• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

    மூன்றெழுத்து


                           
             

    உருவாக உடலில் இடம் தந்த
      அன்னைக்கு மூன்றெழுத்து
    உதிரத்தைப் பாலாகப் பருகிடும் 
      பிள்ளைக்கு மூன்றெழுத்து
    குரலெடுத்து மொழிவடிக்கும் முதல்வார்த்தை
      அம்மா எனும்சொல் மூன்றெழுத்து
    அரவணைத்து வளர்த் தெடுக்கும் 
      அப்பாக்கும் மூன்றெழுத்து
    இணைந்தே நடத்தும் இல்லறத்தின் 
      அன்புக்கும் மூன்றெழுத்து 
    இனிதாக வளர்ந்துவர அறிவூட்டும்
      கல்விக்கும் மூன்றெழுத்து
    தென்றலாய் ஓவியமாய்க் கனிந்த – அந்தக்
      கன்னிக்ககு மூன்றெழுத்து – அவள் 
    கருத்தினிலே இடம் பிடிக்கும்
      காதலுக்கு மூன்றெழுத்து
    கணவனுடன் கச்சிதமாய் வாழ்ந்துவரும் 
      கற்புக்கு மூன்றெழுத்து – அவள்
    கூந்தலிலே காட்சி தரும்
      மலருக்கு மூன்றெழுத்து – அது
    நாசி நுழை இன்பம் தரும்
      மணத்திற்கு மூன்றெழுத்து
    மணம் தரும் மலரணிந்து செல்லும்
      கோயிலுக்கு மூன்றெழுத்து – அங்கு
    மன்றாடி மனமுருகி வேண்டிநிற்கும்
      அருளுக்கு மூன்றெழுத்து
    அருளோடு சிறப்பாய் வாழத் துணையாகும்
      தொழிலுக்கு மூன்றெழுத்து
    தொழிலால் வாழ்வால் சிறப்பால் கிடைக்கும்
      புகழுக்கு மூன்றெழுத்து
    புகழுடம்பு மண்ணில் மாள இறையடிநாடும்
      உயிருக்கு மூன்றெழுத்து
    உயிரற்று தீக்கு இரையாகும்  இந்தக்
      கட்டைக்கு மூன்றெழுத்து
    கட்டையைச் சுமந்து செல்லும் 
      பெட்டிக்கு மூன்றெழுத்து
    அது உருவாக உயிர் தந்த
      மரத்துக்கு மூன்றெழுத்து
    மரப்பெட்டியில் அடக்கமாகிய உயிரடையும்
      நிலத்துக்கு மூன்றெழுத்து
    பிறப்புத் தொடங்கி இறப்பு வரை – மனிதனுடன்
      தொடர்ந்து வரும் மூன்றெழுத்து

                         
                            






    10 கருத்துகள்:

    1. அன்னை, பிள்ளை, அம்மா, அப்பா, அன்பு, கன்னி, கல்வி, காதல், கற்பு, மலர், மணம், கோயில், அருள், தொழில், புகழ், உயிர், கட்டை, பெட்டி, மரம், நிலம் என

      மூன்றெழுத்தில் என் ’மூச்சு’ இருக்கு, அது முடிந்த பின்னாலும் ’பேச்சு’ இருக்கு ’கடமை’ என் கடமை என்ற ’MGR’ பாடிய பாடல் போல ’அருமை’ யானதோர் ’கவிதை’ தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    2. வாழ்வோடு இணைத்துக் கோர்த்து மூன்று எழுத்தை
      அழகாகக் 'கவிதை' தொடுத்து இருக்கிறீர்கள்.
      அருமை.

      பதிலளிநீக்கு
    3. மூன்றெழுத்தின் நிலைத்தன்மைகளை
      அழகாய் பகிந்திட்ட உங்கள்
      அறிவுக்கு மூன்றெழுத்து....

      பதிலளிநீக்கு
    4. உயிரின் இருப்பின் ஆதாரமான மூச்சிற்கும் மூன்றழுத்து.
      உயிர் மூச்சிலும் மேலான தமிழிற்கும் மூன்றெழுத்து.
      இந்த நல்ல பதிவுக்கும் மூன்றெழுத்து.
      பதிவை தந்ததற்கு உங்களுக்கு சொல்லும் நன்றிக்கும் மூன்றெழுத்து.

      பதிலளிநீக்கு
    5. அழகான கவிதை சகோதரி ! பாராட்டுக்கள் ! நன்றி !

      பதிலளிநீக்கு
    6. இத்தனை இனிமைகளையும் மிக அழகாய்
      இணைக்கும் கவிதைக்கும்
      அந்தக் கவிதை தரும் சுகத்திற்கும்
      மூன்றெழுத்து எனவும் சொல்லி இருக்கலாமோ ?
      மனம் கவர்ந்த பதிவு
      தொடர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    7. மூன்றெழுத்து குறித்த முத்தாய்ப்பான கவிதைவர்கள் அட்டகாசம்.

      நன்றி > இதுவும் மூன்றெழுத்து

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...