• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 18 நவம்பர், 2011

    மழலைகள் உலகம் மகத்தானது


                                                       தேன் வந்து காதில் பாய
    சிந்திய சிரிப்பில் எந்தனை மறந்து – என்
    இதழ்கள் என்னை அறியாது விரிய
    இதயப் பெட்டகம் இன்ப அருவியில்
    மூழ்கிப் பெருக்கெடுத்து ஓடியது

    வான் மழையில் நனைந்தால் குளிர் எடுக்கும் மழலை மொழியில் நனைந்தால் சுவை எடுக்கும். தேன்சுவை மிகைப்படின் திகட்டும். மழலைத்தேன் மிகைப்படத் தித்திக்கும். 
            
                                              கவிதையும் காவியமும் இலக்கியமும் படைக்கப்படலாம் அவற்றில் சுவை ததும்பும். ஆயினும் சிறுகுழந்தை தனது குரலெடுத்து உதிர்க்கும் வார்த்தைகள், இதயத்தில் இன்ப உணர்ச்சியை தூண்டி கவலைக்கு விடைகொடுக்கும். 
             
                                   உயர்ந்த கருத்தை ஏற்க உள்ளம் ஒன்றி நிற்க வேண்டும். ஆனால், மழலை மொழி தானாகவே செவிபுலன்களைக் கவர்ந்துவிடும். எவ்வளவோ பரபரப்பான வேலையின் ஈடுபாட்டையும் குறைத்துவிடும். உடம்பின் இரத்த ஓட்டம், இதயத்துடிப்பு, நுரையீரல் இயக்கம் அனைத்தையும் ஒருவகை ஒழுங்குமுறைக்கு இயைபுபடுத்தி இயங்க வைக்கும் சக்தி மழலைமொழிக்கு உண்டு. குழலிசையிலும் குயிலிசையிலும் அருவி இசையிலும் கேட்டுணர முடியாத ஒரு நுண்ணிய வேறுபாட்டை மழலைமொழியில் காண்கின்றேன். 
           
                             எவ்வாறு மழலைமொழியில் மகத்தான சக்தி படைக்கப்பட்டுள்ளது. அடிக்க உயர்த்திய கைகளையும் அணைக்க வைக்கும் அபாரசக்தி அதற்குண்டு. அம்மா என வாயெடுத்து முதல்மொழி தொடுக்க இதயராகம் இன்பஇசை மீட்டத்தொடங்கும். சொல் இணைத்து வாக்கியம் வடிக்க சுவை தொடராய் வடிந்து வரும். களங்கமில்லா மனதிற்கு எடுத்துக்காட்டு அவர்கள் எண்ணங்களில் வடிக்கும் சொல்லோவியம். குழந்தைகள் வளர்கின்ற போது அவர்கள் எண்ணங்களில் வில்லங்கம் தோன்றும் போதுதான் குரலிலும் கரகரப்பும் மாற்றங்களும் ஏற்படுகின்றது போலும். 
            
                                       மழலை மொழியில் மயங்கி நிற்கும் யாம், அதன் அழகுச் சிரிப்பில் மதிமயங்கி நிற்பது ஒன்றும் வேடிக்கை இல்லையே. இங்கு நான் தந்திருக்கும் கிளிப்பை அழுத்திப் பாருங்கள். ஒரு சில நிமிடங்கள் உங்களை மறக்கின்றீர்கள் அல்லவா? உங்களை அறியாமலே உங்கள் உள்ளங்களும் உதடுகளும் சிரிக்கின்றன அல்லவா? இந்த அபார சக்தியை என்னென்று யாம் அழைப்பது. இவ்வாறான மழலைகள் உலகத்து அனைத்துக் குழந்தைகளுக்கும் என் பறக்கும் முத்தங்களைப் பறக்கவிடுகின்றேன்.


             
                                              இவ்வாறான சக்தி படைத்த குழந்தைகளில் சில, குமரனாய், குமரியாய், முழுமனிதனாய் மாறுகின்ற போது குணநலன்கள், போக்குகள், பேச்சுகள், நடத்தைகள் அனைத்தும் மாறுபட்டு சில சமயங்களில் பெற்றோரால் தாக்குப்பட்டு சில சமயங்களில் மற்றோரால் ஏச்சுப்பட்டு, உலகப்பார்வையில் ஓரங்கட்டப்படுகின்றமைக்கு யார் காரணம்? கள்ளங்கபடமற்ற பிஞ்சு உள்ளம் கள்ளம் நிறைந்த வஞ்ச உள்ளமாய் வடிவெடுப்பதற்கு யார் காரணம்? எழுதப்படாத வெள்ளைக் கடதாசியாய் உலகில் அவதரிக்கும் குழந்தை மூளை என்னும் பாத்திரத்தில் நிரப்புகின்ற அநுபவ உணவுகள்தான் எவை?
                      
