ஆற்றுப்படை :
வறுமை காரணமாக ஒரு மன்னனிடம் பாடல்கள் பாடி பரிசில்கள் பெற்று வரும் புலவர், திரும்பி வரும் வழியிலே காணுகின்ற புலவர்களிடம் அம்மன்னன் பெருமைகள் கூறி, அம்மன்னனைச் சென்றடையும் வழியினையும் தெரியப்படுத்துவதாய் ஆற்றுப்படை நூல்கள் அமைகின்றன. திருமுருகாற்றுப்படையானது இவ்வண்ணமே முருகனிடம் முத்திபெற்ற பக்தன் வேறு ஒரு பக்தனுக்கு முத்திக்குரிய வழிமுறைகளைக்கூறி ஆற்றுப்படுத்துவதாக அமைகின்றது. அதாவது வழிப்படுத்தவதாக அமைகின்றது.
இவ்வண்ணமே இலண்டன் தமிழ் வானொலியில் பலன் பெற்ற ஒருநேயர், தமிழ் அறிவின்றித் தமிழ் அறிவைப் பெற அவாவுற்றிருக்கும் ஒருவருக்கு அவ்வானொலியை ஆற்றுப்படுத்துவதாய் இவ் நேயராற்றுப்படை அமைகின்றது
வானொலி வருகை
கார்இருள் பருகி அகல் விசும்பைப் பகலாக்கி
பார் எங்கும் விரிகதிர் பரப்பி
பரிதி பவனி வரும் பகல் பொழுதில்
தமிழ் பிறந்தன்ன, கலைபிறந்தன்ன
மங்கல இசை மகிழ்ந்து வரவேற்று
மனை மங்கலம் காண்பதன்ன ஒலிபரப்பும்
இலண்டன் தமிழ்வானொலி நாளும் வலம் வரும்
நேயரது வறுமை
ஓண்கடல் தாண்டி உறவுகள் துறந்து
நிம்மதிதனைக் காண நெடும்பயணம் செய்து
அந்நிய நாட்டில் அல்லலுறும் தாய்மொழி மறந்து
தவிக்கின்ற செல்வங்கள் தமிழ்மொழித் திறன்காண
வழி தெரியாத் தமிழர்களே!!!
அறிவுபெற்ற நேயர் அதன்திறன் கூறல்
இன்தமிழைச் சுவைப்போமாளூ இனியஇசை கேட்போமா,
எம்சிறார் எதிர்காலம் தமிழின்றித் தொடருமாவெனப்
பாலையாய் வற்றிய நெஞ்சுக்குப் பாலூற்றும்
பார் போற்றும் வானொலி பணியாற்றிப் பலன்தர
பேர் பெற்று வாழ்கிறார் எம்மவர், எம்சிறார்
கேளீர்! அதன் வளத்தைப் பெறுவீராக!
இங்கிலாந்து நாட்டில் ஈஸ்ற்கேம் நகரில்
இலங்கு புகழ் இலண்டன் தமிழ் வானொலி
இருந்து பணிபுரிய செய்மதி இழுத்துவரும்
கொட்ற்பேர்ட்டில் பதினோராயிரத்துப் பன்னிரெண்டைத்
தொட்டிழுத்தால் தொடரும் உங்கள் மனம் நோக்கி
மின்னஞ்சல் மறுவடிவம் மிதமாய் தோன்றிடும்
நேயர்கள் வாழ்த்து
நேயர்குழாம் நெஞ்சால் இணைந்த குழாம்
அடியெடுக்கும் அன்புச்செல்வம் அனைவரையும்
அன்புடனே வாழ்த்தி வளர்த்தெடுத்து
இன்பங் காண்பார்.
