ஜூன் 24 அன்று கண்ணதாசன் நினைவுநாள். உலகத் தமிழர்களின் வாயில் முணுமுணுக்கும் காதல், தத்துவம், தாலாட்டுப் பாடல்களின் கவித்துவத்தால் மனித மனங்களை அடிமைப்படுத்தியவர். அதுமட்டுமல்ல பல மனித மனங்களின் சோகத்திற்கும், மகிழ்ச்சிக்கும், நித்திரைக்கும் தேடும் வரிகளுக்குச் சொந்தக்காரன். பழைய தமிழ் இலக்கியங்களின் கற்பனைகளையும் அழகு தமிழ் சொற்களையும் கலந்து தன் கற்பனை என்னும் தேனூற்றி அற்புதமான பாடல்களை யாத்தளித்து, சேரமான் காதலி என்னும் நாவலுக்காக சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர்.
இவரது குடும்பம் பெரிது. 3 திருமணம். 15 வாரிசுகள். பிறந்தது ஓரிடம் வளர்ந்தது ஓரிடம். காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்பச் செட்டியார், இவரை வளர்ப்பதற்காக இவருடைய தாய்தந்தைக்கு 7000 ரூபாய் பணம் கொடுத்து வாங்கினார். ஆரம்பப் பெயர் முத்தையா என்றும், அதன் பின் வளர்ப்புத் தந்தையிட்ட பெயர் நாராயணன் என்றும் மாற்றப்பட்டது. இன்று கண்ணதாசன் என்னும் பெயர் உலகறிந்த பெயராக நின்று நிலைக்கின்றது. திரையுலகின் மறக்கவொண்ணாத நாயகனாய் திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதியது மட்டுமல்ல நடிகனாகவும் விளங்கியிருக்கின்றார். இவது பராசக்தி, கறுப்புப்பணம், சூரியகாந்தி, இரத்தத்திலகம் ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார்.
16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். பல இன்னல்களையும் சோகங்களையும் சுமந்தார். திருமகள் பத்திரிகையில் புரூப் திருத்துனராக வேலைகேட்டு வந்து பத்திரிகை ஆசிரியராக அமர்த்தப்பட்டார். பின் திரைஒலி, சண்டமாருதம், தென்றல் திரை ஆகிய பத்திரிகையில் பணியாற்றினார். அனைத்துப் பத்திரிகைகளிலும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியதனால், இவரது இலக்கிய ஆளுமையை உலகம் அறிந்து கொண்டது. அதன் பின் தான் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதத் தொடங்கினார். இவரது முதல் கதை கிரகலட்சுமி என்னும் பத்திரிகையில் “நிலாவொளியிலே" என்னும் பெயரிலே வெளிவந்தது. அதிலிருந்து தீவிரமாக எழுதத் தொடங்கினார்.
காப்பியங்கள், கவிதை நூல்கள், சிற்றிலக்கியங்கள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், புதினங்கள்,சிறுகதைகள், வாழ்க்கைச் சரித்திரங்கள், கட்டுரைகள், சமயநூல்கள், நாடகங்கள், உரைநூல்கள் போன்ற வடிவங்களில் தமிழ் இலக்கிய உலகில் வலம் வந்துள்ளார். சுமார் 5000 க்கும் அதிகமான பாடல்களை திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார்.

கன்னியின் காதல் என்ற திரைப்படத்திற்கு எழுதிய “கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே" என்னும் பாடலே இவர் திரைப்படத்துறைக்குள் பிரவேசித்த முதல் அறிமுகப் பாடல். அடுத்தடுத்து முயன்றால் பலன் கிடைக்கும் என்னும் தத்துவப்பாடலாக இது அமைந்திருந்தது. மூன்றாம்பிறையில் வந்த “கண்ணே கலைமானே" என்னும் உறங்கச் செய்யும் பாடலே இவரது இறுதிப் பாடலாக அமைந்தது. அவர் உறங்க அவர் பாடிய பாடலாயும் அமைந்திருந்தது. இடையில் வந்த பாடல்களுக்கும் கவிதைகளுக்கும் நான் சக்தியைப் பெற்றதே கம்பராமாயணப் பாடல்கள் தான் என்று தன் வாயாலேயே கூறியிருக்கின்றார். “காலமெனும் ஆழியிலும், காற்று மழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு. அவன் தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு" என்று கம்பருக்கு அவர் பாடிய பாடல்கள் கண்ணதாசனுக்கும் பொருந்துவதாக இருக்கின்றது.
