• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 7 ஜனவரி, 2012

    பிள்ளைப்பிராயத்திலே


           

       என்னுடைய பிள்ளையென எச்சொல்லும் 
       எடுத்தெறிந்து பேசாதீர்கள் - அச்சொல்
       உள்ளமதில் போய்விழுந்து 
    கல்லெனத் திரும்பவரும்
       பல்லுடைந்த போகாதீர்கள், 
    சொல்லிழந்து சொதப்பாதீர்கள்.

    தொலைபேசி அலறல் கேட்டு ஓடிப்போய் அழைப்பை ஏற்றாள், செல்வி. இது வழமை. தாயாரிடம் தொலைபேசி அகப்பட்டால், தான் தனித்து விடுவேன் என்னும் அங்கலாய்ப்பாகவும் இருக்கலாம். பேசும் பகுதியைக் கையால் மறைத்தபடி ''அம்மா! பிரான்சிஸ்கா விளையாட வரட்டாம். போகட்டா? ''சரிசரி,'' திரும்பவும் கேட்டாள். ''எத்தனை மணிக்கு?, தாயும் 3 மணிக்கு என்று விடையளித்தாள். பிரான்சிஸ்காவிடம் சம்மதம் தெரிவித்து வந்த மகளிடம். ''போவதற்கு முன்னமே ஆக்கம் எழுதி கவிதையும் எழுதிவிட்டு வயலினும் பயிற்சி செய்துவிட்டுத்தான் போக வேண்டும் கட்டுப்பாடு போடப்பட்டுவிட்டது. முனைப்புடன் ஓடிஓடி வேலை செய்தாள். ஆனால் இடையிடையே தாயாரின் கட்டுப்பாடு மீறி வேறுவிடயங்களும் பார்க்கத் தொடங்கிவிட்டாள். நேரம் வந்துவிட்டது. ஆனால், தாயாரின் உத்தரவு பிழைத்துவிட்டது. ''அம்மா வந்து கவிதை எழுதுகின்றேன்'' ஆனால் தாயாரோ ''சொன்னால் சொன்னதுதான். எழுதிவிட்டுப் போகலாம்'' ''அம்மா! 3 மணிக்கு வருவதாகச் சொன்னேனே'' ''குறிக்கப்பட்ட நேரத்திற்குப் போக வேண்டுமென்ற அவசியம் இல்லை'' ''நீங்கள் மட்டும் போன கிழமை தமிழ் நிகழ்ச்சிக்கு 3 மணிக்கென்றால் 3 மணிக்கு நிற்கின்றீர்கள்தானே. நானும் அப்படித்தான் நேரம் கடைப்பிடிக்க வேண்டும் அம்மா'' திரும்ப வந்து விழுகின்றது அடி. சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டிவிட்டது, அவ்வார்த்தை.  ''நீ சொல்வது சரிதான். ஆனாலும் நான் எனது வேலைகளை போவதற்குள் முடித்து விடுவேன்''அம்மா... வடை செய்துமுடியவில்லையென்று மீதியை வைத்துவிட்டுத்தானே போனீர்கள். அதேபோலவே நானும் வந்து மீதியைச் செய்யலாம்தானே? இடையில் கட்டளை மீறியது சமாளிக்கப்படுகின்றது. உணர்கின்றோம். ஆனாலும், சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. இறுக்கம் இப்போது தளர்கின்றது. விட்டுப்பிடித்து விடயத்தைக் கையாளலாமா? சிந்திக்கத் தொடங்கினாள், சுதா.
                
    இதுவே சம்பவம். பொருத்தமான இடத்தில் சூத்திரத்தைப் பயன்படுத்தி விடை காண்பது போலவே வார்த்தைகளைத் தேக்கி வைத்துப் பொருத்தமான நேரத்தில் பயன்படுத்த வல்லவர்கள் எமது வளர்பயிர்கள். பேச்சு சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இப்படி எத்தனையோ கேள்விகள் எமக்குள்ளே புதையுண்டு போயின. செய்வது சரியென்று நாம் உணராத பருவத்திலே உணராமலேயே வாய்மூடி மௌனிகளானோம். ஆனால், இன்றைய சமுதாயத்தினர் மனதில் பட்டதைச் சட்டெனப் பேசி தம்மைத் தெளிவுபடுத்தக் கூடிய திறமைமிக்கவர்கள். எனவே அதற்கேற்றதுபோல் காலசூழ்நிலைக்கேற்ப பிள்ளைப்பிராயத்திலே அவர்கள் மனநிலை உணர்ந்தவர்களாய் சந்தர்ப்பத்திற்கேற்ப வார்த்தைகளைப் பிரயோகப்படுத்துவதன் மூலம் நிலமையைச் சமாளிக்கும் வல்லமையை நாம் வளர்த்துக்கொள்ளல் அவசியமாகின்றது.

