• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 1 ஏப்ரல், 2020

    மனிதர் எதிர்நோக்க இருக்கும் மனநிலை பாதிப்புக்கள்





    மார்கழி மாதம் 1 ஆம் திகதி ஒரு கடல் உணவு சந்தைக்குப் போய் வந்த ஒருவரே இந்த ஆட்கொல்லி நோயின் ஆரம்ப மனிதனாகக் காணப்படுகின்றார். அதன் பின் சீனாவில் பரவத்தொடங்கியது. ஆனால் இது பற்றீரியா போல் அல்லாது மனித உடலுக்குள்ளேயே வாழ்ந்து மனித செல்களைத் தன் பிடிக்குள் வைத்திருந்து உடலுக்குள் வாழக்கூடியது. இதனை தைமாதம் 8 ஆம் திகதியே வைரஸ் எனக் கண்டு பிடிக்கப்பட்டது. அதுகூட மனிதனிடமிருந்து மனிதனுக்கு தொற்றக் கூடியது என்று தை 22 ஆம் திகதியே உலகசுகாதார நிறுவனம் அறிவித்தது. அதற்கிடையில் ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் வரை பரவி விட்டது.  இந்த வைரஸ் ஐ அழிக்க வேண்டும் என்றால், அதை மட்டும் அழிக்க வேண்டும் மனிதனுக்குத் தேவையான செல்கள் அழியாது பாதுகாக்க வேண்டியது அவசியம். இதன் கடினம் மிக அதிகம். மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடமாகவாவது எடுக்கும் என்று கூறப்படுகின்றது. பூமிக்குள் அடி எடுத்து வைத்துவிட்டது. பெரியம்மை, மலேரியா போன்று இதனை அழிக்க முடியாது என்பது யாவரும் அறிந்ததுதான். ஆனால், தடுப்பூசி போட்டுத் தடுக்க முடியும். சீனாவினுடைய சிறந்த கட்டுப்பாட்டினால், சீனாவில் கடந்த ஒரு வாரமாக நோயாளியாக எந்த ஒரு புதிய பதிவும் இல்லை. 

    கண்மூடி ஒரு தடவை உலகத்தை அகக் கண்ணால் பாருங்கள். அச்சம், அச்சம், அச்சம் சிந்தனையில் கொரொனா தவிர எதைத்தான் கொண்டுவர முடிகின்றது. நாம் வீட்டிற்குள் அடைந்துவிட்டோம் என்பதைத் தாண்டி உலகமக்கள் ஒவ்வொருவராக சிந்தித்துப் பார்ப்போம். அரசியல்வாதிகள் எல்லாம் மக்களுக்கு என்ன முடிவைக் கொடுக்கலாம்? மக்களை எவ்வாறு திருப்திப்படுத்தலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலைமையைச் சமாளிக்க முடியாத 54 வயதுடைய ஜேர்மனிய ஹெசன் மாநில நிதியமைச்சர் Dr.Thomas schäfer என்பவர் 28.03 அன்று தற்கொலை செய்து கொண்டார் என நம்பப்படுகிறது.

    மக்களின் எதிர்பார்ப்புக்களை குறிப்பாக நிதி உதவிகளை பூர்த்தி செய்ய முடியுமா என்று கவலைப்பட்டிருக்கின்றார். ரயில் பாதையில் இவருடய உடலைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். ஹொரொனா தொற்றுநொயால் ஏற்பட்ட நிலைமைகளைச் சமாளிக்க இவர் இரவுபகலாக உழைத்திருக்கின்றார். அவர் கலந்து கொண்ட இறுதிக் கூட்டத்தில் மிக மனமுடைந்தே வீட்டிற்குச் சென்றிருக்கின்றார். இவர் தன்னுடைய மாநிலத்திற்கு 1 பில்லியன் ஒயிரோக்களை வழங்கியிருக்கின்றார். இன்று இவர் இல்லை.

    மருத்துவர்கள், தாதியர்கள், வயோதிபர்களைப் பராமரிப்பவர்கள் போன்றோரின் மனநிலைகளை மனதில் நிறுத்தும் போது இதுவரை மருத்துவர்கள் கடவுளைப் போன்றவர்கள் என்று கருதியிருந்த கருத்துக்கு நேரடிச் சாட்சிகளாக இவர்கள் அமைகின்றார்கள். 

    போருக்குப் போகின்ற போராளிகள் தாம் திரும்பி வருவோமோ என்ற சந்தேகத்துடனேயே போவார்கள். அதேபோல் இவர்களும் மருத்துவசாலைக்குள் போகின்ற நாம் திரும்ப சுகதேகிகளாக வருவோமோ என்று அறியாமலே செல்கின்றார்கள். திரும்பி வருகின்ற நாம் நோய்காவிகளாகத் திரும்பிவந்து வீட்டில் உள்ளவர்களுக்கு நோயைக் கொடுத்துவிடுவோமோ என்று பெரும் அச்சத்துடனேயே காணப்படுகின்றார்கள். சொந்த வீட்டிலேயே குடும்பத்தாருடன் தொடர்பின்றி தனித்திருக்கின்றார்கள். தூக்கமின்றி மருந்துகளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களும், கைபிடித்து வயோதிபர்களைக் கழுவித் துப்பரவு செய்பவர்களும், இரவிரவாக முழித்திருந்து நோயாளிகள் படும் வேதனைகளைக் கண்ணுற்றுப் பராமரிப்பவர்களும் என தம்முடைய உயிரைத் துச்சமாக மதித்துப் பணிபுரிகின்றர்கள். 


