சொர்க்கம் ஒன்று கண்டேனே - வாழ்வில்
சொல்லவொண்ணா சுகம் ஒன்று கொண்டேனே – உன்
சொக்க வைக்கும் சுவர்க்கச் சிரிப்பினிலே – என்
துக்கமெல்லாம் துறந்தேனே
கலகலத்து வந்த குரலினிமை தனிலே
காதுமடல் கனிந்து வர வுணர்ந்தேனே – நீ
காலெடுத்து தத்தித் தத்தி வருகையிலே – சொர்க்கம்
காலடியில் கிடப்பதைக் கண்டேனே
பச்சைக்கிளியாய் நீ பகர்ந்த மொழி – என் செவியில்
பாலும் தேனும் கலந்தொலிக்கிறது
பத்துவிரலாலே பதம் பார்த்தவுன் உணவை – நான்
பகிர்ந்து உண்கையிலே
பஞ்சாமிர்தச் சுவையும் தோற்றுப் போகுதடி
குட்டை வண்ணச் சட்டையிலே
குதித்திரு கைதட்டி
கும்மாளம் இடுகையிலே – எனதுள்ளம்
குதிக்குதடி விண்ணோக்கி
கட்டி அணைக்கையிலே கள்ளி! நீ தந்த
கன்னத்து முத்தமதில்
என்னுள்ளம் கொள்ளை போகுதடி
உள்ளமெல்லாம் துள்ளல் கொள்ளுதடி
கழுவி மடித்து வைத்த ஆடைகளை – நீ
கசக்கி மீண்டும் நீரில் போட்டு
கன்னத்தில் கைவைத்து நின்றநிலையது
கண்டுள்ளம் கோபம் கொள்ளவில்ல
சிட்டாய்ப் பறக்குதடி – உன்னைச்
சுற்றிச் சிறகடிக்குதடி
கட்டித் தங்கமே! கரும்பே! தேனே!
உனை நான் பார்க்கையிலே
உனைப் போல் யானிருக்க
உள்ளம் ஏங்குதடி
உதிர்ந்து விட்ட காலமது
உருப்பெற்று வாராது
உள்ளம் தான் ஏங்கினாலும்.
15.01.2012 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது
அழகான கவிதை .
பதிலளிநீக்குநம் மழலைப் பருவத்தை நம் வாரிசுகள் மூலமாக
மீண்டும் replay செய்து பார்த்து மகிழலாம் .
//கட்டித் தங்கமே! கரும்பே! தேனே!
பதிலளிநீக்குஉனை நான் பார்க்கையிலே
உனைப் போல் யானிருக்க
உள்ளம் ஏங்குதடி //
அருமையாக எழுதியுள்ளீர்கள்.
முத்துக்கமலத்தில் வெளிவந்த
முத்தான பதிவுக்குப் பாராட்டுக்கள்.vgk
ஒவ்வொரு வரியையும் ரசித்தேன். பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! மிக்க நன்றி சகோதரி!
பதிலளிநீக்குவணக்கம் கௌரி.முதன் முறையாக உங்கள் பக்கம் வருகிறேன்.ஒரு தாயின் மனநிலையில் தன் மகளை ரசித்து ரசித்து எழுதிய வரிகள்.என்னையும் மீண்டும் அம்மா மடிக்கு அனுப்புகிறது.மனம் நிறைந்த பாராட்டுகள் கௌரி !
பதிலளிநீக்குஅழகு கவிதை.
பதிலளிநீக்குமிகவும் ரசித்தோம்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள் அம்மா.
அழகான இனிமையான பாசத்துளிகள் சொட்டும் கவிதை..
பதிலளிநீக்குஒவ்வொரு வரியும் அருமையாக இருக்கு. குழந்தைகளுடன் இருக்கும் பொழுது நாமும் குழந்தைகளாக அகிவிடுகிறோம்.
பதிலளிநீக்குSIMPLY BEAUTIFUL.VERY NICE.
பதிலளிநீக்குSIMPLY BEAUTIFUL.VERY NICE.
பதிலளிநீக்குமழலையில் மனம் லயித்து வந்த வரிகள் அருமை
பதிலளிநீக்குகுழந்தைப் பருவத்தை கடந்துதான்
பதிலளிநீக்குஅனைவரும் வந்திருப்போம் என்றாலும்
அதன் மேன்மையை அந்த வயதில்
அறிந்து கொள்ள இயலாது
வளர்ந்த பின்புதான் அனுபவிக்க முடியுமாறு
செய்துள்ள இயற்கையின் சாகசத்தை எண்ணி
வியந்து போனேன்
அப்படி அனுபவிப்பதைக் கூட எத்தனைபேரால்
அனைவரும் ரசிக்கும்படி இத்தனை அழகாகச்
சொல்லிப் போக முடியும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 2
பதிலளிநீக்குஇலகு தமிழில் இனிய கவிதை. குழந்தைகளை ரொம்பவும் நேசிப்பவர் என்பது புரியுது. உங்க குழந்தைகள் கொடுத்துவைத்தவர்கள்.
பதிலளிநீக்குஸ்ரவாணி சொன்னது…
பதிலளிநீக்குஆனால் அவர்கள் எங்களை விடப் புத்திசாலிகளாக இருக்கின்றதுவே புதுமை. வரவுக்கு மிக்க நன்றி
வணக்கம்! உங்களது கவிதை வரிகளை எனது வலைப் பதிவு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரியப் படுத்தவும். நன்றி!
பதிலளிநீக்கு