• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 6 ஜூன், 2011

    எழுத்தாளனை ஏளனம் செய்யும் சமுதாயம்

                 
    கோல் எடுக்கும் மன்னன் மக்களுக்காய் மக்களை ஆட்சி செய்தான். எழுதுகோல் எடுக்கும் எழுத்தாளன் மக்களுக்காய்த் தன் அறிவை விதைக்கின்றான். இதைப் புரியாத பலரும் எழுத்தாளரை மனநோயாளர் என்று ஏளனம் செய்யும் வார்த்தைகள் கெட்டு மனம் நொந்து வரி வடிக்கின்றேன். 
                       
    சொல்லும் பொருளும் சுகமானால், வெல்லும் இவ்வுலகம். அச்சொல் மற்றவர் உள்ளத்தை நல்லதாக்க வேண்டுமென சொல்வடித்தல் குற்றமா? சூழ இருந்து சுற்றத்தாருடன் திரைப்படம் பார்த்துச் சிரித்து, இரசித்து, திரைக்கதை விமர்சித்து ஆஹா ஓஹோ என்று அலசி, கதாநாயகி சிரிக்கும் போது சிரித்து, அழும்போது அழுது தம்மை மறந்திருப்பார், அத்திரைப்படத்தின் மூலக்கதை ஒரு எழுத்தாளனால் உருவானது எனச் சிந்திக்கத் தயங்கிவிடுகின்றார்கள். வைரமுத்துப்பாடல்கள், கண்ணதாசன் போன்ற திரைப்படப் பாடலாசிரியர்கள் பாடல்கள் காதுக்குள்ளே ஒலிக்க Head Phone மாட்டித் திரிவதும், அப்பாடல்களுக்கு ஆட்டம் போடுவதும் ஒரு எழுத்தாளன் எழுத்திலேயே அப்பாடல் உருவானது என்று உணர்ந்து கொள்ளாமலே நடைபெறுகின்ற நடவடிக்கைகளேயாகும். கண்ணதாசன், வைரமுத்து கவிஞராக அந்தஸ்த்துப் பெற்றது, அவர்கள் எழுதிய முதல் வரிகளில் அல்ல. எழுதிஎழுதிக் குவித்ததனாலேயே, அவர்கள் கவிஞர்களாக அந்தஸ்த்துப் பெற்றார்கள். பணமும் புகழும் அவர்களை நாடி வந்தது. ஒரு திரைப்படமோ, பாடலோ ஒரு எழுத்தாளன் இல்லாது உருவாக முடியாது. அடிப்படையை விட்டுவிட்டு வெளிப்படையை இரசிப்பவர்கள் மனப்பக்குவத்தை என்னென்பது?   பணத்துக்காகவும் புகழுக்காகவும் மாத்திரம் எல்லோரும் எழுதுவதில்லை. ஆத்ம திருப்திக்காகவும் எழுத்தைப் பயன்படுத்துகின்றார்கள். தமது எழுத்துக்களால், சமுதாயத்தில் யாரோ ஒருவர் விழிப்புணர்வு பெறவேண்டும் என்று எழுதுகின்றார்கள் எனப் புரியாத மனிதர்கள், பணம் தேடும் முயற்சியே முயற்சி ஆகும், ஆத்ம திருப்தி என்பது மனித மனவுணர்வன்று என்ற முட்டாள்த்தனமான எண்ணப்போக்கைக் கொண்டிருக்கின்றார்கள். பணத்தை நோக்கமாகக் கொள்பவர்கள், கலையுணர்வை ஏளனம் செய்வதில் ஆச்சரியம் இல்லை. கடல் மண்ணிலே பேருருவம் செய்யும் படைப்பாளி, தன்னை மறந்து தன்னை மறந்து, நேரத்தை இழந்து படைக்கும் படைப்பு ஒரு மழை வரக் காற்றடிக்க அழிந்து போகும் என்று தெரிந்தும் இரசித்து இரசித்துத் தன் கலைப்படைப்பை வெளிக் கொண்டுவருகின்றான். அதில் அப்படைப்பாளி காணும் சுகத்தை கலையுணர்வற்றோர் அறியார்.  
               
      பாரதி இறந்த போது அவரருகே கூட்டம் கூடவில்லை. ஆனால், இன்று பட்டிதொட்டி எங்கும் பாதி பாடல்கள் அனைத்தும் இசையோடு இணைந்து நடனம் பரிகின்றன. பாரதி வாழ்ந்த அதே காலத்தைப் போன்றே இக்காலத்திலும் எமது தமிழ்ச் சமுதாயம் வாழுவதை நினைக்க வேதனையாக இருக்கின்றது. வாழும்போது எழுத்தாளரைப் புகழாது, வாழ்ந்து மடிந்தபின் விழா எடுப்பதன் நோக்கம் யாதென்று புரியேன். வள்ளுவர் அன்று எடுத்த எழுத்தாணியால், இன்று உலகமெங்கும் அவர் புகழ் பேசப்படுகின்றது. அவர் வேலையற்று எழுதிக் குவிக்கின்றார் என்று அன்று எத்தனை பேர் எள்ளிநகையாடினார்களோ? 
                           

