இவ்வருடம் புரட்டாதி மாதம் 24 ஆம் திகதி தொடங்கி புரட்டாதிச் சனிவிரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. கன்னிகாமாதம் என்று சொல்லப்படுகின்ற புரட்டாதி மாதத்திலே கன்னிகா விருட்சம் பரவியிருக்கின்ற தினம் புரட்டாதி மாத முதற்சனியாகும். இந்நாளிலேயே சூரியனுக்கும் அவர் மனைவி சாயாதேவிக்கும் மகனாகச் சனீஸ்வரன் தோன்றினார் என்பது ஐதீகம்.
இச்சனிக்கிரகம் 9 கிரகங்களில் ஒன்று. இது சூரியகிரகத்திலிருந்து மிக எட்ட இருக்கின்ற ஒரு கிரகமாகும். தனக்கு மகன் பிறந்திருக்கின்ற செய்தி கேட்டு சூரியபகவான் மகனைப் பார்க்க ஆவலுடன் சென்றார். மகனைக் கண்ட மாத்திரத்தில் அவர் குஷ்டரோகியானார். இதனால் கோபம் கொண்ட சூரியனும் மகனாகிய சனீஸ்வரனைத் தூக்கிவீசினார். அவரும் தூரத்திலே முடங்கிவிட்டார். அதாவது முடவனாகி விட்டாராம். வேடிக்கையாக இருக்கின்றதல்லவா? இதுவும் புராணங்கள் கூறுகின்ற கதைதான். சூரியனுடைய தள்ளுவிசையினால் வீசப்பட்டிருக்கும் ஒரு கிரகமே சனிக்கிரகமாகும். சூரியனுக்கு அருகே எதுவுமே செல்ல முடியாது. அருகே சென்றால், செல்பவை தூக்கிவீசப்படும். ஒரு எல்லை தாண்டிப் போனால், உள்ளே இழுத்துவிடும். உறிஞ்சி இழுத்து வீசி எறியப்பட்ட ஒரு கிரகமே சனிக்கிரகமாக இருக்கலாம். இதற்கு இப்படி ஒரு கட்டுக்கதையா?
சனீஸ்வரன் கிரகங்களிலே பாபக்கிரகமாகக் கருதப்படுகின்றது. அக்கிரகத்திலிருந்து வீசப்படுகின்ற தீய கதிர்வீச்சானது, உடலிலே பல தீய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இதனாலேயே பயபக்தியுடன் சனிக்கிரகத்தை சனீஸ்வரன் என்று அழைக்கின்றோம். இக்கதிர்கள் மூளைநரம்புகளைப் பாதிக்கின்றது. எண்ணங்களை மாற்றிவிடுகின்றது. இதனாலேயே சனிக்கிழமைகளில் (எள்எண்ணெய்) நல்லெண்ணெய் தேய்த்து சூரிய உதயத்தில் அரைமணி நேரம் நின்று குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஜாதகத்தில் சந்திரராசிக்கு 1,2,5,8,12 ஆகிய இடங்களில் சனிபகவான் சஞ்சாரம் செய்கின்ற போது அந்தச் சனி பகவானுடைய கதிர்வீச்சு அதிகரிக்கும். இதனால், எள்எண்ணெயில் ஊறிய உடம்பு இக்கதிர்களைத்தாக்கவிடாது.
கிரகதோஷம் ஒருவர் வாழ்நாளிலேயே ஒவ்வொரு 30 வருடத்திற்கும் ஒரு தடவை வருமாம். இத் தோஷம் உள்ளவர்களுக்குக்கு புத்திரபாக்கியம் குறைவு, மிருகபயம், மரணபயம், அதிகசெலவு, பணநஷ்டம், தேகசுகம்குறைவு, வீண்சச்சரவு போன்றவை நிகழும் எனப் பயம் காட்டப்பட்டுவிட்டது. மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையை எடுத்துக்காட்ட இவ்வாறு கூறப்படுகின்றது. மனமே எல்லாவற்றிற்கும் காரணமானது. கிரகக்கதிர்களினால், உடலும் அதனோடு இணைந்த மனமும் பாதிக்கப்படுபவர்களுக்கு மேற்கூறியவை நிகழச் சந்தர்ப்பம் இருக்கின்றது. கிரகதோஷம் உள்ளவர்கள் சனீஸ்வரனுக்குரிய தானியமாகிய எள்ளைச் சிறிதளவில் எடுத்து, சனீஸ்வரனுக்குரிய நிறமாகிய கறுப்புத்துணியில் ஒரு பொட்டலமாக கட்டி, ஒரு மண்சுட்டியில் நல்லெண்ணை விட்டு அதற்குள் இந்த பொட்டலத்தை வைத்து எரித்தல் வேண்டும். எள் உணவை சனீஸ்வரன் வாகனமாகிய காகத்திற்குக் கொடுக்க வேண்டும். சனீஸ்வரனின் நிறம் கறுப்பாகக் கருதப்படுவதால், கறுப்புத்துணியில் கட்டப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. இக்காலங்களில் விரதம் இருந்தால் சனீஸ்வரன் மகிழ்ச்சியடைந்து இப்பாதகங்களைக் குறைப்பார் என்றும் கருதப்படுகின்றது. பெரியவர்கள் பால்,பழம் போன்றவையை உணவாக உட்கொள்ளலாம் என்றும் குழந்தை நோயாளிகள் இட்லி முதலிய எளிய உணவை உட்கொள்ளலாம் என்றும் சொல்கின்றார்கள். இட்லி எனப்படுவது எளிமையான உணவு என்பது கேள்விக்குறி.
