• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

    உன்னையே நீ அறிவாய்




    வாகனத்திறப்பை மறந்ததனால் வீட்டினுள் அவசரத்தில் ஓடிவரும் கணவன், வீட்டினுள் அழகுக்காய் வைக்கப்பட்டிருந்த பூச்சாடியைத் தட்டி விழுத்தி விடுகின்றார். அது உடைந்து சிதறுகின்றது. '' ஏய்' நடைபாதையில் தான் உன் அலங்காரங்களோ? எங்கே எதை வைப்பதென்று தெரியாதா? எருமை. என்று மனைவியைத் திட்டுகின்றார். தொடர்ந்த மனைவியும் '' நீங்கள் எப்போது நிலத்தைப் பார்த்து நடந்திருக்கி;ன்றீர்கள். நிதானத்தை மூளையில் வைத்தால் தானே' என்று கத்தத் தொடங்குகின்றாள். இவ்விடயத்தையே ''ஐயோ  அவசரத்தில் வரும் வேகத்தில் இதைத் தட்டிவிட்டேனே.' ஏன்று கணவனும். ''நடைபாதையில் பூச்சட்டியை வைத்தது எனது பிழை தான்' என்று மனைவியும் அவரவர் தத்தமது பிழைகளைத் தாமே உணாந்தது எந்த வீட்டில் எப்போது நடந்திருக்கின்றது?  வாழ்க்கைப் பயணத்தில் பழிபாவம் படராது பண்புள்ளவராய் ஒருவர் வாழ தன்னைத் தானே பரிசீலனை செய்தல் அவசியம்.
                               அடுத்தவரில் குற்றம் கூறியே பழக்கப்பட்ட நாம், எம்மைப்பற்றி ஒருகணம் எண்ணிப்பார்க்கின்றோமா? இல்லை அடுத்தவர் நிலையில் நாம் நின்று அவரைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கின்றோமா? தன் மனைவி சிலம்பில் உள்ளது முத்துப் பரல்களா? மாணிக்கப் பரல்களா? என்று பரிசீலனை செய்து பார்க்காது தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னன் மதுரை எரியக் காரணமாகினான். துரியோதனன் குணமறியாது நட்புப் பூண்ட கர்ணன், கண்ணன் சூழ்ச்சிக்கு ஆளாகினான். அனைத்திற்கும் நாம் தானே காரணம். முதலில் நாம் பரிசீலனை செய்யவேண்டியது எம்மை.
                    ''சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில்
                     மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா' இப்பாடல் வரிகளில் சைகை மூலம் நாமே எம்மை அறியாது நமது குற்றத்தைப் பரிசீலனை செய்யப் பணிக்கப்படுகின்றோம். 
                               வளமாக வாழ்தற்குரிய கல்வியைக் கற்பித்து, வாழ்க்கைப்பாடம் போதிக்கும் அறநூல்கள் தன் மகளுக்குக் கற்பிக்காது விட்ட தாயார், புது வாழ்க்கை தொடங்கி சிறப்பாக வாழத் தனது மகளை மருமகனுடன் அனுப்பி விட்டு நிம்மதியாக வாழ நினைத்த அடுத்த வருடமே வாழ்க்கைத்துணை, என் வாழ்வுக்குப் பொருத்தம் இல்லாதவன் என அவனை உதறித் தள்ளி விட்டு வரும் மகளை நினைத்து வேதனைப்படுவதில் என்ன பலன் இருக்கின்றது. கணனியூடாகக் காதல் வலையில் அகப்பட்டுப் பின் கதிகலங்கும்  பெண்ணானவள், காயப்படுத்தியவனை கரிந்து கொட்டுவது முறையோ? தான் விட்ட பிழையை நினைத்து தன்னைத் திருத்துக் கொள்வது தான் தருமம். 
                               அடுத்தவர் தவறைப் பற்றி ஆழமாக விமர்சனம் செய்யும் நாம்  முதலில் அவராக மாறுவோமா? அவர் மனநிலையில் நின்று தவறைப் பரிசீலனை செய்வோமா? எம்மைப் பற்றி ஒரு நிமிடம் சிந்திப்போமா? வாழ்க்கைப் பாதையில் பண்புள்ளவராய் தொடர்வோமா?

