• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 4 ஜனவரி, 2012

    நெற்றிக்குத் திருநீறு, சந்தனம்; அழகுச்சாதனமா? அவசிய சாதனமா?


     இந்துமதகாரியங்களின் உட்கிடக்கை
                                                    
     இந்துசமயச் சின்னங்களாகக் கருதப்படும் விபூதி அல்லது திருநீறு, சந்தனம் போன்றவற்றை அணிவதன் அவசியம் தான் யாதோ? அவை அழகுசாதனமா? அவசிய சாதனமா? வினாவுக்கு விடை தேடி அங்கலாயத்தது மூளை. அவசிய காரணம் அறிந்ததனால், குனிந்தது பேனா. 
                               
                            பூமியில் பிறப்பெடுத்த உடல் என்றோ ஓர் நாள் எரிக்குச் சாம்பலாகும். ஞானத்தீயில் உடல் எரிந்த பின் எஞ்சுவது சிவதத்துவமே என்னும் கருத்தை வெளிப்படுத்தி தீருநீறு நெற்றியில் இடப்படுகின்றது. இது ஆரம்பப் பாடசாலையிலிருந்து நான் கற்றறிந்த விடயமாக இருந்தது. ஆனால், என்றோ ஒரு நாள் அழியவிருக்கும் உடலுக்கு வாழும் போதே அச்சுறுத்தல் தந்து கொண்டிருத்தல் முறையோ! மனம் தானே வாழ்வு. இந்த மனத்தை நாளும் அச்சுறுத்தலால் நலம் என் யாம் பெறுவோம். எனவே அறியாத பருவத்தில் அச்சுறுத்தி அளிக்கப்பட்ட பாடத்தை விடப் பாரதூரமான காரணம் யாதோ இருக்கின்றது என்பதை ஆராய மனம் விழைந்தது.  

                                                             

                            
                         அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை  உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். 
    இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. 
                             
                        இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள். 
            
                        தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.       
                          

                     இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள   frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது. சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும்  Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த  frontal cortex  சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!  

                                                     
            
               நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. 

                         இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது. 
            




    18 கருத்துகள்:

    1. மிக மிக அருமையான வழிகாட்டல் பதிவு ! வெளியிட்டமைக்கு மிக்க நன்றி!
      என்னைப் பொறுத்த வரையில்
      ஆன்மிகம் என்பது அறிவியல் மட்டுமே .
      அனைத்தும் நம் நன்மைக்கு , ஆரோக்கியத்திற்கு
      கூறப்பட்ட வழிமுறைகள். உம் : துளசி தீர்த்தம் , ஹோமங்கள் , வேப்பிலை
      பழங்காலத்தில் அறிவியல் இருந்தது .ஆனால் என்ன காரணத்தினாலோ
      மறைக்கப்பட்டதாலும் , கால ஓட்டத்தில் சில திரிந்ததாலும்
      ஏற்பட்ட குழப்பத்தில் நல்லவைகள் எல்லாம்
      மூடநம்பிக்கைகள் என்ற முத்திரை குத்தப்பட்டு விட்டன.
      எனவே ஆகினைச் சக்கரத்தை சீராக வைக்க உதவும் இந்த சாதனங்கள் எல்லாம்
      ஓர் அழகான , அவசியமான ஆரோக்கிய சாதனங்கள்.

      பதிலளிநீக்கு
    2. நன்றி ஐயா, எனக்கு புரியுதுங்க. ஆனா இந்த மதவெறியர்களுக்கு புரிய மாட்டேங்குதுங்க. இந்து மதம் மதமல்ல. அறிவியல்.பல எதிர்ப்புகளையும் மீறி நான் இந்து மதத்தை பின்பற்றுகிறேன். மனிசியாய் வாழ்கிறேன். வணக்கம்