இவ்விரதம் விஷ்ணுகோயிலில் அநுஷ்டிக்கப்படுகின்றது. ஏனென்றால், புரட்டாதி மாதத்திலே சூரியன் கன்னிராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசியானது, புதனின் ஆட்சியின் உச்சவீடு. மகாவிஷ்ணுவே புதனாக அவதரித்தவர். எனவே விஷ்ணுகோயிலில் இவ்விரதம் அநுஷ்டிக்கப்படுகின்றது. என்று கூறுவர். ஆனால் சிவன் கோயிலிலும் இவ்விரதம் அநுஷ்டிக்கலாம். ஏனென்றால், சனீஸ்வரன் தனக்குக் கிரகபதவி கிடைக்க வேண்டுமென்று காசிக்குச் சென்று காசிவிஸ்வநாதரை வழிபட்டுப் பதவியைப் பெற்றதன் காரணத்தினால் சிவன் கோயில்களில் இவரை வழிபடுவது சிறந்தது என்றும் கூறப்படுகின்றது. விஷ்ணு ஆதிமூலம். இவரே அவதாரங்கள் எடுக்கக் கூடியவர். சூரியன் உட்பட கிரகங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முதல் இருந்த நிலையே ஆதிமூலநிலை. இந்தநிலையையே விஷ்ணுவாக உருவகித்திருக்கின்றார்கள். அவதாரம் என்றால், ஆதியிலிருந்த இரசாயண மூலக்கூறுகள் கீழே இறங்குதல். எனவே விஷ்ணு நிலையே அவதாரம் எடுக்கக் கூடிய நிலையாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரபஞ்சமானது சிவனாக உருவகிக்கப்பட்டிருக்கின்றது என்பதை எனது திருநீலகண்டர் என்னும் கட்டுரையில் வாசித்திருப்பீர்கள். எனவே இந்தப் பிரபஞ்சமாகிய சிவன் கோயிலிலும் சனிக்கிரகம் இருக்கலாம் ஆதிமூலமாகிய விஷ்ணு கோயிலிலும் சனிக்கிரகம் இருக்கலாம் அல்லவா.
சனிக்கிரகத்திலிருந்து வருகின்ற கதிர்கள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாயிருந்தால், எள்எண்ணெயை உடலிற்குப் பூசுகின்றோம். அது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால், அதை எரிப்பதன் அவசியம் தான் என்ன? என்ற வினா எழலாம். எள்ளானது எள்எண்ணெயில் எரிகின்ற போது அதன் தன்மை ஆவியாக வெளிவருகின்றதல்லவா? இதனை எமது மூளையிலுள்ள அமிக்டாலா உணர்ந்து கொள்வதுடன் அதற்கேற்பத் தன்னுடலிலே மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
புரட்டாதி மாதத்திலே குளிர்காலம் ஆரம்பித்துவிடுகின்றது. சூரியவெளிச்சம் குறைந்துவிடுகின்றது. பகல் குறைந்து இரவுப்பகுதி அதிகரித்தும் காணப்படுகின்றது. இதனால் தாவரங்கள் பச்சையம் தயாரிப்பது குறைந்துவிடுகின்றது . ஒட்சிசனை வெளியிடுவது குறைகின்றது. எள் உணவிலே arginin என்று சொல்லப்படுகின்ற அமினோவமிலம் இருக்கின்றது. இந்த அமினோவமிலம் சுவாசிக்கப்படுகின்ற ஒட்சிசனுடன் இணைந்து நைத்திரிக்கமிலத்தை உருவாக்குகின்றது. இந்த நைத்ரிக் அமிலம் அல்லது நைத்திரிக்மோனோ ஒக்சைட் இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்கின்றது. இரத்தக்குழாய்கள் விரிவடையும் போது உடலுக்குக் கொண்டுசெல்லப்படும் ஒட்சிசனின் அளவும் அதிகரிக்கின்றது. இதனால் இக்காலப்பகுதியில் ஒட்சிசனின் அளவு உடல் உறுப்புக்களுக்குச் சென்றடைய எள் உணவு உதவுகின்றது. இதைவிட இந்த எள்உணவானது இரத்தக்குழாய்களின் சுவர்களில் காணப்படுகின்ற மெல்லிய சுவர் போன்றிருக்கும் பகுதியையும் வலுவடையச் செய்கின்றது. எனவே எள் உணவு உண்பது இக்காலப்பகுதியில் மிகவும் அவசியப்படுகின்றது.