    வியாழன், 24 பிப்ரவரி, 2011

    இனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்


                           இதயத்தைப் பிழிந்தெடுத்த கண்ணீர்த்துளிகளைத் தேக்கி வைத்த தாங்கியாய் விழிகள். அவை நாளும்நாளும் பொழுதுகளும் வடித்த வண்ணம் தொடரும் கதையாய்த் தொடர்ந்து கொண்டிருந்தது மீரா வாழ்வு. 'என்னிடம் ஏன் இவர் பற்றி மறைத்தார்கள். உண்மைக்கதை கூறியிருந்திருந்தால் இங்கு இவருக்குத் தாரமாய் வந்து தாரைதாரையாய் வார்க்க கண்ணீரை மட்டும் சேமித்து வைத்திருப்பேனா? சொர்க்கம் என் பிறந்தகம். அதைவிட்டு இந்த நரக வாழ்க்கையில் விழுந்திருப்பேனா?''துடிக்கும் அவள் இதயம் நாளும் துடிப்புடன் கேட்கும் கேள்விகள் இவை. சுதன் சுமப்பதெல்லாம் சந்தேகம். மட்டுமே. ஜேர்மனி மண்ணில் காலடி வைத்தது அவனுக்கு யோகம். உடல் வளைத்துத் தொழில் செய்தறியாத தேகமானது உரம் கண்டது அதிகம். சும்மா இருக்கும் உடல் தலைமையகம் தொழில் இல்லாதவர்க்கு எப்படித் தொழிற்படும். அடுத்தவர் வாழ்வில் குறை காண்பது மட்டுமன்றி உதவியவர் மனதுக்கு ரணங்களையும் தந்துவிடும். இதனாலேயே வள்ளுவர் 
            ' உதவி வரைத்தன்று உதவி உதவி
             செய்யப்பட்டார் சால்பின் வரைத்து" என்று சொல்லி வைத்தாரோ.! சூழல் சுற்றத்துடன் சுகமாய் மகிழ்ச்சியாய் வாழவேண்டும் என்பது மீரா மனம் சொல்லும் பாடம். சுற்றங்களை வெறுப்பது சுதன் மனம் சொல்லும் பாடம். வேறுபட்ட மனப்போக்குள்ள இருவரை இணைத்துவாழவைக்க சுற்றத்தார் நினைப்பது எந்த வகையில் நியாயம். தாயுடன் தாயகத்தில் வாழ்ந்த மீராவுக்கு உறவினர் விசாரிப்பில் தேர்ந்தெடுத்த கணவனே சுதன். அவர்களை நம்பி இ;ப்போது இவள் வாழ்க்கையிலே நம்பிக்கையைத் தொலைத்தாள். குடும்பப் பாரம் அனைத்தும் சுமந்தாள். 24 மணிநேரமும் ஆண்மகனொருவன் வீட்டில் அடைந்து கிடந்தால் அந்தப் பெண்ணுக்கு எங்கே சுதந்திரம். வார்த்தை ஆணிகள் ஏறிய மனம் சீழ் பிடிப்பதுதானே நிஐம். மீரா எச்சரிக்கின்றாள். 'புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களே! உங்கள் முகமூடியைக் கழட்டியே வரன் தேடுங்கள். அப்பாவிப்பெண்களை உண்மையை மறைத்து பொய்கூறி அவர்களை வாழ்க்கைக்காய் வரவழைக்காதீர்கள். ஊறவைத்த சோற்றுநீரை உண்டு வாழ்ந்தாலும் சோம்பேறியுடன் வாழ்வதை எந்தப் பெண்ணும் விரும்பாள். Nஐர்மன் பூமியே! நீ சோம்பேறிகளுக்குச் சிறப்பாய் மகுடம் சூட்டுகின்றாய். பிள்ளை கொடுக்கும் இயந்திரங்களுக்குப் பணத்தைத் தாரை வார்க்கின்றாய். நாளும் உழைக்கும் உழைப்பாளிகளைக் கறந்து சோம்பேறிகளின் சுகத்திற்குத் துணைப்போகின்றாய். அரசாங்கப் பணத்தில் ஆடம்பரமாய் ஆயிரம் பொய் மூட்டைகள் கட்டி அவிழ்ப்பவர்களுக்கு அள்ளிக் கொடுக்கின்றாய். தாய்நாட்டுப் பிரச்சினையைக் கூறிக்கூறி வாழும்நாட்டில் சுகம்தேடுவோர்க்களைச் சோம்பேறி ஆக்குகின்றாய். இப்படிப்பட்டவர்கள் இலங்கை மண்ணில் இருந்தால் உழைத்தே தீர வேண்டும். இல்லையேல் துண்டுவிரித்துக் கோயில் திண்ணையில் குந்தவேண்டும். அங்கே சும்மா இருக்க சோபா இராது. உண்டு கழிக்க உணவு இராது. படுத்துறங்கப் பஞ்சணை இராது. அடுத்தவரை வம்புக்கிழுக்க இலவசத் தொலைபேசி இணைப்பு இராது. உழைத்தே தீர வேண்டும். தாயகப் பெண்களே! வாழ்க்கைக்காய்ப் புலம்பெயர எண்ணியுள்ளீர்களா? அவதானம் அவதானம் தேவை. தீரவிசாரித்து வாழ்க்கைக்களம் இறங்குங்கள். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. ஒரு ஆண்மகனைக் கட்டிக்கொண்டு மாய்வதற்கல்ல. என்னோடு போகட்டும் நம்பிக்கைத் துரோகம். இனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்.