    5 கருத்துகள்:

    1. உண்மை தான்
      தத்துவ ஜானி பித்தளை பேணி எண்டெல்லாம் பகிடி பண்ணுவினம்

      பதிலளிநீக்கு
    2. கோவைக்கவி(vetha.Dk)6 ஜூன், 2011 அன்று PM 7:54

      எவர் உங்களை ஏளனம் செய்தார்கனோ, அவர்களின் பிள்ளைகளே நாளை எழுத்தாளர்களானால் அவர்களையும் நாம் ஆதரிக்க வேண்டுமே...! இங்கு எழுதியதை அவர்கள் பார்ப்பார்களா?..ம்ம்....என்ன செய்வது..!!! இப்படி எழுதத்தான் நம்மால் முடியும். அந்த ஏளனங்களைத் தூக்கி வீசி, தொடர்ந்து நடக்க வேண்டியது தான். வாழ்த்துகள்! தொடருங்கள்!....

      பதிலளிநீக்கு
    3. Vijayalakshmi Viji
      சொல்லும் பொருளும் சுகமானால், வெல்லும் இவ்வுலகம். அச்சொல் மற்றவர் உள்ளத்தை நல்லதாக்க வேண்டுமென சொல்வடித்தல் குற்றமா? பாரதி இறந்த போது அவரருகே கூட்டம் கூடவில்லை. ஆனால், இன்று பட்டிதொட்டி எங்கும் பாதி பாடல்கள் அனைத்தும் இசையோடு இணைந்து நடனம் பரிகின்றன. பாரதி வாழ்ந்த அதே காலத்தைப் போன்றே இக்காலத்திலும் எமது தமிழ்ச் சமுதாயம் வாழுவதை நினைக்க வேதனையாக இருக்கின்றது. வாழும்போது எழுத்தாளரைப் புகழாது, வாழ்ந்து மடிந்தபின் விழா எடுப்பதன் நோக்கம் யாதென்று புரியேன்.......................மனதின் வலி புரிகிறது தோழியே...... உண்மை தான் ....இன்றைய நிலைமை இப்படி தான் உள்ளது..... இணைப்பிற்கு நன்றி.....


      Vetha ELangathilakam
      Before 2 and 45 minits ago I wrote my karuththu for this, first person. Now I came to see that, there is nothing. I am very sorry. எவர் உங்களை ஏளனம் செய்தார்கனோ, அவர்களின் பிள்ளைகளே நாளை எழுத்தாளர்களானால் அவர்களையும் நாம் ஆதரிக்க வேண்டுமே! இங்கு எழுதியதை அவர்கள் பார்ப்பார்களா?..ம்ம்....என்ன செய்வது..!!! இப்படி எழுதத்தான் நம்மால் முடியும். அந்த ஏளனங்களைத் தூக்கி வீசி, தொடர்ந்து நடக்க வேண்டியது தான். வாழ்த்துகள்! தொடருங்கள்!....


      Sujatha Anton
      மனித இயல்பில் ஏழனம் செய்வது இயல்பு. இங்கு கருத்துமுரண்பாடுகள் ஏற்படும் போது எழுத்து ஆற்றல் எமக்கு
      ஏற்படுகின்றது. இது தான் சமுதாயத்தையும் சென்றடைகின்றது
      இது வரவேற்க வேண்டியவிடயம். இங்கு எழுத்தாளனைத்தான்
      முதலில் விமர்சிப்பான்.சமுதாயப் பார்வை ஒரே மாதிரி இருக்கப்படாது போவதால் இந்த குறைபாட்டை முன்வைக்கின்றனர். இதில் எழுதமுற்படாதவர்கள். அவர்கள்
      கருத்துக்களை முன்வைக்கத்தெரியாமல் குறைகளை முன்வைக்கின்றனர். எழுத்து ஆற்றல் வளர்க்க வேண்டுமாயின்
      இதை ஒரு கரையில் அகற்றிவிட்டு உங்கள் பணியை தொடருங்கள்..........வாழ்க தமிழ் !!!!!!!!!!!!!!