                                        குழந்தையாய் தவளும்போது அன்பாய் அனைத்த பெற்றோர், அக்குழந்தை வளருகின்ற போது தமது பல அபிலாசைகளை அக் குழந்தைமேல் புகுத்துகின்றனர். வயலின் இசையைப் பிள்ளை இரசிக்கின்றதா? அநுபவிக்கின்றது? முழு ஈடுபாட்டுடன் அவ் இசையில் இருக்கின்றதா? என்பதைப் பரிசீலனை செய்யாமலே அப்பிள்ளை வயலின் வித்துவானாய் வரவேண்டும் என்று பெற்றோர் நினைக்கும் போது வீட்டில் சிக்கல் ஏற்படுகின்றது. அடுத்த வீட்டுப்பிள்ளைக்கு முடிகின்றது உன்னால் மட்டும் ஏன் முடியவில்லை? என்றால், அப்பிள்ளை வேறு இப்பிள்ளை வேறு என்று பெற்றோரால் புரிந்து கொள்ள முடியவதில்லை. இங்கு பெற்றோரின் முதல் தவறு தென்படுகின்றது. ஒரு பிள்ளையுடன் தன் பிள்ளையை ஒப்பீட்டுப் பார்க்கும் போது பிள்ளையின் மனதில் வஞ்சனை வளர்கிறது. பெற்றோரின் நிராகரிப்பும், காட்டும் வெறுப்பும் பிள்ளையின் நடத்தையைச் சீர்குழைக்கும் என்பதும் உண்மையே.
                    
                                                        நல்ல வளர்ப்பு முறையில் வளருகின்ற பிள்ளை தவறுகளைச் சந்திக்கின்றது என்றால், அங்கு சூழலும் நட்பும் ஆட்சி புரிகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சூழல் பிள்ளையின் பழக்கவழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது என்றால், பெற்றோர் சூழலை மாற்றுவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பிள்ளையின் சுதந்திரத்தைக் அளவுக்கதிகமாகக் கட்டுப்படுத்துவதை விட்டு அவர்கள் போக்கில் சென்று மனமாற்றத்தை ஏற்படுத்தும் வழிவகைகளைச் செய்தல் வேண்டும். சொற்களுக்குப் பொருள் இருப்பது மட்டுமல்ல, அதன் பொருளுக்கேற்ற வலிமையும் இருக்கின்றது. இதைத்தான் கட்டுரைத்தல் என்பார்கள். பெற்றோர் தமது பிள்ளைகளைச் சரியாக அறிந்து கொள்ளாததும், அவர்களை மதிக்காததும், அவர்கள் நிலையில் மாறுதல் காணப்படுவதற்குக் காரணமாகின்றது. அவர்களைப் போற்றிப்பாருங்கள். சொற்களின் வலிமையைப் புரிந்து கொள்வீர்கள். மனமானது ஒரு சக்தி நிலையம். அதன் சக்தியை அதிகப்படுத்துவதும் குறைப்பதும் பெற்றோர் கையிலேயே தங்கியுள்ளது. இளம்வயதிலே குற்றவாளிகள் உருவாகுவதற்கு பாரம்பரியம், சுற்றப்புற சூழல், உடல் அமைப்புக் குறைபாடு, மூளையில் ஏற்படும் இரசாயணப் பொருள்களின் மாற்றங்கள் போன்றவையும் பொதுக் காரணங்களாக அமைகின்றன. இவற்றிலும் கூடிய அக்கறை காட்ட வேண்டியது வளர்ந்தோர் கடமையாகும். 
                     குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. பெற்றேரில்  சிலர் இப்பரீட்சையில் வெற்றி பெறுகின்றார்கள். சிலர் தோல்வியைச் சந்திக்கின்றார்கள். வெற்றி பெறுவதனால் எதிர்கால உலகம் பிரகாசம் அடைகின்றது. தோல்வியடைவதனால் எதிர்கால உலகம் சீரழிகின்றது. 




                  சீனுவாசன்.கு அவர்கள் அழைப்பின் பெயரில் மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடரை நானும் எழுதினேன். இத்தொடர் இடுகைக்காய் நானும் நால்வரை அழைக்கின்றேன். மழலைகள் உலகு அழகுபெற நீங்களும் நால்வரை அழையுங்கள். நான் அழைப்பவர்கள்.

    வேதா இலங்காத்திலகம்
    மாலதி 
    மனோ சாமிநாதன்
    சக்தி சக்திதாசன்








    6 கருத்துகள்:

    1. Sina sinna vasanankal athanaiyum kavithuvamana varnanai sotkal super super valthukal

      பதிலளிநீக்கு
    2. // குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. பெற்றேரில் சிலர் இப்பரீட்சையில் வெற்றி பெறுகின்றார்கள். சிலர் தோல்வியைச் சந்திக்கின்றார்கள். வெற்றி பெறுவதனால் எதிர்கால உலகம் பிரகாசம் அடைகின்றது. தோல்வியடைவதனால் எதிர்கால உலகம் சீரழிகின்றது. //

      நிதர்சன வரிகள் சகோ..

      நன்றி நல்லதோர் பகிர்விற்க்கு..

      பதிலளிநீக்கு
    3. மிகவும் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் உளம் நிறைந்த பாராட்டுகள்

      பதிலளிநீக்கு
    4. காணொளியினையும் தங்கள் கவித்துவமான
      கருத்துப் பெட்டகத்தையும் கண்டு படித்து
      மெய்சிலிர்த்துப் போனேன்
      மனம் கவர்ந்த அருமையான பதிவு
      தங்கள் பதிவைத் தொடர்வதில்
      மிகப் பெருமிதம் கொள்கிறேன்
      தொடர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    5. அன்பு சகோதரி...
      உம் படைப்பை படித்தேன்
      அடடா ஒரு படித்தேன் குடித்தேன்
      என்றுதான் சொல்ல வேண்டும்!
      அருமை!வாழ்த்துக்கள்!மழலை உலகம் உம்மால்
      மேலும் மகத்தானதானது!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...