    இந்த வீடியோ கிளிப்பைப் பாருங்கள்.

    http://www.youtube.com/watch?v=J77Mlhw_D1A&feature=player_embedded

    இனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்



    இனியும் வேண்டாம் இன்னொரு துரோகம் 

    இதயத்தைப் பிழிந்தெடுத்த கண்ணீர்த்துளிகளைத் தேக்கி வைத்த தாங்கியாய் விழிகள். அவை நாளும்நாளும் பொழுதுகளும் வடித்த வண்ணம் தொடரும் கதையாய்த் தொடர்ந்து கொண்டிருந்தது மீரா வாழ்வு. 'என்னிடம் ஏன் இவர் பற்றி மறைத்தார்கள். உண்மைக்கதை கூறியிருந்திருந்தால், இங்கு இவருக்குத் தாரமாய் வந்து தாரைதாரையாய் வார்க்க கண்ணீரை மட்டும் சேமித்து வைத்திருப்பேனா? சொர்க்கம் என் பிறந்தகம். அதைவிட்டு இந்த நரக வாழ்க்கையில் விழுந்திருப்பேனா?''துடிக்கும் அவள் இதயம் நாளும் துடிப்புடன் கேட்கும் கேள்விகள் இவை. சுதன் சுமப்பதெல்லாம் சந்தேகம். மட்டுமே. ஜேர்மனி மண்ணில் காலடி வைத்தது, அவனுக்கு யோகம். உடல் வளைத்துத் தொழில் செய்தறியாத தேகமானது உரம் கண்டது அதிகம். சும்மா இருக்கும் உடல் தலைமையகம் தொழில் இல்லாதவர்க்கு எப்படித் தொழிற்படும். அடுத்தவர் வாழ்வில் குறை காண்பது மட்டுமன்றி உதவியவர் மனதுக்கு ரணங்களையும் தந்துவிடும். இதனாலேயே வள்ளுவர் 
              ' உதவி வரைத்தன்று உதவி உதவி
               செய்யப்பட்டார் சால்பின் வரைத்து'' என்று சொல்லி வைத்தாரோ.! சூழல் சுற்றத்துடன் சுகமாய் மகிழ்ச்சியாய் வாழவேண்டும் என்பது மீரா மனம் சொல்லும் பாடம். சுற்றங்களை வெறுப்பது சுதன் மனம் சொல்லும் பாடம். வேறுபட்ட மனப்போக்குள்ள இருவரை இணைத்துவாழவைக்க சுற்றத்தார் நினைப்பது எந்த வகையில் நியாயம். தாயுடன் தாயகத்தில் வாழ்ந்த மீராவுக்கு உறவினர் விசாரிப்பில் தேர்ந்தெடுத்த கணவனே சுதன். அவர்களை நம்பி இ;ப்போது இவள் வாழ்க்கையிலே நம்பிக்கையைத் தொலைத்தாள். குடும்பப் பாரம் அனைத்தும் சுமந்தாள். 