எனவே காரணமில்லாமல் இவை ஏற்படுத்தப்படவில்லை என்பது இவற்றின் மூலம் தெளிவாக்கப்படும் போது விரதம் காப்பாரும் விளக்கம் பெறுவர் எமது இளையசந்ததியினரும் இவைபற்றிப் புரிந்து கொள்வதுடன் பிறருக்கும் புரியச் செய்வர்.
புரட்டாசி மாத சனிக்கிழமையின் விசேஷம் பற்றியும், சூரியனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும்,
பதிலளிநீக்குஎள் & நல்லெண்ணெய் பற்றிய சிறப்புகள் பற்றியும் அழகாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். பயனுள்ள பல தகவல்கள். புராணக்கதைகள். பாராட்டுக்கள்.
vgk
நல்ல விளக்கங்கள் சந்திரகௌரி. இந்தப் பதிவை ஆழ்ந்து படிக்கவேண்டும்.
பதிலளிநீக்குஎன்னுடைய இந்தப் பதிவை முடியும்போது பார்க்கவும். கதிர்வீச்சுகள் மனிதனை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
http://swamysmusings.blogspot.com/2011/09/blog-post_21.html
நல்ல பயனுள்ள விளக்கங்கள் நிறைந்த பதிவு.
பதிலளிநீக்குமனப்பூர்வ வாழ்த்துக்கள்.
எனவே காரணமில்லாமல் இவை ஏற்படுத்தப்படவில்லை என்பது இவற்றின் மூலம் தெளிவாக்கப்படும் போது விரதம் காப்பாரும் விளக்கம் பெறுவர் எமது இளையசந்ததியினரும் இவைபற்றிப் புரிந்து கொள்வதுடன் பிறருக்கும் புரியச் செய்வர். /
பதிலளிநீக்குஅருமையான மிகப் பயனுள்ள அரிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
//எனவே காரணமில்லாமல் இவை ஏற்படுத்தப்படவில்லை என்பது இவற்றின் மூலம் தெளிவாக்கப்படும் போது விரதம் காப்பாரும் விளக்கம் பெறுவர் எமது இளையசந்ததியினரும் இவைபற்றிப் புரிந்து கொள்வதுடன் பிறருக்கும் புரியச் செய்வர். //
பதிலளிநீக்குதெளிவான கருத்தை சொல்லியிருக்கீங்க, கெளரி.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
நல்ல தரமாக ஆய்ந்து பொருத்தமாக எழுதியிள்ளீர் சகோதரி நன்றி!
பதிலளிநீக்குபுலவர் சா இராமாநுசம்
நல்ல ஆராச்சிக் கட்டுரை சகோதரி.
பதிலளிநீக்குபுரட்டாசி சனி விரதம் பற்றிய அறிவியல் ஆதாரங்கள்
அற்புதம்.
நல்லெண்ணெய் பற்றிய ஆதாரங்களும் அருமை.
அன்பு சந்திர கௌரிக்கு, இப்பதிவில் நீங்கள் எழுதியுள்ளதைப் படிக்கும்போது, இந்த எழுத்துக்கும் உங்களுக்கும் ஒவ்வாமை இருப்பது போல் தோற்றமளிக்கிறது. பட்டும் படாமலும் எழுதியிருக்கிறீர்கள். எல்லா விஷயங்களுக்கும் காரண காரியங்கள் மூலம் விடை கிடைப்பது கடினம். நடை முறையில் அனேக விஷயங்கள் ஏதோ நம்பிக்கையின் அடிப்படையிலேயே அனுஷ்டிக்கப் படுகின்றன. என் கருத்தில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால் நோகடிக்க எழுதியதல்ல.
