• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 13 நவம்பர், 2011

    தனிமை இனிமை தராது


                                                

    அடுத்த வீட்டை ஜன்னலோரம் நின்ற வண்ணம் ஏக்கத்துடன் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரமேஷ். அழகான கண்கள். ஏக்கத்துடன் எதையோ விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன. மகனின் அருகே சென்ற அன்னையின் கண்களும் அடுத்த வீட்டை ஆர்வமாய் நோக்கின. திக்கென்றது இதயம். சகோதரர்கள் இணைந்து ஓடிப்பிடித்து இழுத்துப்பறித்துக் குதூகலமாய் விளையாட்டில் தம்மை மறந்து இலயித்திருந்தனர். மகனை மெல்ல அணைத்தாள், தாய். '' எனக்கு ஏனம்மா தம்பி தங்கை இல்லை?|| இப்படிக் கேட்பானென அவள் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, '' இன்னும் ஒரு பிள்ளை இருந்தால், உன்னில் உள்ள பாசம் குறைந்துவிடும் என்று நினைத்த நானும் உன் அப்பாவும் உனக்கொரு சகோதரன் கிடைக்க விரும்பவில்லை|| என்று ஆதரவாகக் கூறினாள். ஆனால் மகனோ, '' போங்கள் அம்மா. நீங்களும் விளையாடுவதில்லை. விளையாடினாலும் கொஞ்சநேரத்தில் அலுத்து விடுவீர்கள். இல்லையென்றால், வேறு ஏதாவது வேலை பார்ப்பீர்கள். அப்பாவும் வேலை, வேலை, வேலை. எனக்குக் கதைக்கவும் படிக்கவும் துணை வேண்டும். யாருடனும் விளையாடப் போகவும் விடுகிறீர்கள் இல்லை. தனியே விளையாடி, விளையாடி அலுத்துப் போய்விட்டுது அம்மா. ஒரு பிள்ளையைப் பெறுவது மட்டும் கவலையில்லை அம்மா! ஒரு பிள்ளையாகப் பிறப்பதும் பெரிய கவலை. மகனை வாரிஅணைத்தாள் தாய். கட்டி அணைத்து இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டாள். தன் தவறை அந்தச் சின்னமனம் சுட்டிக்காட்டியதை நினைத்து கோபப்படும். சாதாரண தாயல்லவே அவள். '' வா! நாங்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானத்திற்கு உனது நண்பன் டெனீஷையும் கூட்டிக் கொண்டு போவோம்'' என்றாள். ''ய்யா''என்று துள்ளி எழுந்தான் மகன்.   தன் வயதுப் பிள்ளைகளுடன் விளையாடுவதில் ஏற்படும் இன்பம் தன்னுடன் விளையாடுவதில் இருக்காது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.  
              

                   
                                                  அநுபவம் குறைந்த இளமைப் பருவம் அறிவுரை ஏற்காது. அநுபவித்துப் பார்க்கும் போதுதான், அடுத்தவர் கூறிய அநுபவ உண்மைகள் புலப்படும். காலங்கடந்து எடுக்கும் தீர்மானங்கள் கைகொடுக்காது. தனியே வளருகின்ற பிள்ளைக்கும்; பல பிள்ளைகள் உறவினர்களுடன் வளருகின்ற பிள்ளைக்குமிடையே பாரிய வேறுபாடு இருக்கின்றது. 1000 ஒயிரோக்களுக்கு விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுத்து உயிரற்ற பொருளைத் தடவி விளையாடி ஒரு பிள்ளை பெறுகின்ற இன்பத்திற்கும் தன் சகோதரருடன் சண்டை செய்து, ஒருவர் பொருளை ஒருவர் பயன்படுத்தி, ஒருவருக்காய் மற்றவர் விட்டுக்கொடுத்து, கவலைப்பட்டு, அன்பு காட்டி, ஆதரவு தந்து, பெறுகின்ற இன்பங்களுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. பிள்ளைச் செல்வம் என்பதன் பொருள் இதுவல்லவா. ஒரு பிள்ளையைப் பெற்றவர்கள், உண்மையில் வறியவர்களே. புலம்பெயர்வு மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்களில் மிகப் பாரதூரமான பாதிப்பு இதுவும் ஆகும். ஆளுமையுடன் குழந்தை வளர கூட்டுக்குடும்ப வாழ்க்கை கைகொடுப்பதுடன், குதூகலமான உளவியல் வாழ்க்கைக்கும் கைகொடுக்கின்றது. நமது கலாச்சாரம் சீரழிந்து போகுமென்று வீட்டுக்குள் தனிப்பிள்ளையைப் பூட்டி வைப்பதனால், அப்பிள்ளையின் எதிர்கால பிரகாசமான வாழ்வு மழுங்கடிக்கப்படுகிறது. உலகஅறிவு குறைகின்றது. தனிமை சிறுவர்களுக்குச் சுமையே. அதைக் கலைவதற்குரிய வழிவகைகளைக் கையாள்வது பெற்றோர்களின் கடனே.