24 மணிநேரமும் ஆண்மகனொருவன் வீட்டில் அடைந்து கிடந்தால், அந்தப் பெண்ணுக்கு எங்கே சுதந்திரம். வார்த்தை ஆணிகள் ஏறிய மனம் சீழ் பிடிப்பதுதானே நிஐம். மீரா  எச்சரிக்கின்றாள். 'புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களே! உங்கள் முகமூடியைக் கழட்டியே வரன் தேடுங்கள். அப்பாவிப்பெண்களை உண்மையை மறைத்து பொய்கூறி அவர்களை வாழ்க்கைக்காய் வரவழைக்காதீர்கள். ஊறவைத்த சோற்றுநீரை உண்டு வாழ்ந்தாலும் சோம்பேறியுடன் வாழ்வதை எந்தப் பெண்ணும் விரும்பாள். Nஐர்மன் பூமியே! நீ சோம்பேறிகளுக்குச் சிறப்பாய் மகுடம் சூட்டுகின்றாய். பிள்ளை கொடுக்கும்  இயந்திரங்களுக்குப் பணத்தைத் தாரை வார்க்கின்றாய். நாளும் உழைக்கும் உழைப்பாளிகளைக் கறந்து சோம்பேறிகளின் சுகத்திற்குத் துணைப்போகின்றாய். அரசாங்கப் பணத்தில் ஆடம்பரமாய், ஆயிரம் பொய் மூட்டைகள் கட்டி அவிழ்ப்பவர்களுக்கு அள்ளிக் கொடுக்கின்றாய். தாய்நாட்டுப் பிரச்சினையைக் கூறிக்கூறி வாழும்நாட்டில் சுகம்தேடுவோர்க்களைச் சோம்பேறி ஆக்குகின்றாய். இப்படிப்பட்டவர்கள் இலங்கை மண்ணில் இருந்தால், உழைத்தே தீர வேண்டும். இல்லையேல், துண்டுவிரித்துக் கோயில் திண்ணையில் குந்தவேண்டும். அங்கே சும்மா இருக்க சோபா இராது. உண்டு கழிக்க உணவு  இராது. படுத்துறங்கப் பஞ்சணை இராது. அடுத்தவரை வம்புக்கிழுக்க இலவசத் தொலைபேசி இணைப்பு இராது. உழைத்தே தீர வேண்டும். தாயகப் பெண்களே! வாழ்க்கைக்காய்ப் புலம்பெயர எண்ணியுள்ளீர்களா? அவதானம், அவதானம் தேவை. தீரவிசாரித்து வாழ்க்கைக்களம் இறங்குங்கள். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. ஒரு ஆண்மகனைக் கட்டிக்கொண்டு மாய்வதற்கல்ல. என்னோடு போகட்டும், நம்பிக்கைத் துரோகம். இனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்.