    ஒரு மருத்துவத்தாதி சொல்கின்றாள் வழமையாக வயோதிபர்கள் இறக்கும் தறுவாயில் இருந்தால், அவர்களுடைய உறவினர்களை அழைத்து அவர்களை அந்நோயாளியைப் பார்ப்பதற்கு விடுவதாகவும், இறந்தால் உறவினர்கள் எல்லாம் வந்து தம்முடைய இறுதியஞ்சலியைச் செலுத்துவதற்கு விடுவதாகவும் தற்போது இந்நோயில் இறப்பவர்களை யார் கண்ணிலும் காட்டாமல் அப்படியே எரிக்கக் கொண்டு போய்விடுவதாகவும் இந்நிலைமை தன்னைச் சரியாகப் பாதிப்பதாகக் கூறினாள். இவ்வாறான பணிபுரிபவர்கள் மனநிலையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். 


    ஒரு குடும்பத்தின் தலைவனின் வருமானம் அவன் மாதாந்தக் கடமைகளை முடிப்பதற்குச் சரியாக இருக்கின்றது. அவ்வருமானம் அவன் வேலை செய்யும் நிறுவனம் பூட்டப்படுகின்ற போது நிறுத்தப்படுகின்றது. செலவுக்காக கிடைக்கின்ற பணம் போதாமல் போய்விடுகின்றது. அவன் மனநிலையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றான். 

    மாதாந்த வருமானத்தைப் பெருகின்ற தொழிலதிபர்கள். வருமானமே இல்லாமல் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் அல்லாடுகின்றார்கள். அரசாங்கத்தால் கிடைக்கின்ற பணத்திலிருந்து தொழிலாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு போதாதபோது தமது சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்கின்றார்கள். எதிர்காலத்தை எப்படிக் கொண்டு போகப்போகின்றோம் என்று மனநிலையால் பாதிக்கப்படுகின்றார்கள்.

    பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை இறுதித்தேர்வு மாணவர்கள் இதுவே இறுதி வருடம் அடுத்து காலடி எடுத்து வைக்கப்போகும் உயர்வை நினைத்துக் கனவு கண்டவர்களுக்கு இந்த வருடம் காலதாமதமாகப் போகின்றது என்று நினைத்துக் கலங்கி நிற்கின்றார்கள். திருமணங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன. எதிர்பார்ப்புக்கள் தகர்த்து எறியப்பட்டுள்ளன. 


    உறவினர்கள் நோயால் வேதனைப்படுவதை அவர்கள் கூடவே இருந்து கவனிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலமையை நினைத்து வேதனைப்படும் உறவினர்கள் மனநிலையை நினைத்துப் பாருங்கள். இதைவிட நோயால் துன்பப்படுபவர்கள் வேதனையை ஒரு தடவை நினைத்துப் பாருங்கள். நோயின் ஆக்கிரமிப்புக் குறையும் காலத்தில் மனநோயாளர்களை கவனிக்கும் நிலை உலகமெங்கும் வரப் போகின்றது. 

    இப்போது உலகம் எம்மை உலுக்கிப் போடுவதைப் பார்த்தீர்களா?  இன்று 01.04 ஜேர்மனியில் 71.808 பேர் நோய்க்குள்ளாகியுள்ளார்கள். 775 பேர் இறந்துள்ளார்கள். டியலநசn மாநிலம் அதிக பாதிப்புக்குள்ளாகி விட்டிருக்கின்றது. 15.505 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.  

    5 கருத்துகள்:

    1. கொரோனா வந்ததால் எத்தனை மாற்றங்கள்.
      எத்தனையோ சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கு
      கொரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாப்போம்.

      பதிலளிநீக்கு
    2. உலகத்தில் பெரும்பாலானவர்கள் இப்போது அச்சத்தில்.... விரைவில் நிலை சீரடைய வேண்டும். நலமே விளையட்டும்.

      பதிலளிநீக்கு
    3. ஜெர்மனி தகவல்கள் வரும்போதெல்லாம் உங்கள் ஞாபகம் வரும்... நீங்கள் கவனமாக இருங்கள் சகோதரி...

      பதிலளிநீக்கு
    4. கொரானா உலகையேப் புரட்டித்தான் போட்டுவிட்டது
      மக்களின் பல நம்பிக்கைகளை தூள் தூளாக்கிவிட்டது

      உடலால் பாதிக்கப்பட்டவருக்கு உடனிருந்து உறவினர்களால் உதவக்கூட இயலா துர்பாக்கிய நிலையை அல்லவா இந்தக் கொரொனா உருவாக்கிவுள்ளது

      நம்பிக்கையோடு இருப்போம்
      இதுவும் கடந்துபோகும்

      பதிலளிநீக்கு
    5. நாம் தரும் ஒத்துழைப்பே, நம் சமுதாயத்திற்கு பலன் தரும். நல்ல நாள் திரும்பும் நாளை எதிர்பார்க்கிறேன்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...