      Prabhalini Tamilwoman Prabhakaran

      உங்கள் ஆதங்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது.
      எழுத்தாளர்களை மட்டுமா கேவலப்படுத்துகிறார்கள்? சகல கலைஞர்களையும் தான் ஏழனம்
      செய்கிறார்கள். இப்படி செய்பவர் ஞானம் இல்லாதவர்கள் அல்லது தமக்கு இதெல்லாம் தெரியவில்லையே, இப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை
      என்று பொறாமை உள்ளவர்கள் மட்டுமே.
      அவர்களுக்கு ஒரு வாய்ப்பு, ஒரு மேடையும் கையில் ஒலிவாங்கியும் கிடைத்தால் ஒரு கை பார்த்து விட மாட்டார்கள்? குறிப்பாக அவரது குழந்தைகள்
      மேடை ஏறிவிட்டால் மகிழ்ச்சியில் குதிக்க மாட்டார்கள்? ஒரு கலைஞன் இறந்த பின் விழா எடுப்பது கூட மறைந்த கலைஞனுக்காக இல்லை.
      தன புகழ்ச்சி பாட ஒரு சந்தர்பம் அல்லவா? என்ன உலகமோ?
      இவர்களை கவனம் எடுக்காமல் கலைஞர்கள் மேலும் மேலும் படைப்புகளை உருவாக்க வேண்டும். கலைஞர்களின் மாறுபட்ட சிந்தனைகள் இல்லையேல்
      கலையுலகில் ஏது புதுமை? இப்படி பட்டவர்களின் கருத்தை எதிர்பாராதீர்கள்? எவ்வளவோ சிந்திக்கும் கலைஞர்களின் படைப்புகள் யாரோ ஒரு மனிதரின் வாழ்க்கையில்
      ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவந்தால் அதுவே வெற்றி. எதையும் சிந்திக்காது மற்றவரில் குறைகளை மட்டுமே சொல்லுபவரின் வாழ்வில் குறைகளே குடியிருக்கும்.
      ஏனெனில் இவர்கள் எவர் கருத்தையும் ஏற்க மாட்டார்கள், மற்றவரை புரிந்துகொள்ள முயற்சி கூட செய்ய மாட்டார்கள் குறிப்பாக சொந்தமாக எதையும் உருப்படியாக செய்ய மாட்டார்கள். அட அதற்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேண்டும் டோய்!


      Oppilan Balu Muniyasamy

      எழுத்தாளன் ..எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ..தன் உணர்வுகளை ...அப்படியே எழுத்தில் வடிக்கிறான் ....! அதுதான் அவனது நேர்மை ..அவனது உள்ளம் ..!
      தாங்கள் சொல்வது உண்மைதான் ....இறந்த பின்பு விழா எடுப்பது ..எதற்கு என்று தெரியவில்லை ..நண்பர் பிரபாகரன் சொன்னது போல ..//ஒரு கலைஞன் இறந்த பின் விழா எடுப்பது கூட மறைந்த கலைஞனுக்காக இல்லை.
      தன் புகழ்ச்சி பாட ஒரு சந்தர்பம் அல்லவா? //
      மாற்றம் கண்டிப்பாகத் தேவை ..பகிர்வுக்கு நன்றி !


      ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

      கால வெள்ளம ஒருநாள் கரை ஒதுங்கும்! கவலை வேண்டாம்! தொடருங்கள் உங்கள் பாதையில்!!! வாழ்த்துக்கள்!!

      Gowry Sivapalan

      நீங்கள் அனைவரும் எழுத்தை ஆள்பவர்கள், கலைஞர்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள் வலியை, அவர்களே அறிவார்கள். நான் அறிந்த செய்தியை நீங்களும் அறியச் செய்வதேன். உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி. மனிதன் எதையோ பேசட்டுமே மனசப்பார்த்துக்க நல்லபடி ...இந்த வரிகளும் ஒரு எழுத்தாளனே தந்தான்.