    புதன், 23 பிப்ரவரி, 2011

    அநாமதேய தொலைபேசி


    குண்டுமல்லிகைச்சரம் கொண்டுவந்த வாசனை அவள் அருகே கொண்டு சென்றது என் மனதை. திருவிழாக் கூட்டத்தின் நடுவே அழகுத் தேராய் அவள் அசைந்து வரக் கண்டு அசையாது நின்ற என் விழிகள், நீண்டு வளர்ந்த கருங்குழலின் எழிலில் மொய்த்துக் கொண்டன. ஐரோப்பியமண்ணில் இப்படி ஒரு குடும்பக் குத்துவிளக்காய் பிரகாசம் வீசும் உடல் வனப்பில் ஒரு பெண்ணா! ஆச்சரியப்பட்டு நின்ற என்னைத் தட்டித்தந்தாள், என் சிநேகிதி. '' அதுதான், அதுதான் அந்தா போகிறாளே அந்தப் பெட்டைதான் உன்ர ளவரனநவெ க்குக் கல்யாணம் பேசி குழம்பிப் போன பெட்டை. திடுக்கிட்டேன். ஆண்டாண்டாய் நான் சேகரித்து வைத்த ஆசிரியத்தரத்தின் அரைப்பகுதியை இழந்த அவமானம் ஏற்பட்டது. பக்தி, அடக்கம், பண்பான பேச்சு இவை அனைத்தும் நான் கண்ணால் கண்ட காட்சிகள். கடவுளிடம் ஒரு விடுதலை வாங்கி விரைந்தேன் வீடு நோக்கி. பாடும் காட்டுக் குயிலின் வாயை அடைக்க முடியுமா? சமுதாய சீர்கேட்டை படம் பிடிக்கும் என் பேனாவைத் தடுக்கமுடியுமா? ஏன்? எப்படி? மீண்டும் வண்டு துளைக்கத் தொடங்கியது சிந்தனைப் பெட்டகத்தை.  
             'எங்கே அவன்? என் அருமை மாணவன்?'' வினவினேன், அவன் தோழனை."விடுமுறைக்காய் நாடுவேறு பறந்து விட்டான்" 'திருமணத்தடைக்கு காரணம்தான் யாதோ? மீண்டும்துளைத்து எடுத்தது எனது வினா? விடையும் தேடித்தந்தது. காதலில் விழுந்திருந்தால், கடைசிவரைப் போரிட்டிருப்பான். இவள் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டாள். பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. அதனால் பெரிதாய்க் கவலை அவன் கொள்ளவில்லை. அநாமதேயத் தொலைபேசி ஒன்று அவன் வாழ்வில் அக்கறை கொள்வதாய் வந்திருந்தது. யாரோ ஒருவன், வார்த்தைகளில் அவள் வாழ்க்கையை எரிப்பதற்குத் தீ வைத்தான். நண்பனிடம் இருந்து வந்த ஆதாரம் எனக்குக் கைகொடுத்தது. 
             பொறுத்திருந்து அவன் வருகையைக் கண்டறிந்து சிறிது நேரம் உரிமையுடன் உரையாடினேன். சினிமாக்களிலேயே வில்லன்கள் சொந்தங்களுக்குள்ளேயே வஞ்சம் தீர்ப்பதற்கு வாளேந்துவார்கள். ஆனால், மாற்றான் வாழ்வைப் பேசியே அழிப்பதற்கு இங்கு தொலைபேசி ஏந்துவார்கள். ஒருவனுடன் தொடர்பு கொண்டுள்ள அவள், உங்கள் மகனைத் திருமணத்தில் தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறாள். இப்படிப் பல அவதூறான வார்த்தைகள் கூறிக் கூடிவாழ எண்ணும் குருவிகளைக் கலைத்து விடுகிறார்களே. அடுத்தவர் வாழ்வின் அழிவுக்குத் தூபம் போடுவோர் காணும் சுகம்தான் யாதோ? மாற்றான் துயரத்தில் மகிழ்ச்சி காணும் மனங்களாலே வாழ்வை இழந்தோர் எத்தனை. அடுத்தவர் எம்மீது கறைகளைப் பூசிவிட்டால் கழுவிவிட்டு நிமிரும் தைரியம் பாதிக்கப்பட்டோருக்கு வளர வேண்டும். இல்லையேல், பூச எத்தனிப்போரைச் சேற்றினுள் புதைத்து அமிழ்த்துவதற்குச் சாமர்த்தியம் வேண்டும். வாழ வைப்பவர்கள் திரையின் பின் நின்று நிலைமை உரைக்க மாட்டார்கள். முகமூடி அணிந்து முகவரி உரைக்காது. பொல்லாத வார்த்தை உதிர்க்க மாட்டார்கள். திருமண வயதுக்குப் படி கண்டுவிட்டால், பகுத்தறிவு வேண்டாமா! பரிசம் போட்டவள் வாழ்வு பற்றிச் சிந்திக்க வேண்டாமா! நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டு நின்ற விடயம் தொடர வேண்டுமென்று உரிமையுடன் உத்தரவு போட்டு அவன் கண்களைத் திறக்கச் செய்தேன்.

