பிட்யூட்டரி - ஹைபோபைஸிஸ் (Pituitary Gland – Hypophysis)
ஆக்னை தியானம் செய்வதனால் பிட்யூட்டரி கிளான்ட் ஐ சரியான முறையில் இயங்கச் செய்யலாம். இதன் தொழிற்பாடு என்ன? இது என்ன தொழிற்பாட்டை உடலில் செய்கின்றது என்பதனை அறிய முழுவதுமாக இந்தக் கட்டுரையைப் படியுங்கள்
மூளையிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட அந்தக் கட்டளைகளை ஏற்று உடலிலுள்ள அத்தனை உறுப்புக்களும் தொழிற்பட சுரப்பிகள் உதவுகின்றன.
சுரப்பிகள் 2 வகைப்படும் நாளமுள்ள (நரம்பு) சுரப்பிகள், நாளமில்லா சுரப்பிகள். நாளமுள்ள சுரப்புகள் என்சைம் என்னும் நொதியத்தைச் சுரக்கின்றன. நாளமில்லா சுரப்புகள் ஹார்மோன்களைச் சுரக்கின்றன.
நாளங்கள் என்பது என்சைம்களை வெளியேற்ற நுண்ணிய துளைகளைக் கொண்ட குழாய் போன்ற அமைப்பையுடைய நரம்புகளாகும். குறிப்பிட்ட நாளங்கள் வாயிலாக என்சைம் குறிப்பிட்ட உறுப்புக்களுக்கு கடத்தப்படும். உதாரணமாக உமிழ்நீர் சுரப்பு, வியர்வை, பால் சுரப்புகள்.
நாளமில்லாச் சுரப்புகள்(Endocrine glands) நாளங்களின் மூலமாக ஹார்மோன்களைக் கடத்தாமல் நேரடியாக இரத்தத்தில் ஹார்மோன்களை கலக்கச் செய்வது. எடுத்துக்காட்டாக பிட்யூட்டரி, தைரோய்ட், தைம்ஸ்
தைரோய்ட், தைம்ஸ்
தைம்ஸ்கணையம் என்பது இரட்டைப் பண்புச் சுரப்பியாகும்
இது நாளமுள்ள, நாளமில்லா என்று இரண்டு பண்புகளிலும் செயற்படுகின்றது. நாளமுள்ள சுரப்பியாக கணையம் செயற்படும். நாளமில்லா சுரப்பியாக கணையத்திலுள்ள லாங்கர் ஹான் திட்டுகள்(பாங்கிரியாஸ்) . பாங்கிரியாஸ் என்ற கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலையில் உடலில் உள்ள திசுக்கள் இன்சுலினைப் பயன்படுத்துவது இல்லை. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து இன்சுலினும் அதிகரிக்கிறது. கொழுப்பும் சேர்கிறது. மேலும் வயது, மரபணு, மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்றவை இதற்குக் காரணமாகின்றன.
உடலிலுள்ள அனைத்து உறுப்புக்களின் ஆரோக்கியத்திற்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று செயற்படுபவை இந்த நாளமில்லாச் சுரப்பிகளே. உடலிலுள்ள அன்றாட வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், ஆபத்தின் போது தப்பி ஓடுவது, பாலியல் தூண்டல், இனப்பெருக்கம், போன்ற செயற்பாடுகளுக்கு நாளமில்லாச் சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களே தீர்மானிக்கின்றன.
பிட்யூட்ரி கிளான்ட்- Mastergland
அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் கட்டுப்படுத்துவது பிட்யூட்டரி சுரப்பி என்றாலும் இந்த பிட்யூட்டரி சுரப்பியைக் கட்டுப்படுத்து ஹைப்போதலாமஸ் என்னும் உறுப்பு.
போஸ்டீரியர் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வெளிவரும் வாசோபிரஸின் ஹார்மோன் போதிய அளவு சுரக்காத பட்சத்தில், சிறுநீர் அளவுக்கு அதிகமாக நமது உடலில் இருந்து வெளியேறும். இந்த பாதிப்பைச் சரிசெய்ய, வாசோபிரஸின் ஹார்மோனை ஊசி மூலமாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ மருத்துவர் ஆலோசனையின்படி எடுத்துக் கொள்ளலாம்.
