• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 1 செப்டம்பர், 2011

    என் வாசகங்கள்






                         நன்றி நவிலல்

        நன்றிநவில விதிமுறை இல்லை
        நாவின் முனைப்பில் நடைமுறைப்படுத்தப்;படும்.


       வலிந்து கேட்பதன்று நன்றி 
        நன்றி பெற்றார் மனத்தின்கண்
        விரும்பிக்கொடுப்பது.


        நன்றிநவில சிந்திப்பதில்லை நாநுனி
        நவிலத் துடிப்போடு வெளிப்படும்.
        
                              

                                உயர்ந்தோர் உள்ளம் 


         பெருக்கத்துப் பணிவும் தாழ்வுவரின் தளராமையும்
        உயர்ந்தோர் உள்ளத்தின் பண்பாகும். 


       அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்
        உள்ளத்தால் உயர்ந்தோர் உயர்ந்தோராவார்.


        மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும் 
        உயர்ந்தோர் உள்ளம்.
         
                                     
                                       
                                 பொறாமை 

    புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது 
    புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள் 
    புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.


    பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
    அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும். 

                                                  

                                      சந்தேகம் 

    சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
    சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும். 

                                           

    19 கருத்துகள்:

    1. என் குறள் ...என்றே சொல்லியிருக்கலாம்...இனிமை...

      பதிலளிநீக்கு
    2. பொறாமை இல்லாமல், சந்தேகம் கொள்ளாமல் உயர்ந்தோர் உள்ளம் தெரிகிறது உங்களின் இந்தப்பதிவினில். அதற்கு நன்றி நவில்கிறேன். vgk

      பதிலளிநீக்கு
    3. >> மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும்
      உயர்ந்தோர் உள்ளம்.

      பெஸ்ட்

      பதிலளிநீக்கு
    4. பெருக்கத்துப் பணிவும் தாழ்வுவரின் தளராமையும்
      உயர்ந்தோர் உள்ளத்தின் பண்பாகும். /

      அருமையான கருத்துக்கள் - அழகான படங்களுடன் பாராட்டுக்கள்.

      பதிலளிநீக்கு
    5. வாழ்விற்குகந்த வாசகங்கள்
      கடைபிடித்தால் வாழ்வில் ஈடேரலாம்

      நன்றி சகோதரி.

      பதிலளிநீக்கு
    6. அருமையான வாசகங்கள்
      தாங்கள் என் வாசகங்கள் எனக்குறிப்பிடவில்லையெனில்
      உண்மையில் அறிஞர்களின் வாசகங்களைத்
      தொகுத்துக்கொடுத்ததாகவே எண்ணியிருப்பேன்
      தரமான படைப்பு தொடர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    7. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
      சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.

      அப்படி போடு அரிவாள

      பதிலளிநீக்கு
    8. அவரவர் சொத்தை நாம் உரிமை கொண்டாட முடியாது. குறள் என்றாலே வள்ளுவர் தான். அதைப் போல் நாம் ஆகமுடியாது. எனினும் உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி

      பதிலளிநீக்கு
    9. சி.பி.செந்தில்குமார்//

      வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

      பதிலளிநீக்கு
    10. வை.கோபாலகிருஷ்ணன் //

      நீங்கள் சிறப்பான கதையாசிரியர். இவைபற்றியும் உங்கள் அநுபவத்தைச் சேர்த்து கதையாக வடியுங்கள். வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

      பதிலளிநீக்கு
    11. இராஜராஜேஸ்வரி //


      பிடித்த வரிகளை தரம் பிரித்துக்காட்டி பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி

      பதிலளிநீக்கு
    12. மகேந்திரன் //

      நிச்சயமாக. அதனாலேயே இப்பதிவை வாசித்தவுடன் மறந்துவிடாது. மனதில் பதிக்கவேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன். அதுவே நான் எழுதியதன் பயனாகவும் கருதுகின்றேன்.