பாடல்களால் பணம் குவிந்த பணத்தை திரைப்படம் தயாரித்து அழித்தார். சேமிப்புப் பழக்கமில்லாத கண்ணதாசன் “பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரன் போல ஏங்கி நின்ற வாழ்க்கைதான் எனக்கு வாய்த்திருக்கின்றது என்று தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கின்றார். சந்தர்ப்பத்திற்கேற்ப பாடல்கள் எழுதுவதில் திறமையானவர். பணக்கஸ்டத்தில் சகோரர்கள் உதவி செய்ய மறுத்த போது “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே" என்னும் பாடலை எழுதினார். விஸ்வநாதன் அவர்கள் நெஞ்சிலோர் ஆலயம் படத்திற்காகப் பாடல் எழுத வரும்படி கண்ணதாசனை அழைத்துக் காத்திருந்த போது அவர் வரவில்லை என்ற காரணத்தால், கோபப்பட்ட விஸ்வநாதன் அவர்கள் “இனிமேல் கண்ணதாசனிடம் பாடல்கள் கேட்கப் போவதில்லை" என்று கூறியதை அறிந்த கண்ணதாசன் “சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே" என்னும் பாடலை எழுதிக் கொண்டு போய்க் கொடுத்தார்.
மனவாசம், வனவாசம், எனது வசந்த காலங்கள், எனது சுயசரிதம் என்னும் ஆகிய 4 புத்தகங்களும் ஒருவன் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்காக தன் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டிய புத்தகங்களாகும். அவர் தன்னுடைய பல பாடல் வரிகளில் தன் வாழ்க்கையையே படம் பிடித்துக் காட்டியுள்ளார். “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு. ஒரு கோலமயில் என் துணையிருப்பு|| இறப்பதற்கு முன்பே தனக்குத்தானே எழுதிய இரங்கற்பாவில் “ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு" என்று இறுதி வரிகளை எழுதியுள்ளார்.
இவர் கற்பனையில் வரைந்த பாடல்களுக்குச் சில எடுத்துக்காட்டுக்கள்
காதல் பாடல்
“பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
பாவை, உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் - நானாக வேண்டும்
மடிமீதில் விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்"
“கம்பன் கண்ட சீதை உங்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராபதி – மங்கை அமராபதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயேகதி – என்றும் நீயேகதி"
தாலாட்டுப்பாடல்
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி"
சோகப்பாடல்
“உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உன்னதன்றோ"
“வானிலுள்ள தேவர்களை வாழ வைக்க விஷம் குடித்தான்
நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்"
தத்துவப்பாடல்
“ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்"
“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினுள் உண்டு"
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது என்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை"
இவ்வாறு காலத்தால் அழியாத பல திரையிசைப் பாடல்களைத் தந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்தும் மறையாது பல உள்ளங்களில் மறக்க முடியாது இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.

அனைத்து பாடல் வரிகளும் மனதில் உள்ளன...
பதிலளிநீக்குகண்ணதாசன் அவர்கள் மறைந்தும் மறையாது பல உள்ளங்களில் மறக்க முடியாது இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.
பதிலளிநீக்குநான் நிரந்தரமானவன் அழிவதில்லை...என்ற வரிகள் நினைவிற்கு வந்தன.
பதிலளிநீக்குஅறிந்த செய்திகள்தான் ஆனாலும் எனக்குமீண்டும் நினைவூட்டிச்செல்கிறது இந்தக்கட்டுரை.நன்றி கௌசி.கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன் தான் அதில் எந்த மாற்றுக் கருத்தமல்லை.தான் பிறந்ததைத்தவிர தனது ஊர் வேறெந்தப்பாக்கியமும் செய்யவில்லை என்று செருக்கோடு முகவுரை எழுதியவன் கண்ணதாசன். இந்தக்கட்டுரைக்கு எனது வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு