக எண்ணிக் கலங்கிப் போனார்கள்.  அவசரஅவசரமாக மருத்துவமனை அண்மித்தவர்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருந்தது. இவர்கள் வாழுகின்ற பகுதி மேற்காகக் காணப்பட வடக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள்( உதையுந்து ) விபத்தில் இறந்துபோன 21 வயது வாலிபன் ஒருவருடைய சிறுநீரகம் ரகுவின் உடலில் வந்து அமர்ந்து கொள்வதற்கு ஏங்கிக் கொண்டிருக்கின்றது. காலதாமதமானால் தன் உயிரை அதுவும் மாய்த்துக் கொள்ளும் என்னும் செய்தி கேட்டு இருவரும் புளகாங்கிதம் கொண்டனர். 

                     வசந்தம் இரகுவின் உலகில் துளிர்விட்டது. கண் இமைக்கும் முன் ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்த நிலையைத்தான் ''கொடுக்கும் கடவுள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுப்பார்'' என்பதோ. இரகுவின் உடலினுள் இணைத்த சிறுநீரகம் சிலமணி நேரத்துக்குள் ரகு உடலைத் தன் உடல் போல் கருதி உடனே தொழிற்படத் தொடங்கிவிட்டது. இதுவும் ஒரு அபூர்வம் இல்லையா? பொதுவாக சிறுநீரகம் பொருத்தப்பட்டால் குருதி பொருந்தினாலும் அச்சிறுநீரகம் சரியாக தொழிற்படுவதற்கே நாளாகும். ஆனால், உள்நுழைந்தேன் உன் உடல் என் உடலே. என் பணி தொடந்தேன். ஏற்றுக் கொள் உன் வசமே, என்று தன் பணியை அவ்வாலிபனின் சிறுநீரகம் ரகு உடலில் தொழிற்படத் தொடங்கிவிட்டது. 
      
                               ஜேர்மனிய உறுப்பு ஒரு தமிழனின் உடலில் தொடர் வாழ்வுக்குச் சொந்தமாகியது. எங்கோ மலையில் பிறந்த சந்தனம் மனிதர்கள் பூசிக்கொள்ள உதவவில்லையா? கடலில் தோன்றிய முத்து மனிதர் அணியும் மாலையாகவில்லையா? வடக்கே பிறந்த சிறுநீரகம் தெற்கே வாழும் ரகு உடலில் வாழமுடியாதா? ஒரு இழப்பு பிறிதொரு வரவுக்கே என்று மனம் பதித்த இரகு தம்பதியினரின் வாழ்வில் தேனருவி பாயத் தொடங்கியது. 10 மாதங்கள் கடக்கும் முன்னே கவிதாvவின் பொறுமையின் கனிவாய் பிஞ்சுக் குழந்தை ஒன்று இருவர் முகங்களையும் பார்த்துச் சிரித்தது. 

                பொறுமை கொண்டார் வாழ்வில் 
                 பொக்கிஷம் கிடைத்துவிடும்
                 தாய்போல் தாங்கும் நாட்டைச்
                 சேயாய்க் காக்க வேண்டும்
                 செய்நன்றி கொண்டே வாழ்வை 
                 வாழ வந்த நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் 
                 

          முற்றும்.

                 

    12 கருத்துகள்:

    1. தோழி சந்திர கௌரி ,
      உங்களுக்கு ஒரு இனிய ஆச்சர்யம் என்
      வலைப்பூவில் காத்திருக்கிறது.
      என் 'நட்புக்காக' இடுகை
      பார்க்கத் தவறாதீர்கள்.

      பதிலளிநீக்கு
    2. கெளரி இது கதையா? நிஜமா? எதுவாக இருந்தாலும் மனதிற்கு இதமான முடிவு.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. பொதுவாக என்னுடைய கதைகள் வாழ்வியல் இலக்கியங்கள் எல்லாவற்றிலும் நான் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற சூழல் நான் கேள்விப்பட்ட விடயங்கள் , என் மனதைத் தாக்கிய விடயங்கள் போன்றவையே இடம்பெறுகின்றன

        நீக்கு
    3. //எங்கோ மலையில் பிறந்த சந்தனம் மனிதர்கள் பூசிக்கொள்ள உதவவில்லையா? கடலில் தோன்றிய முத்து மனிதர் அணியும் மாலையாகவில்லையா? வடக்கே பிறந்த சிறுநீரகம் தெற்கே வாழும் ரகு உடலில் வாழமுடியாதா? ஒரு இழப்பு பிறிதொரு வரவுக்கே என்று மனம் பதித்த இரகு தம்பதியினரின் வாழ்வில் தேனருவி பாயத் தொடங்கியது. 10 மாதங்கள் கடக்கும் முன்னே கவிதா பொறுமையின் கனிவாய் பிஞ்சுக் குழந்தை ஒன்று இருவர் முகங்களையும் பார்த்துச் சிரித்தது.//

      ;)
      நல்லவிதமாக இந்தக்கதையை முடித்ததில் திருப்தி.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி சார். உங்கள் அளவுக்குக் கதை எழுத வராது

        நீக்கு
    4. அருமையான பதிவு.
      வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    5. நல்லவேளை தமிழனின் சிறுநீரகம் ஒன்றும்கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்துப் பொருத்தியிருந்தாலும் அது பொறாமையில் வேலை செய்திருக்காது. ஆண்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் மனைவிமாரைத் திட்டுவது தமிழர் சமுதாயத்தில் இருந்து ஒழியவேண்டும். ஒரு பிள்ளையில்லாத குடும்பத்தில் ஆணுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும் பெண்ணுக்கே மலடி என்ற பட்டம் சூட்டப்படுகிறது. நல்ல முடிவு. ரகுவை வாழவைத்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள். (கங்கைமகன்)

      பதிலளிநீக்கு
    6. நல்ல கவிதை ! முடிவு சுபமாக அமைந்ததில் சந்தோசம் ! கவிதையும் மிக அருமை ! நன்றி சகோதரி !

      பதிலளிநீக்கு
    7. பணிச்சுமை காரணமாக மூன்று பதிவுகளையும்
      இன்றுதான் சேர்ந்தார்ப்போல படிக்க முடிந்தது
      நாம் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய
      உடல் கூறு தகவல்களை ஒரு காவியமாக்கி
      அதனுள் சிறு நீரக தான குறித்த விஷயத்தையும்
      மிக் அழகாகச் சேர்த்து வழமைபோல
      தங்கள் அருமையான தமிழ் நடையில் சொல்லிப் போனவிதம்
      மனத்தை மிகவும் கவர்ந்தது
      தாங்கள் ஒவ்வொரு பதிவிலும் பல பயனுள்ள
      விஷயங்களை தந்து போகும் விதம் அருமை
      பிற பதிவர்களுக்கும் ஒரு நல்ல வழிகாட்டி
      தொடர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. வழமையாக என்னுடைய பதிவுகள் எதையுமே தவறாது விடாது பார்வை இட்டு பின்னூட்டம் இடும் உங்கள் பின்னூட்டம் இப்பதிவுகளுக்குக் கிடைக்கவில்லையே என்று நினைத்தேன். மிக்க நன்றி.

        நீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...