பதிலளிநீக்குநல்ல தகவல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇவை எல்லாம் நான் அறியாத விஷயங்கள்பா சந்திரகௌரி....
பதிலளிநீக்குஅன்பு நன்றிகள் பகிர்வுக்கு, இதை அம்மாவுக்கும் படித்து காமிக்கவேண்டும் நான்.....
வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…//
பதிலளிநீக்குஒன்று நடக்கின்றது என்றால், ஏன் நடக்கின்றது என்று சிந்திப்பேன். அது தொடர்பான தேடலில் இறங்கிவிடுவேன். மனது ஏற்றுக் கொண்ட விடயங்களை மீட்டிப் பார்த்து அது பற்றிய சரியான விளக்கம் பெற்ற பின் தொகுப்பேன். இதனாலேயே பல முரண்பாடுகளைக் காணுகின்றேன். எல்லாவற்றையும் சிறப்பு என்று வாழ்த்திவிடல் எமது அறியாமை இல்லையா? எப்போதும் அவ்வக்காலத்துக்கு உகந்தவைதானே ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும். உங்கள் பின்னூட்டலுக்கு மிக்க நன்றி
எள் உணவு விவரம் புதிது. பயனுள்ளது. நன்றி
பதிலளிநீக்குஒட்சிசனின் அளவு உடல் உறுப்புக்களுக்குச் சென்றடைய எள் உணவு உதவுகின்றது. இதைவிட இந்த எள்உணவானது இரத்தக்குழாய்களின் சுவர்களில் காணப்படுகின்ற மெல்லிய சுவர் போன்றிருக்கும் பகுதியையும் வலுவடையச் செய்கின்றது. எனவே எள் உணவு உண்பது இக்காலப்பகுதியில் மிகவும் அவசியப்படுகின்றது.
பதிலளிநீக்குஎள் உணவு விவரம் பயனுள்ளது. நன்றி
நல்லதொரு அலசல்/கட்டுரை...சகோதரி..
பதிலளிநீக்குநமது நம்பிக்கைகளை சாஸ்திரங்களை
பதிலளிநீக்குஇதுபோல் விஞ்ஞானக் கண்கொண்டு பார்க்கத்
தெரியாமல் கண்மூடித்தனமாக புறம் தள்ளியதால்
பல விஷய்ங்களை இழந்துவிட்டோம்
விரிவான தெளிவைத் தரும் அருமையான
பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
இதைப்போன்றதொரு வலுவான , கனமான , ஆழமான ,
பதிலளிநீக்குதரமான , ஏன் , எதற்கு என்ற தேடலுக்கு விடை கிடைக்கும்
நல்ல பதிவுகளைத்தான் தேடிக் கொண்டு இருந்தேன்.
இத்தனை நாள் வரையில் உங்கள் பதிவுகள் என் கண்ணில்
படாதது என் அதிர்ஷ்டக் குறைவே. அதே போல் சனிப்பெயர்ச்சிக்
காலங்களில் அதன் கதிர்வீச்சு அதிகம் இருக்கும் என்பதும் ,
திலதீபத்தால் ,அதன் புகையை நாம் உள் இழுக்கும் போது மூளையில்
இருக்கும் அதிகப்படியான இரும்புசத்தை உருஞ்சி 'முடிவெடுக்கும் ' திறனை
அதிகரிக்கிறது என்று படித்தேன்.
மொத்தத்தில் ஆன்மிகம் எல்லாம் ஆரோக்கியத்திற்கு , ஆருடம் எல்லாம்
விண்வெளி ஆராய்ச்சிக்கு என்பதே என் கருத்து.
உம் : சனியின் உபகிரகங்கள் - மாந்தி , குளிகன்
இதனை சனியின் புதல்வர்கள் என்று கூறுகிறார்கள்.
தர்ப்பைப் புல்லுக்கு radiation தடுக்கும் சக்தி உள்ளது. அதே போல்
அது ஒலிகளைக் கடத்தும் ஒரு கண்டக்டர் ஆகும். எனவே
அதை மந்திரங்கள் ஓதி கலச நீரில் அந்த நல்ல அதிர்வுகளைக் கடத்திப் பின்
கும்பாபிஷேகம் செய்கிறார்கள். நம் மீதும் தெளிக்கிறார்க.
நானும் நிறைய ஆராய்வது உண்டு .
அருமையான பதிவு. நன்றி !
வாழ்த்துக்கள் !