      பதிலளிநீக்கு
    3. உங்களைப் போன்று இவ்வாறான விடயங்களை ஆழமாக ஆராய்பவர்கள் விரும்புவர்கள் இருக்கும் வரை அறிவுப் பசியும் தேடல் பசியும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். என்ன இப்படி வெளியிடும் பொது சிலர் எனது கருத்தை நிறுவுவதற்கு இவ்வாறாக எழுதுவதாகக் கருதுகின்றார்கள் . ஆனால் உண்மை என்ன நான் அறிகின்ற தெரிந்து கொண்ட விடயங்களை தெரியப்படுத்துவதுடன் எனக்குள்ளேயே கேள்விகள் எழுப்பி தெளிவை ஏற்படுத்துகின்றேன். முடிவை வெளிவிடுகின்றேன். காரணம் இல்லாமல் எதுவுமே நடை பெற்றிருக்க மாட்டாது என்பதே எனது கருத்து. இங்கு சில நடை முறைகள் நடைபெறுகின்றன . பூப்புனித நீராட்டு விழாக்களில் வேப்பிலைக்குப் பதிலாக ரோஜா இலையைப் பயன்படுத்துகின்றார்கள். கவலையாக இருந்தது. கேட்டால் இல்லாத போது வீடியோக்கு தெரிவதற்காகப்
      பயன்படுத்துவதாகக் கூறினார்கள் . இப்படியும் காரணங்கள் உண்டு . அதானாலேதான் எமது மூளைக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பது. உங்கள் ஆழமான பார்வைக்கும் மிக்க நன்றி. நீங்கள் அறிந்தவற்றையும் தெரியப் படுத்துங்கள் அறிவதற்கு ஆவலாக இருக்கின்றேன்.

      பதிலளிநீக்கு
    4. பெயரில்லா சொன்னது…

      சரியாகச் சொன்னீர்கள். தற்போதைய நாட்களைவிட அதி அறிவியல் அறிவு பெற்ற மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். என்பது உண்மையே. ஆனால் அதைப் புரியாது ஏன் பலர் வாழ்கின்றார்கள் என்பதுதான் கேள்விகுறி

      பதிலளிநீக்கு
    5. சிவ சின்னத்தை பற்றிய அருமையான விளக்கம்

      பதிலளிநீக்கு
    6. அருமையான விளக்கம். நெற்றிப் பொட்டு என்பது தியானத்தின் 6வது இடம். அதில்தான் இறைவன் ஆட்சி நடக்கிறது என்று ஆன்மீகம் கூறுகின்றது. இறைவனுக்கு நெற்றிக்கண் அந்த இடத்தில்தான் அமைந்திருக்கிறது. அந்த இடத்தில் பொட்டு அணிந்தவர்களை மற்றவர்களால் தோற்கடிக்க முடியாது. அதனால்தான் J.J பொன்னம்பலம் அவர்கள் வழக்காடு மன்றங்களுக்கு நெற்றியில் பொட்டிட்டுச் சென்றார்; வென்றார். நெற்றிப் பொட்டில் காதலன் காதலி; குழந்தை: பெரியவர்கள்; தாய்; தந்தை; சகோதரர்கள்; உறறவினர்கள் முத்தமிடும்போது ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு உணர்வுகள் ஏற்படுகின்றன. அனுபவித்துப்பாருங்கள் உண்மை விளங்கும். நன்றி.(கங்கைமகன்))

      பதிலளிநீக்கு
    7. மீண்டும் தவறான தகவலை தருகிறீர்கள். விபூதி அல்லது சந்தனம் பூசாதவர்கள் நோயோடு வாழ்கிறார்களா? அல்லது நோயின்றி வாழ்கிறார்களா? அவனும் சக மனிதனை போல் கால நேரத்திற்கு தகுந்தாற் போல் நோயால் பாதிக்கப்படுகிறான். இப்படி சொல்லும் இந்துக்கள் தலையில் வலியென்றால் CT. MRI பார்க்காமல் விபூதி பூசிக் கொண்டா இருக்கிறார்கள்.

      இந்த மதவாதிகள் இதிலும் மக்களை பிரித்தார்கள். மேல் நோக்கி பூசினால் இன்ன பிரிவு, சாதி, இடமிருந்து வலம் பூசினால் இன்ன இனம்,

      ஏன் பல வண்ணங்களில் இடும் நாமத்தை விட்டு விட்டீர்கள். அதற்கு விஞ்ஞானத்தில் விளக்கம் இல்லையா?

      அருமையான பொய் சொல்லி மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக (அறிவியலால் நல்லது என்று சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்) மதத்தின் மூலம் சொல்லியாகி விட்டது.

      ஆனால் உண்மை என்னவென்றால் அறிவியில் கண்டுபிடிப்புகளை பொய் நடக்காது என்று மதவாதிகள் அன்று முதல் மறுத்தே வந்திருக்கிறார்கள்.

      பதிலளிநீக்கு
    8. நிறைய விடயங்களுடன் வித்தியாசமான கோணத்தில் உங்கள் தேடுதல் அமைந்திருக்கிறது.