      பதிலளிநீக்கு
    4. Srikandarajah கங்கைமகன்

      வணக்கம். ஒரு எழுத்தூளன் தனது கருத்தைச் 1.சொல்லும்போது உன் உயிர் தடையாக இருந்தால் அதையும் விட்டுவிடு என்று ஓர் ஆங்கிலப் பேராசிரியர் கூறினார். நான் சுவிசில் 1990 ம் ஆண்டு "திருந்தாத உள்ளங்கள்" என்று ஒரு சமூக சிறுகதை ஒன்றை வெளியிட்டேன். சாதாரண ஒரு காதல் கதை. விற்பனைக் இருந்த கடைகளில் அவற்றை எடுத்து புலிகள் என் கண்முன்னே எரித்தார்கள். பின்னர் "சுவிsதமிழர்" என்ற ஒரு பத்திரிகை நடாத்தினேன். இரவு இரண்டு மணிக்கு ஒரு தெலைபேசி அழைப்பு வந்தது. இன்றுடன் பத்திரிகையை நிறுறுத்தாவிட்டால் நாளை வேறு ஒரு பத்திரிகையில் உன் மரணஅறிவித்தல் வரும் என்று புலிகள் சொன்னார்கள். மனைவி மக்களின் நலன்கருதி பத்திரிகையை நிறுத்திவிட்டன். இதற்கக் காரணம் வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் 60 வீதமானவர்கள் படிபப்பறிவு அற்றவர்களாகவும் இலக்கியங்களைப் புரிந்து கொள்ளத் தகுதியில்லாதவர்களாகவுவே இருக்கின்றார்கள். வெளிநாட்டுத் தமிழ்ச் சமுதாயம் அறிவியல் ரீதியிலான இலக்கியங்களையோ: பொழுதுபோக்கு நாவல்களையோ படிக்கக்கூடாது என்பதில் சிலர் கண்ணாக இருக்கின்றார்கள். பெரும்பாலானோர் வங்கி வட்டி சீட்டு காசு சோறு போன்ற சொற்களையே சுவாசிக்கின்றார்கள். அவர்களுக்கு நமது எழுத்துக்கள் கற்பூரவாசனை தெரியாத மிருகத்தின் உணர்வுகளாகிவிடம்.


      Srikandarajah கங்கைமகன் ‎

      2. சமூகம் அவலப்படுவதைப்பார்த்து இதயத்தால் அழுபவன்தான் எழுத்தாளன். சமூகம் திருந்தாது என்பதற்காக எழுத்தாளன் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டான். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் என்பதே அவன் கொள்கை. நான் இறுதியாக எழுதிய "ஆத்மலயம்" என்ற நூல் பல இந்திய அறிஞர்களால் மதிக்கப்படுகின்றது. லண்டனில் வெளியீடு செய்தேன். பல இன்னல்கள் ஏற்பட்டாலும் என்னை நான் நேசிக்கின்றேன். மற்றவர்கள் எதுசொன்ன்னாலும் அவர்களால் முடியாத ஒன்றைத்தான் நீங்கள் செய்கின்றீர்கள். கவலையை விட்டுவிட்டு உங்கள் கடமையைச் செய்யுங்கள். நீங்கள் காலத்தை எழுதுங்கள் அது வரலாறு ஆகும். காலம் உங்களை எழுதினால் அது சுயசரிதையாகும். இரண்டையும் நான் வாசிக்கக் காத்திருக்கின்றேன்.நன்றிகள்
      22 hours ago · Like · 1 person
      Gowry Sivapalan நன்றி நண்பரே. உங்கள் வரிகள் என் மனதுக்கு ஒரு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. யார் சொன்னாலும் எழுதுபவர் கைகள் ஓங்கிக் கொண்டே இருக்கும். சிரத்தையுடன் என் ஆதங்கத்து விளக்கமும் விபரமும் தந்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


      Malikka Farook

      சொல்பவர்கள் சொல்லிக்கொண்டேயிருக்கட்டும். வெல்வோமா இல்லையா என்பதைவிட வீழமாட்டோம் என்ற உறுதியோடு தொடர்வோம் எழுத்தின் பயணத்தை . ஆத்மதிருப்தியோடு எழுததொடங்கும் ஒவ்வொன்றும் நம்மை தோற்க வைக்காது எண்ணைவிட்ட திரியாய் ஒளிர்ந்துக்கொண்டேயிருக்கும். நம்பிக்கையோடு தொடருங்கள் தோழி..

      பதிலளிநீக்கு
    5. Sakthi Sakthithasan அன்பின் கெளரி, உங்களின் ஆதங்கம் உண்மையானது. எள்ளி நகையாடுவோர் ஏராளம். பாரதியின் எழுத்தைப் பரிகாசம் பண்ணாதவர்கள் இல்லையா என்ன? கண்ணதாசன் எத்தனையோ அவமானங்களைச் சந்திக்கவில்லையா? பாரதி சொன்ன ஒரு கருத்து @ தம்பி உன் உள்ளத்தில் உண்மை இருந்தால் பேனாவை எடு எழுது @ என்றான். கவலைப்படாதீர்க்ள் எழுத்துக்கள் என்பது காலத்தின் கண்ணாடி , இன்றைய காலத்துப் படைப்புகள் வருங்காலத் தலைமுறைக்கு இக்காலத்தைக் காட்டும் கண்ணாடியாகின்றது. மனம் சோர்வடையாமல் எழுதுங்கள். உங்கள் எழுத்துக்களை ரசிப்பதற்கு எத்தனையோ அன்பர்களன்புடன் காத்திருக்கிறார்கள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...