                             

    10 கருத்துகள்:

    1. பொருத்தமான இடத்தில் சூத்திரத்தைப் பயன்படுத்தி விடை காண்பது போலவே வார்த்தைகளைத் தேக்கி வைத்துப் பொருத்தமான நேரத்தில் பயன்படுத்த வல்லவர்கள் எமது வளர்பயிர்கள்.

      மனதில் நிறைந்த ஆக்கம்..

      வளர்பயிர்களின் வளப்பமான அறிவைக்கண்டு வியக்காத நாளில்லை..

      பதிலளிநீக்கு
    2. என்னுடைய பிள்ளையென எச்சொல்லும்
      எடுத்தெறிந்து பேசாதீர்கள் - அச்சொல்
      உள்ளமதில் போய்விழுந்து
      கல்லெனத் திரும்பவரும்
      பல்லுடைந்த போகாதீர்கள்,
      சொல்லிழந்து சொதப்பாதீர்கள்.

      பொன்னெழுத்துகளில்
      பொறிக்கவேண்டிய அனுபவ வரிகள்..

      பதிலளிநீக்கு
    3. சரியாகச் சொன்னீர்கள் சகோதரி,
      என்னுடைய பிள்ளைப் பிராயத்தில் எனக்குள் பதுக்கி வைத்த
      எத்தனையோ விடை தெரியா வினாக்கள் ஆயிரம்.
      அதன் விடைகான நாம் எத்தனித்த தருணங்கள் ஆயிரம்.
      இன்றோ அப்படியில்லை குழந்தைகளின் வினாச் சரங்களுக்கு
      நமக்கு விடை தெரிவது மிகக் குறைந்த சாத்தியமே..
      பொருளுணரா விட்டாலும் அதன் பொருள் அறியத் துடிக்கும்
      இளம் பயிர்களை எண்ணி எண்ணி வியக்கும் தருணங்கள் ஆயிரம்.

      நல விதைகளை விதைத்துவிட்டோம் அதை சரியான முறையில் வளர்விப்பதும்
      நம் கடமையே.. அங்கு விளையும் கேள்வி சரங்களுக்கான பதில்களை
      நன் முறையில் நடத்திச் சென்றால்..
      வரும் காலம்
      பொற்காலமே.

      அருமையான பொருள் பொதிந்த பதிவு சகோதரி.

      பதிலளிநீக்கு
    4. கிழக்கு மாகாண வலைப்பதிவர்கள் எழுத்தாளர்களுக்கிடையிலான சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது..

      மேலதிக விபரங்களுக்கு

      http://shanthru.blogspot.com/2012/01/blog-post_09.html

      பதிலளிநீக்கு
    5. இராஜராஜேஸ்வரி சொன்னது…//

      உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

      பதிலளிநீக்கு
    6. மகேந்திரன் சொன்னது…

      இதுதான் பரிணாம வளர்ச்சியும். எம்மோடு இணைந்தே பிள்ளைகள் வளர்கின்றார்கள். ஆனால் எம்மை அறியாமலே அவர்கள் அறிவு வளர்ச்சி பிரமிக்கத் தக்கதாக இருக்கின்றது

      பதிலளிநீக்கு
    7. உங்கள் கட்டுரையில் பல கோட்கள் டைரியில் எழுதி வைக்கத்தக்கதாய் இருக்கு.. நல்ல அலசல்

      பதிலளிநீக்கு
    8. சி.பி.செந்தில்குமார் சொன்னது…//

      நிச்சயமாக மூளை சிலவேளை கொட்டை விட்டு விடுகின்றது டையரி என்றால் திருப்பிப் பார்க்கக் கூடியதாக இருக்கும் .

      பதிலளிநீக்கு
    9. நல்ல கருத்தை முன்வைத்திருக்கிறியள் கௌசி. பிள்ளைகளை புரிந்துகொண்டு சரியே வளர்ப்பதற்கு பெற்றோர் தம்மை அறிவியல்ரீதியாக தயார்படுத்திக்கொள்ளவேண்டும். உளவியல்ரீதியான, பரந்துபட்ட அறிவு குறைவுடைய பெற்றோரால் பிள்ளைகளை பூரணமாக புரிந்துகொண்டு சரியாக வளர்ப்பது சிரமம்.

      பதிலளிநீக்கு
    10. நாம் உணராத பருவத்திலே உணராமலேயே வாய்மூடி மௌனிகளானோம். ஆனால், இன்றைய சமுதாயத்தினர் மனதில் பட்டதைச் சட்டெனப் பேசி தம்மைத் தெளிவுபடுத்தக் கூடிய திறமைமிக்கவர்கள்.

      மிகச் சரியான கருத்து
      முன்பு போல் நாம் இருக்கச் சாத்தியமில்லை
      முதலில் நாம்தான் மாறவேண்டும்
      இன்றைய சூழலில் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியதை
      அருமையாக பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
      இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
      tha.ma 3

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...