      பதிலளிநீக்கு
    9. அ. வேல்முருகன் சொன்னது…//

      நான் இவ்வளவும் தேடிச் சிந்தித்து எழுதிய போது உங்களுக்கு எழுந்த இவ்வாறான சந்தேகங்கள் எனக்கும் வராமலா இருந்திருக்கும். பூமியிலே ஆராய்ச்சி என்ற போர்வையில் எத்தனையோ தேவையற்ற இரசாயாணக் கலவைகள் கலந்திருக்கின்றன. நாம் உண்ணுகின்ற உணவிலும் எத்தனை இரசாயணப் பொருள்கள் கலந்திருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் வாழுகின்ற மக்கள் தற்காலத்தில் யார் மருந்து மாத்திரை இல்லாது வாழ்கின்றார்கள். அவற்றுடன் இயற்கையான பொருள்களைப் பாவனை செய்வதன் மூலம் முழுப்பலனும் கிடைப்பதில்லை. ஏன் எந்தவித Test உம் எடுக்காமல் யோகிகள் சித்தர்கள் நீணடகாலம் வாழவில்லையா? அதற்கான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கின்றனவே. நீங்கள் ஏன் இதற்குள் மதத்தைப் பற்றிச் சிந்திக்கின்றீர்கள். அதற்குள் இருக்கும் அறிவியலை மட்டும் எடுத்து நோக்குங்களேன். நான் கூட மதவாதி அல்ல. ஆனால், பலவற்றுள் மறைந்திருக்கின்ற உண்மையை நோக்குகின்றேன். கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று காட்டுகின்றேன். மதவெறியர்களை வெறுக்கின்றேன். முற்கால அறிவியலை அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். இதில் எந்தவித தவறும் இருப்பதாக நான் உணரவில்லை.

      பதிலளிநீக்கு
    10. தங்கள் பதிவும் சரி
      மறுப்புக்கான பதிலும் சரி
      வெகு தெளிவாகவும் தீர்க்கமாகவும் உள்ளது
      அனைத்தையும் மறுப்பதற்கு
      அதிகம் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை
      அடித்து நொறுக்க எந்த சாதுர்யமும் தேவையில்லை
      படைப்பதற்கும் பாதுகாத்தலுக்கும்
      பொறுப்பும் பொறுமையும் அவசியம் வேண்டியதாகஇருக்கிறது
      மனம் கவர்ந்த பதிவு
      தொட்ர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    11. நன்றி ரமணி அவர்களே.சரியாகச் சொன்னீர்கள். சொல்வதைப்பர்றிக் கொஞ்சம் உள்வாங்க வேண்டும் இல்லையா

      பதிலளிநீக்கு
    12. திருநீர் அல்லது சந்தனம் பூசுவதில் எங்கே அறிவியல் இருக்கிறது.

      தனிப்பட்ட முறையில் நான் இட்டுக் கொள்கிறேன் என்றால் எனக்கு அதில் ஒன்றும் கருத்து வேறுபாடு இல்லை. அது உங்கள் சுதந்திரம். அப்படி இடுவதற்கு அறிவியல் அடிப்படை காரண்ம் என்றால் ஏற்றுக் கொள்வதற்கு பொத்தாம் பொதுவாக அதே அறிவியல் இடம் கொடுக்க வில்லை.

      எல்லாவற்றையும் மறுக்க வேண்டும் என்பதல்ல. மறுக்கும் போதுதான் மறுப்பவன் ஆதாரத்தோடு மறுக்க வேண்டும். ஆனால் உங்களை போன்றவர்கள் எந்தவித ஆதாரமும் இன்றி பொத்தாம் பொதுவாக பதில் சொல்வீர்கள்.

      உதாரணத்திற்கு சந்தனம் பூசுவதால் ஞாபக சக்தி கூடும் எனில் அனைத்து மாணவர்களும் அல்லவா சந்தனம் பூசிக் கொண்டு திரிய வேண்டும். எத்தனை பேர் சந்தனம் பூசிக் கொள்கிறார்கள்.

      வெயில் காலங்களில் மொட்டை போட்டுக் கொள்பவர்கள் சந்தனம் பூசிக் கொள்வதை பார்த்திருக்கிறேன் அவர்கள் தாங்கள் கூறியதை போல் குளிர்சிக்காக பூசிக் கொள்வதாகதான் கூறுகின்றனர். அதுவும் சிலமணி துளிகள். ஞாபக வளர்ச்சிக்கு உதவும் என்றும் யாரும் கூறியதில்லை.