அதிபர் பெருமை
அடுத்த தலைமுறை நோக்கி எடுத்த
இலட்சியப்பயணம் கொண்ட இரசாயணப்பொருள் - அவர்
இரும்புக் கவியையும் பொன் கவியாக்குவார்
புல்லையும் ஆயுதமாய் புதுப்பிப்பார்
முனகலையும் இராகமாக்கும் முனைவர்
கல்லையும் சிற்பமாக்கும் கலைஞன்
ஓட்டுக்குள் தலைமறைக்கும் ஆமைபோல்
ஒளித்திருக்கும் திறமைகளை வெளிக் கொணர்வார் – உங்கள்
தமிழ் வறுமையையும் போக்குவார்
தயங்காது களம் புகுவீர்
இலண்டன்தமிழ் வானொலியில் 14.12.06 அன்று என்னால் எழுதி வாசிக்கப்பட்டது.
சிறந்த படைப்புகள் சகோதரி...
பதிலளிநீக்குஅற்புதமான கவிதை
பதிலளிநீக்குஉங்கள் ப்லோக்கேருக்கு செல்லும் வளி என்னது
என்னே நின் தமிழ்ப்புலமை !!
பதிலளிநீக்குநேயராற்றுப்படை தீட்டிய நீவீர்
வாழிய வாழி!
நல்லவை யார் எங்கே பெற்றாலும் நன்றி நவில்வது உயர்ந்த பண்புகளில் ஒன்றாகும்...
பதிலளிநீக்குலண்டன் வானொலி மூலம் ஒருவர் எத்தனை நன்மைகள் பெறமுடியும் என்பதற்கு உவமானம் நீங்கள் சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சது சந்திரகௌரி...
இறைவனிடம் கொள்ளும் பக்தியினால் பெற்ற அரிய முக்தி எனும் அருட்பொருளை மற்ற பக்தரிடமும் சிலாகித்து சொல்வதை போல என்று கொடுத்திருப்பது மிக மிக சிறப்பு....
உங்களின் இந்த சேவையால் எங்கோ நடக்கும் நல்லவை இதோ கடல் கடந்தும் எங்களுக்கு அறியத்தந்தீங்கப்பா...
அன்பு நன்றிகள் அருமையான பகிர்வுக்கு...
லண்டன் தமிழ் வானொலியில் நீங்க உங்க அழகிய தமிழால் வாசித்த இந்த கட்டுரை பகிர்வுக்கு என் மனம்நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா....
அட!!!!
பதிலளிநீக்கு>>>> இலண்டன்தமிழ் வானொலியில் 14.12.06 அன்று என்னால் எழுதி வாசிக்கப்பட்டது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
அருமை அருமை கவிதையோ அருமை
பதிலளிநீக்குசொல்லும் பொருளும் சொற்றொடரும் அருமை
ஆற்றுப் படுத்திய அருங்கவி தன்னை
போற்றுவோம் இன்றே புகழ்பெற நன்றே
புலவர் சா இராமாநுசம்
நல்ல கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
2006 லேயே இலண்டன் வானொலியில்
பதிலளிநீக்குதாங்கள் கவி முழக்கம் செய்துள்ளது குறித்து
மிக்க மகிழ்ச்சி.தங்கள் குரல் வளத்தை
ஒருமுறை கேட்டபோதே நீங்கள் உறுதியாக
ஒரு சாதனையாளராகத்தான் இருப்பீர்கள்
என முடிவெடுத்திருந்தேன்.அது
உறுத ிசெய்யப்பட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
தான் பெற்ற இன்பம் இவ்வையம் பெறுக என்கிற
தமிழரின் பண்பாட்டுக் கிணங்க
ஆற்றுப்படுத்திய விதமும் என்னை மிகவும் கவர்ந்தது
பதிவுலகின் மூலம் தங்களை தொடர்பு கொள்ள
முடிவதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்
தங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்
ரெவெரி சொன்னது…//
பதிலளிநீக்குநன்றி ரெவரி. உங்கள் படைப்புக்களும் பலபக்கமாய் விரிந்து வாழ்வுக்குப் பல நல்ல செய்திகள் தருகின்றன.