    திங்கள், 21 பிப்ரவரி, 2011

    சித்திரை நிலவே



                  சித்திரை நிலவே

     வானத்தில் தோன்றும் தேவதையே
     வானோடையில் நீராடும் வடிவழகே
     கானம்பாடிக் கவிவடிக்கக் கருவானவளே
     கோடிகாலம் குடியிருக்கும் பால்நிலவே
     பால் சோறு பருகவுன்
     பால்முகத்தை காட்டினாளே
     பாட்டி கதை சொன்னபோதும்
     கைநீட்டி நீட்டிக் காட்டினாளே
     போட்டி போட்டி நான் உணவுண்ண
     காட்டிய உன் உருவோ
     சித்திரை பௌர்ணமியில் முத்திரை பதிக்கிறது.
     தொட்டிலில் கண்டநிலா தொடர்கிறது இன்றுவரைஎன்னைத்
     தொட்டிலில் போட்ட நிலாவோஎன்னை
     விட்டு விட்டெங்கோ விரைந்து போயிற்று
     எட்ட நின்று காட்சி தரும் சித்திரை நிலவே
     தொட்டதில்லை உன்னை
     தொடரும் உன் நினைவோ விட்டதில்லை
     தொட்டுத் தொட்டு அணைத்தெடுத்தவளோ
     விட்டுவிட்டுச் சிட்டாய்ப் பறந்திட்டாள்
     பெற்று வளர்த்த உறவின் முத்தி வேண்டி
     சித்திரை முழுநிலவே!
     உன் முற்றுமுழு வடிவு காணநான்
     சித்திரையில் காத்திருப்பேன் - உன்னைச்
     சிந்தையில் வைத்திருப்பேன்.

    ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

    காதலர் தினமாமே




      
    ஒரு வயதான மூதாட்டி காதலர் தினம் பற்றிய தனது கருத்தைக் கூறவதாய் இக்கவிதை வடிக்கப்பட்டுள்ளது.                             

                                                  காதலர் தினமாமே

    கேட்டேளா சங்கதி,காதலர் தினமாமே 
    கேட்டறிந்த செய்தியைத்தான் சொல்லவந்தேன் நானுமிங்கு
    போட்டுப்போட்டு மறைச்சு வச்ச காதலுக்குத் திருவிழா
    போடியாரு பிள்ளை சொன்ன புதினமிது புதுக்கதைதான்
    பாதிரியார் வாலண்டைனால் மாறிவிட்ட சட்டத்தால 
    பொதுசனங்கள் கொண்டாடுதாம் வாலண்டைன் நாளையும் 
    சொக்குலட்டும் ரோசாப்பூவும் சொகுசா விலைப்போகுதாம் -என்
    சக்களத்தி மககூட சரசமாடப் போறாளாம்
    வெக்கக்கேடு இதால ரத்தஓட்டமும் சிறக்குமாம் 
    சொக்குலட்டுக்குள்ள உள்ள அன்ரி அசிட்டால 
    பக்குப்பக்கென்று அடிக்கிற இதயமும் சீரா ஓடுமாம்
    விஞ்ஞானி சொன்னதாகக் கதையும் அடிபடுதாம்
    பத்தைக்குள்ள பதுங்கியிருந்து பண்ணிய காதலெல்லாம் 
    வித்தைகாட்டி கிளப்பெல்லாம் பேயாட்டம் ஆடுதாம் 
    சின்னஞ்சிறுசுகளும் தலையைச் சிலுப்பிச்சிலுப்பி; ஆடுதாம் 
    என்ன புதினமோ இந்தக் காலக்கோலமிது - இனி
    என்னஎன்ன நாளுந்தான் வந்து தொலையப்போகுதோ 
    காதலுந்தான் புனிதமென்டால் தினமொன்று தேவையா 
    காதலிக்குப் பரிசுகளும் தந்துதவ வேண்டுமா
    நாளுந்தான் காதலருக்கு நல்ல தினந்தானே 
    எக்கேடு கெட்டால் நமக்கென்ன 
    வாறன்புள்ள நானுந்தான் சொக்குலட்டு வாங்கவேணும்
    என்ர புருஷனுக்கும் கொடுக்க வேண்டும்

    சனி, 12 பிப்ரவரி, 2011

    மாண்டாள் மண்டோதரி



    கம்பனால் பலமாகப் பேசப்படாத பக்கம் மண்டோதரியாயினும், அந்தப் பெண்ணுக்கு விழைந்த பங்கமது போல் ஆண்மகன்களால் பல பெண்களுக்கு ஏற்படுகின்றன. மண்டோதரி என் செய்தால் தன் வாழ்விழக்க? கணவன் மறைந்த அக்கணமே தன் வாழ்வது இழந்தாள். அவள் என் குற்றம் செய்தாள்? அவள் வாழ்வில் என் குறை கண்டான் இராவணன்? இராவணனின் கற்பு மனையாளாய் வாழ்ந்தது குற்றமா? சூர்ப்பனகை மச்சாளாய் வாழப் புகுந்தது குற்றமா?