      முற்கால அறிவியலை அறிந்து கொள்ளலாம் தவறில்லை. ஆனால் அறிவியல் என்பது நிலையானது (static) அல்ல. மாறிக் கொண்டே இருக்க கூடியது. சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் நீங்கள் கூறிய ரசயானங்கள் இல்லை. ரசயானங்கள் இல்லாத உலகம் ரம்மியமானதுதான்.

      அறிவியலில் நீங்கள் சொல்வது சாத்தியம் என்றால், அன்டார்டிக்காவில் இருப்பவனும் அணிந்து கொள்வான் திருநீர். கொலவெறி பாடல்போல் உலகம் முழுக்க அவனவன் மதவேறுபாடின்றி திருநீறு அணிந்து செல்வான்.

      சரி அதை விடுங்கள், மனித மூளையை இத்தனை பாகங்களாக பிரித்து இது இதற்கு இன்ன பயன் என்று எந்த முனி அ சித்தர் எந்த ஆண்டு கண்டு பிடித்து சொன்னார் சொல்லுங்கள்

      கலிலீயோ காலத்தில் விஞ்ஞானத்திற்கு என்ன கதி, பாதிரிகள் மக்களை ஆண்ட காலம், பிளேக் வந்து மக்கள் மடிந்த போது பரமபிதா கூட எட்டி பார்க்க வில்லை.

      மக்கள்தான் நோயிடமிருந்து எட்டியிருக்க ஊரையே காலி செய்து கொண்டு சென்றனர்.

      பரமபிதா ஒரு குறியீடு அவ்வளவே

      பதிலளிநீக்கு
    13. இந்தவிடயத்தில் கரிசனை எடுத்து இது பற்றிய சிந்தனையை எனக்குத் தருவதற்கு முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். சிறுவயதில் இருந்து திருநீறு அறிவதன் காரணம் என்ன என்பது தெரியாமலே அணிந்தோம். இப்போது அதன் உண்மைக் காரணம் அறிந்து அதனைப் பலருக்குத் தெரியப்படுத்தாமல் இருந்தால் எப்படி உலகம் முழுவது மக்கள் திருநீறு அணிந்து செல்ல முடியும். மதத்தின் பெயரால் பல மறைக்கப்பட்டுவிட்டது. இவ்வாறான விடயங்கள் வெளியிடப்படாவிட்டால், எமது தமிழுக்கு வந்தநிலைதான் அனைத்திற்கும் வரும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன் தோன்றியதாக நாம் சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ் மொழி சில இடங்களில் மட்டும் பேசப்பட அதன்பின் உருவாக்கப்பட்ட ஆங்கிலம் உலகம் முழுவதையும் ஆண்டு கொண்டிருக்கும் நிலைதான் ஏற்படும். இதைவிட இந்தியநாட்டிலே ஆரம்பித்த யோகாக்கலையை Pடையவநளஇ டீழனலடியடயnஉநஇ என்று கூறி ஐரோப்பியர்கள் ஆங்கிலப் பாடல்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பழக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதில் நாமும் போய்ப் பழகுகின்றோம். அவர்கள் யோகக்கலைக்கு உரிமை கொண்டாடுகின்றார்கள். இவ்வாறுதான் எத்தனையோ உண்மைகள் மதத்தின் பெயரால் மறைக்கப்பட்டுள்ளன. இவற்றை வெளிக்கொண்டுவரும் நிலையை மறுப்பதனால், நமது மதிப்புத்தான் வெளிநாட்டவர்களிடம் குறைகின்றது.
      5000 ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் கண்டுபிடித்த யோகக்கலையில் எமது உடல் உறுப்புக்கள் பற்றி அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதில் உடல்உறுப்புக்கள் தண்டுவடம், யோகசக்கரங்கள், சுழுமுனைநாடி போன்ற பல சொற்பதங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், விஞ்ஞானிகள்தான் மூளையின் பாகங்களைக் கண்டுபிடித்தார்கள் என்று கூறமுடியாது. அதற்கு முன்னமே உடல் உறுப்புக்கள் பற்றி யோகப் பெயர்களில் கூறப்பட்டுள்ளது.

      பதிலளிநீக்கு
    14. உங்கள் எண்ணம போல் இனிமேல் நானும் திருநீர் வைத்துக்கொள்ள ஆசை படுகிறேன் .

      பதிலளிநீக்கு
    15. மிக அருமையான கருத்துக்கள் அழகான விளக்கம். பல விஷயங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக பின்பற்றப்பட்டாலும் அவை சரியாக சொல்லப்படாததாலும், பதிவு செய்யப்படாததாலும் இளைஞர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது என்பதுதான் உண்மை நிலை.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...