• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 8 மே, 2022

    அன்னையர் தின வாழ்த்08.05.20222022







    அளவுகடந்து நாம் உச்சரித்த ஒரே சொல் அம்மா
    உரக்கச் சொல்லியிருக்கிறாம்
    அழுது சொல்லியிருக்கின்றோம்.
    ஆவேசமாகச் சொல்லியிருக்கின்றோம்.
    குழைந்து சொல்லியிருக்கின்றோம்
    கெஞ்சிச் சொல்லியிருக்கின்றோம்.
    அதட்டிச் சொல்லியிருக்கின்றோம்
    எத்தனை உணர்ச்சிகள் இருக்கின்றனவோ
    அத்தனை உணர்ச்சிகளிலும் பயன்படுத்திய
    ஒரே சொல் அம்மா
    அடம்பிடித்திருக்கின்றோம்
    ஆட்டிப் படைத்திருக்கின்றோம்.
    சரியென்று நிரூபித்துப் பார்த்திருக்கின்றோம்.
    முட்டாளாக்கியிருக்கின்றோம் - எத்தனைமுறை
    நாம் முட்டாளாக்கினாலும்
    விரோதியாக்கினாலும்
    எதிரியாக்கினாலும்
    அன்பை மட்டுமே பொழியும் அதிசய உறவு அம்மா
    அம்மா என்று சொல்லிப் பாருங்கள்
    எத்தனை முறை சொன்னாலும்
    அத்தனை முறையிலும்
    அந்தச் சொல்லிலேயே தேன் கலந்திருக்கும்
    கட்டியணைப்பிலே சுகம் இருக்கும் - எமை
    தொட்டுப் பேசுகையில் சுகம் இருக்கும்
    தாய் மடிதந்த சுகம் தரணியில் எங்கும் இல்லை
    அவள் கண்டிப்பான வார்த்தையிலே
    எதிர்கால வளர்ச்சிக்கான மந்திரம் இருக்கும்
    கண்ணைக் காட்டி எம்மைக் கட்டிப் போட வைக்க
    அவளால் மட்டுமே முடியும்
    சோறு ஆக்கிப் போடுவது அவளானாலும்
    சுவை பார்ப்பது நாமாகத் தான் இருக்கும்
    அந்தக் கைப்பக்குவத்திற்கு நிகராக
    எந்த சமையல் நிபுணரும் உலகத்தில் இல்லை
    அம்மாக்கு நிகராக யாரும் பிறக்கவும் முடியாது
    இருக்கவும் முடியாது


     

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...