    அசுரத் தச்சன் அற்புதமாய்ச் செதுக்கிய
    அழகுச் சிற்பம் மண்டோதரி
    அன்பில் பண்பில் பாசத்தில் கற்பில் காதலில் 
    அளவிடமுடியா அறிவின் நுட்பமவள் 
    மணிவாசகரால் அழகமர் மண்டோதரியென
    மகிழ்ந்து பாடப்பட்டவள் 
    கற்புக்கரசி சீதைக் கொப்ப 
    கவின் அழகுப் பெண்ணரசி
    இந்திரனை வென்ற இந்திரசித்தை ஈன்றவள்.
    தவழ்கின்ற பருவமதில் கோள் அரியிரண்டு 
    பற்றிக் கொணர்ந்து பகைமூட்டி விளையாடிய 
    அசுரக் குமரனைப் பெற்றவள் – அவள் 
    அழகிலென் குறை கண்டான் இராவணன்
    அன்புச் சகோதரியில் கொண்ட 
    பாசத்தின் மோசத்தால் பாதை தடுமாறினான்
    பங்கம் விழைத்தான், மண்டோதரி வாழ்விழந்தாள்.


    சரம்பெய் தூணிபோல் தளிரடி
    கயல் மகிழ் கண்
    புயல் மகிழ் புரிகுழல்
    கருங்குழல் கற்றைப் பாரம்
    அகல் அல்குல் அன்றிச் சற்று 
    மருங்கலும் உண்டுண்டு – என்றே
    மங்காக் கவி புனைந்துரத்த மண்டோதரி 
    அழகிலென் மறுக் கண்டான் - தங்கை
    பாசத்தின் நேசத்தால் பங்கம் கொண்டான் - இராவணன்
    சீதை வாழ்வை சீர்குலைத்தான் 
    சீற்றம் கொண்டான் மண்டோதரி வாழ்விழந்தாள்


    மண்டோதரி அறிவின் புலம்பல் கம்பன்
    வண்ணச் சொல்லில் வடிவமைக்கையில்
    வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
    திருமேனி, மேலும்கீழும்
    எள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும் 
    இடம் நாடி, இழைத்தவாறோ?
    கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
    மனச் சிறையில் கரந்த காதல்
    உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து
    தடவியதோ ஒருவன் வாளி – என்று
    தெள்ளிய சொல்லால் கம்பன் வடிவமைத்தான்
       மண்டோதரி
    அறிவின் பெருமை எம் 
    அகக்கண்ணால் காணமுடிகிறதல்லவா! 
    கணவன் தன்மேற் கொண்ட காதலன்றி
    இராமன் வாளி ஏதும் கண்டறியாது 
    இராவணன் உயிருக்குத் தானே 
    உலை வைத்தென்றவள் கலங்கியதன்
    கருத்தொன்றி யாம் கண்டு கொண்டோமன்றோ!


    நினைத்ததும் மறந்ததும் இலா நெஞ்சினாளென
    நினைவிலென்று நிறுத்தி வைத்த கற்புநெறி
    நினைத்துநாம் பார்க்கையிலே நிந்தித்த இராவணனின்
    நிந்தனையால் நிலைகுலைந்த தவளன்றோ!


    அழகுநலம், அறிவுநலம், பண்புநலம்
    கற்புநலம் கொண்ட மண்டோதரி வாழ்வில்
    சூர்ப்பனகை மூட்டிய தீ 
    கொழுந்துவிட்டுப் பற்றியது – தங்கை
    பாசத்தின் நேசத்தால் பலர் வாழ்வில்
    பங்கம் விழைந்தது.


    பாசமது நேசத்தால் பலர் வாழ்வில் 
    நாசமது நெருங்குமெனில் - மனிதர்
    பாசமதை பரிசீலனை பண்ணவேண்டுமென
    பாரெல்லாம் முழங்க வேண்டும்.
    பாதகியர் பலரிருக்க அப்பாவிகள் பழியாவதை
    பாருக்கெல்லாம் உணர்த்த வேண்டும்.

    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...