உடலின் சமநிலையை ஒழுங்குபடுத்தும் ஹோமியோஸ்டாஸிஸ் ஹார்மோனைச் சுரக்கிறது. அத்துடன் பிற நாளமில்லாச் சுரப்பிகளையும் தூண்டக்கூடிய டிரோபிக் வகை ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. இது இரண்டு பிளவுபட்ட மடல்களைக் கொண்டது. முன்புற மடல் அடினோஹைப்போபைஸிஸ் பின்புற மடல் நியூரோஹைப்போபைஸிஸ்.
முன்புறம் சுரப்பி திசுக்களையும் பின்புறம் நரம்பு திசுக்களையும் கொண்டுள்ளது. எனவே இரண்டாவது மடல் நேரடியாக எந்தவித சுரப்புக்களையுமு; சுரப்பதில்லை. அதற்குப்பதிலாக ஹைபோதலாமஸில் சுரக்கின்ற வாசோபிரஸின் மற்றும் ஆக்ஸிடோசின் ஆகிய இரண்டு ஹார்மோன்களையும் சேகரித்து வைத்து இதன் வாயிலாக வெளியேற்றுகிறது.
அடினோஹைப்போபைஸிஸ் இல் 5 விதமான ஹார்மோன்கள் சுரக்கின்றன.
1. GH - Growth Hormone
2. TSH – Prolactin தைரோய்ட்டைத் தூண்டும் ஹார்மோன்
தைரொக்ஸின், டிரையோடோதைரோனின் (Triiodothyronine) என்னும் இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கின்றது. அதிகமாகச் சுரந்தால் ஹைபோதைரோய்டிசம் என்பர். அதிக தாகம், அதிக பசி, நடுக்கம், எரிச்சல், எடை குறைவு, கண்பார்வை குறைபாடு, மாதவிடாய் குறைபாடு, இருதய பாதிப்பு ஏற்படலாம்
3. ACTH - அட்ரினோ கார்டிகோட்ராபிக் ஹார்மோன்
அட்ரீனல் சுரப்பியைத் தூண்டும். அதிகரித்தால், (Cushing Disease) வரும். திடீர் உடல் எடை கூடுதல், ரத்த அழுத்தம், இரத்தத்தில சர்க்கரை அளவு அதிகரித்தல், எலும்புகள் உறுதியின்மை ஏற்படும்
4. PRL - லாக்டோஜானிக் ஹார்மோன்
மார்பக வளர்ச்சியை ஊக்குவிப்பது, பால் சுரப்பிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பது,
5. GTH – இரண்டு உட்பிரிவுகள்
1. FSH போலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன். விந்தணுக்கள் உருவாவதை ஊக்குவிக்கும். பெண்களின் அண்ட செல்கள் வளர்வதற்கு உதவும்.
2. LH - இது லுட்டினைசிங் ஹார்மோன். ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஐயம் பெண்களின் ஈஸ்ட்ரோஜன், புரஜெஸ்ட்ரோன் உற்பத்திக்குக் காரணமாகின்றது. அதிகமாகச் சுரந்தால் ஈஸ்டரோஜன், டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும்.
நியூரோஹைப்போபைஸிஸ்.
இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கின்றது.
1. ADH - ஆண்டிடையூரிட்டிக் என்னும் வாஸோபிரஸின்
சிறுநீரக நாளங்களில் அதிகப்படியாக வெளியேற்றப்படும் நீரைக் கட்டுப்படுத்தி அந்த நீரை மீண்டும் உடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும். இந்த ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் அதிகளவு நீர் கழியும். இதை பலியூரியா என்பர் சர்க்கரையில்லா நீரழிவு. , இரத்த அழுத்தத்தைச் சமப்படுத்தும் வேiயையும் செய்கிறது.
2. ஆக்ஸிடோஸின்
பெண்களுக்கு குழந்தை பிறப்பின்போது கருப்பை சுரங்கி விரியும் தன்மையை ஊக்கப்படுத்தும். பால் சுரப்பிகளில் பாலைத் தேவையான அளவில் கட்டுப்படுத்தி வெளியேற்றும் வேலையைச் செய்கிறது.
விளக்கம் மிகவும் அருமை...
பதிலளிநீக்கு