கவி அழகன் சொன்ன//
பதிலளிநீக்குவரிகளுக்கு நன்றியைக் கூறி, பிளக்கர் ஆற்றுப்படை தற்போது யாரும் சொல்லி அறியத் தேவையில்லை யாதவன், தானாக அறிந்து வந்து புகுந்து கொள்வார். தன் தேவையறிந்தே தரும் செய்திகளைப் பெற்றுக்கொள்வார். வழிதேடி வந்து பெறும் கருத்துக்களுக்கு சன்மானமாய் வாழ்த்துகளைத் தந்துசெல்வார். அன்றும் இன்றும் வாழ்த்துகளுக்குள்ள வலிமை வேறு யாதென்றுக்கும் இல்லையென அறிந்திடுவோம் யாமே.
மகேந்திரன் சொன்னது…//
பதிலளிநீக்குஎன்னே உங்கள் வாழ்த்தருமை. வாழ்த்துத் தீட்டிய உம் வார்த்தைகளுக்கு நன்றி நன்றி
மஞ்சுபாஷிணி //
பதிலளிநீக்குசொல்லுக்கு வலிமை உண்டு. நீங்கள் சொல்லும் பின்னூட்டத்திற்குச் சக்தியுண்டு. வல்லமையுள்ள வார்த்தைகளால், கணனி அலைகளினூடு எம்மை நீங்கள் கவர்வது போலவே. வானொலி அலைகளினூடு ஒலியலையின் நன்மைகளை பலர் அறியத் தந்தேன். தொடருங்கள் உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள்.
சி.பி.செந்தில்குமார் //
பதிலளிநீக்குதங்கள் தொடர் வரவிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
பதிலளிநீக்குஐயா உங்கள் முன் நாங்கள் எம்மாத்திரம். உங்கள் வாழ்த்தொலிகளே எங்கள் ஆக்கங்களுக்கு வலுச் சேர்க்கும் நன்றி ஐயா!
வாருங்கள். தவறாமல் அருமை என்று வாய் இனிக்கச் சொல்லும் உங்கள் வரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!
பதிலளிநீக்குரமணி சார் நான் ஒன்றும் பெரிய சாதனையாளர் அல்ல. வானொலியில் கலந்து கொள்வது இங்கு ஒரு சாதாரணம். நான் இலண்டன் தமிழ் வானொலியில் ஒரு தொகுப்பாளராகப் பணிபுரிந்தேன். ஓடிவிளையாடுபாப்பா என்னும் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்தேன். இலண்டன், ஜேர்மனி, சுவிஸ்லாந்து, பிரான்ஸ், கோலன்ட், டென்மார்க், போன்ற நாடுகளிலிருந்து ஏறத்தாழ 70 பிள்ளைகள் 5 வயது தொடக்கம் 18 வயதுவரை கலந்து கொள்வார்கள். நான் ஒரு தலைப்பும் சிறுகுறிப்புக்களும் கொடுப்பேன். அதற்கமைய அவர்கள் ஆக்கம் எழுதி மின்னுஞ்சலில் குரலுடன் அனுப்புவார்கள். நான் அவற்றைத் தட்டிக் கொடுத்து வாழ்த்தி, தவறுகளைச் சுட்டிக்காட்டி வழிப்படுத்துவேன். இவ்வாறாக 4 வருடங்கள் செய்து வந்தேன். தற்போது பணி அதிகரிப்பினாலும், குடும்பப் பாரத்தினாலும் கடினமாக இருந்தமையினால் நிறுத்தி விட்டேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. எனக்கும்கூட உங்கள் தொடர்பு கிடைத்தமை சந்தோஷமே. என்றோ ஒருநாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெறுவோம் என்று நம்புகின்றேன்.
பதிலளிநீக்கு2006லேயே உங்கள் புலமை அருமை.இன்று இன்னும் அதிகம் இருக்கவேண்டுமே.தொடருங்கள் உமது தமிழ்ப் பணியை.அயல்நாட்டில் இருந்தாலும் அடுப்பங்கரையில் இருந்தாலும் தமிழன் தமிழந்தான் என்பதை நிலைநாட்டுங்கள். வாழ்த்துங்கள்.
பதிலளிநீக்கு