• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 12 மே, 2022

    சித்திரைப் பெருமகனார் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை

     


                      


    காலம் மாறலாம். கருத்துக்கள் மாறலாம், கலாசாரம் மாறலாம், வாழ்க்கை மாறலாம், வாழும் முறைகள் மாறலாம் - ஆனால் மாறாது மனிதன் மனதில் பதிந்து இருக்க வேண்டிய மாபெரும் பண்பு நன்றியென்னும் பண்பு. இது வானத்தை விடப் பெரிது, பூமியைவிடப் பெரிது, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. ஒருவருக்கு உதவி செய்ததன் மூலம் தன்னுடைய துன்பத்தை நீக்கியவர்களின் நட்பை, அடுத்த அடுத்த பிறவிகளிலும் நினைத்துப் போற்றுபவர்களே உண்மையான சான்றோர்கள் என்பார் வள்ளுவர். அந்த வகையிலே கிழக்கின் மைந்தனும், தமிழின் ஒளியும், பேச்சாற்றலின் சிகரமும், ஆன்மீகவாதியும், இலக்கிய கர்த்தாவுமாகிய முன்னாள் அமைச்சர் கலாநிதி செல்லையா இராஜதுரை அவர்களை கெரவிக்கும் முகமாக தமிழ் வான் அவையின் 23 ஆவது மாதாந்த இணையவழி பன்னாட்டு இலக்கியச் சந்திப்பிலே சித்திரைப் பெருமகனாராக இணைந்திருக்கின்ற ஐயா செல்லையா இராஜதுரை அவர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் வணங்கி மகிழுகின்றேன். இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதையிட்டு பெருமகிழ்ச்சி கொண்டு வருக வருக என்று வரவேற்கின்றேன். 

    இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளர்களாக இலங்கையில் இருந்து இணைந்திருக்கின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் தம்பிராஜா ஈஸ்வரராஜா அவர்களையும், எழுத்தாளர் தவராஜா இராஜேந்திரன் அவர்களையும், பிரான்சிலிருந்து கலந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் அவர்களையும் வணங்கி மகிழுகின்றேன். வருக வருக என்று வரவேற்று மகிழுகின்றேன்

    இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கும் பேராசிரியர் மௌனகுரு சின்னையா அவர்களையும், சுவாமி விபுலானந்த அழகியற்கற்கை நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழக பணிப்பாளர் பாரதி கென்னடி அவர்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர் உஷாந்தி துரைசிங்கம் அவர்களையும், ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய அதிபர் சுதாகரி அவர்களையும், களுவாஞ்சிக்குடி முன்னாள் நூலகர் ரமணி ஜெயபாலன் அவர்களையும்,  அத்துடன் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்திருக்கின்ற பாடுமீன் ஸ்ரீகந்தராஜா அவர்களையும், இங்கிலாந்திலிருந்து கலந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களையும், செய்தியாளர் சீவகன் அவர்களையும், எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜா அவர்களையும், கனடாவில் இருந்து கலந்து கொண்டிருக்கும் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் அவர்களையும், ஜெர்மனியில் இருந்து கலந்து கொண்டிருக்கின்ற எழுத்தாளர் புத்திசிகாமணி அவர்களையும், தம்பிராஜா பவானந்தராஜா அவர்களையும்,  எழுத்தாளர் ஜெகதீஸ்வரி மகேந்திரன் அவர்களையும்.. .. .. .. .. .. .. டென்மார்க் இலிருந்து நன்றியுரையாற்ற வந்திருக்கின்ற கலாநிதி ஜீவகுமாரன் அவர்களையும் என் கண்களுக்கு அகப்படாது தவறிவிடப்பட்ட அனைவரையும் அன்புடன் இருகரம் கூப்பி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். வருக வருகவென்று வரவேற்று மகிழுகின்றேன் 

    இலக்கியம், இலக்கிய கர்த்தாக்கள், இலக்கியம் சார்ந்த இசை, நடனம், நாட்டுக்கூத்து, போன்ற கலைகள் என்று தடம் பதிக்கும் எங்களுடைய தமிழ் வான் அவையிலே இம்முறை சிறந்த அரசியல் வாதியும், இலக்கிய பேச்சாளரும், ஊடகவியலாளருமான ஐயாவைக் கௌரவிப்பதில் மீண்டும் மீண்டும் பெருமை கொள்ளுகின்றது இந்தத் தமிழ் வான் அவை. 

    ஐயாவுக்கு 295 வயதாகின்றது. இந்த மேடை அரசியல் மேடை அல்ல என்பதை நாம் எல்லோரும் மனதிலே பதித்துக் கொள்வோம். அவருடைய சமூகப்பணி, அவருடைய ஆற்றல்கள், திறமைகள், அவரால் நீங்கள் பெற்ற அனுபவங்கள் சாதகங்கள், இவை பற்றிப் பேசுவதன் மூலம் அவரைக் கௌரவித்து மகிழுவோம். அவரின் மனதிலே மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம். உரையாளர்களையும், நடனம், இசை, கவிதை என்று என்னால் இயன்றவரை ஒழுங்குபடுத்தியுள்ளேன். ஐயாவினுடைய இரண்டு புத்தகங்களை அவருடைய மகள் பூங்கோதை அவர்கள் அனுப்பியிருந்தார். அதன் உதவியுடன் ஐயாவைப் பற்றிய ஒரு காணொளி செய்திருக்கின்றேன். அதற்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகி;ன்றேன். ஐயா மலேசியாவில் இருந்து ஆற்றிய உரையினை பத்மநாபன் காண்டீபன் அவர்கள் அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றியைத் தெரிவித்து அதில் ஒரு 6 நிமிடங்கள் வெட்டி உங்களுக்கு ஒளிபரப்புகின்றேன். 

    கருத்துரை பகிர்ந்து கொள்வதற்குப் பலர் இங்கு வந்து அமர்ந்திருக்கின்றார்கள். ஐயா கலாநிதி செல்லையா இராஜதுரை அவர்களுக்கும் எல்லோருக்கும் இன்றைய நாள் மறக்க முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நல்லநாளாக அமையும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடைய ஒத்துழைப்பையும் தயவுடன் வேண்டி இன்றைய நிகழ்வை ஆரம்பிக்கின்றேன். 



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...