    13 கருத்துகள்:

    1. //ஆளுமையுடன் குழந்தை வளர கூட்டுக்குடும்ப வாழ்க்கை கைகொடுப்பதுடன், குதூகலமான உளவியல் வாழ்க்கைக்கும் கைகொடுக்கின்றது.// உண்மைதான் கௌரி. வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களுடன் பழகுவது குழந்தையின் உள்வாங்கல் திறனை அதிகரிக்கிறது. நல்ல பகிர்வு.

      பதிலளிநீக்கு
    2. உண்மைதான்.தன்னுடன் தன் உடமைகளை பகிரவும்
      உணர்வுகளைப் பகிரவும் தனிமையைப் பகிரவும்
      இப்படி அனைத்தையும் பகிரப் பழகுவதன் மூலமாகவே
      ஒரு நல்ல சமூக மனிதனாக வீட்டிலேயே
      தயாராவத்ற்குரிய சூழல் இப்போது குறைந்து வருவது
      கவலைக்குரியதே இதை மிக அழகாகச் சொல்லிப் போகும் பதிவு
      அருமையிலும் அருமை நல்ல அருமையான பதிவைத் தந்தமைக்கு
      எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    3. யோசிக்க வைக்கும் அருமையான பதிவு.
      வாழ்த்துகள் அம்மா.

      பதிலளிநீக்கு
    4. தனிமரம் தோப்பாகாது என்று
      அருமையா சொல்லியிருகீங்க சகோதரி..
      மனவியல் ரீதியாக இந்த விஷயத்தை
      அலசி இருப்பது சிறப்பு...

      பதிலளிநீக்கு
    5. அன்பினிய கெளரி,
      ஆழமான பார்வை கொண்ட அர்த்தமிக்க பதிவு. எழுத்துக்களைத் தூவி சிந்தைச் செடிகளில் பயனுள்ள கருத்து மலர்களை மலர்விக்கும் உங்கள் ஆற்றல் அற்புதமானது. தொடரட்ட்டும் உங்கள் ஆக்கபூர்வமான பணி. வாழ்த்துக்கள்
      அன்புடன்
      சக்தி

      பதிலளிநீக்கு
    6. அருமையான கருத்துக்கள்!
      சிறப்பான பதிவு சந்திரகெளரி!

      பதிலளிநீக்கு
    7. இன்றைய பரபரப்பு மிகுந்த சூழலில் கூட்டு குடும்பம் தடம் மாறி தனிமர வாழ்க்கை தொடர செய்கிறது இவற்றை நீக்க உங்களின் சிறப்பான பதிவு உத்விடகூடும் பாராட்டுகளும் நன்றிகளும் .

      பதிலளிநீக்கு
    8. எனது நண்பர் ரசிகன் என்கிற விசு அவர்கள் ஒரு தொடர் பதிவை தொடரச்சொல்லி இருந்தார்.இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.
      1.காலபைரவன்
      2.அசதா
      3.பாலா
      4.சந்திரகௌரி
      உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள்.மழலை உலகம் இன்னும் விரியட்டும்.

      பதிலளிநீக்கு
    9. எனது நண்பர் ரசிகன் என்கிற விசு அவர்கள் ஒரு தொடர் பதிவை தொடரச்சொல்லி இருந்தார்.இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.
      1.காலபைரவன்
      2.அசதா
      3.பாலா
      4.சந்திரகௌரி
      உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள்.மழலை உலகம் இன்னும் விரியட்டும்.

      பதிலளிநீக்கு
    10. மழலை உலகம் மகத்தானது!என்ற தொடர்பதிவை எழுத தங்களை அன்புடன் அழைக்கிறேன்!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...