      பதிலளிநீக்கு
    13. Ramani //

      இக்கூற்றுக்கு நன்றி. அந்த அளவிற்கு இன்னும் வளரவில்லை. உலகை வழிப்படுத்தத் துடிக்கின்றேன்.

      பதிலளிநீக்கு
    14. கவி அழகன் //

      இங்கேயும் அரிவாளா???? தமிழ்த் திரைப்படங்களில் சில வந்து பயமுறுத்துகின்றன. பின்னூட்டத்திற்கு நன்றி

      பதிலளிநீக்கு
    15. உண்மையே…. இறைவனின் படைப்பில் நாக்கு மிக முக்கியப்பங்கு வகிக்கிறது….

      அருமையான வரிகள்... செய்த உதவிக்கு நன்றி எதிர்ப்பார்க்க கூடாது... நம்மிடம் பெற்ற உதவி எப்பேற்பட்டது என்பது பெற்றவர் அறிந்து கொடுக்கும் ஒரு அருமையான விஷயம்... அந்த நன்றியை கூட எதிர்ப்பார்க்காமல் செய்யும் உதவியானது இறைவனுக்கு செய்யும் சேவையை போன்றது...

      மனதில் இருக்கும் நன்றி உணர்வு நாவில் வெளிப்பட்டுவிடும் என்பதில் ஐயமே இல்லை...
      =============

      எத்தனை அறிவிருந்தும் என்ன எத்தனை பணமிருந்தும் என்ன ? தர்ம சிந்தனை கொண்ட மனமும்...

      உதவி என்று கேட்டால் தயங்காமல் செய்யும் குணமும்....

      தன்னிடம் இருப்பதை எளியவருக்கு கொடுக்கும் ஈகையும் இருப்பது தான் சிறப்புன்னு மிக அருமையா சொல்லி இருக்கீங்கப்பா...

      மனுஷாள்ள உயர்ந்தவர் தாழ்ந்தவர்னு தரம் பிரிக்காம எல்லோரும் ஒன்று என்ற நோக்கோடு பார்க்கும் மனிதனே உயர்ந்தவன் என்ற உங்கள் வரிகள் சிறப்பு சந்திரகௌரி...
      =============


      நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று அடுத்தவரிடம் இருக்க அதனால் வெற்றியும் புகழும் அடைந்திருக்கார் என்று அறிய வரும்போது அதை கண்டு பொறாமைப்படாமல் நம்மிடம் இல்லாத அந்த நல்லவை அவரிடம் கற்று நேர்மையுடன் வெற்றி பெறுவதே சிறப்பு என்று சொன்ன சிந்தனை வரிகள் மிக மிக அருமைப்பா...

      பொறாமை உணர்வுடன் வெளிவரும் சொல்லும் செயலும் அதிக நாட்கள் மறைத்துவைக்க முடியாது..

      அது வெளிபடும்போது நம்மிடம் எத்தனை திறமைகள் இருந்தாலும் அவை மதிக்கப்படாமல் போய்விடும் இந்த ஒரு துர்குணத்தால் என்று மிக அருமையா சொல்லி இருக்கீங்கப்பா...
      ==================


      ஆஹா வாழ்க்கைக்கு தேவையான வரிகள் இவை... கணவன் மனைவி மட்டுமல்ல நட்பு காதல் அன்பு எவ்விதமான உறவிலும் நட்பிலும் சந்தேகம் என்ற சொல்லுக்கு இடமளிக்காமல் மனதில் தோன்றும் விஷயத்தை மற்றவரிடம் சென்று புறம் பேசி சேகரிப்பதை விட சம்மந்தப்பட்டவரிடமே போய் ஏம்பா இப்படி சொன்னியா செய்தியா என்று கேட்டால் நேர்மையான குணத்தை மெச்சுவார்கள்....

      வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களும் ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் எப்படி இருக்கக்கூடாது என்ற நல் அறிவுரைகளும் மிக அருமையான சிந்தனை வரிகளால் இரண்டே அடிகளில் அசத்திய அன்பு தோழி சந்திரகௌரிக்கு என் அன்பு வாழ்த்துகள்பா....

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...