நூல் ஆசிரியர் திருமதி .சுந்தராம்பாள் பாலச்சந்திரன்
யேர்மனி ஹிந்து சங்கரர் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய காலச்சார விழாவின் முதலாம் நாள் நிகழ்வு 21.4.2018 அன்று 15.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரபல சிறுகதை எழுத்தாளர் சிவ அடியவள். திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரன் அவர்கள் எழுதிய கந்தலோக கலாபம் நூல் அறிமுகமும் சிவரூப சங்கீர்த்தனம் நூல் வெளியீடும் ஆலய குரு சிவஸ்ரீ பாஸ்கரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
சிவ அடியவள் திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரன்; இந்துப் புரணங்களில் மிக முக்கியமாகக் கருதப்படும் கந்தபுராணக் கதைகளையும்; பெரியபுராணத்தில் நாயன்மாரின் வரலாறுகளையும் எமக்காகவும் எம் புதியதலைமுறை இலகுவாகப் புரியும்படியும் எளிமைப்படுத்தி இலகுபடுத்தி சுவையுற கந்தலோக கலாபம் என்னும் நூலையும் சிவரூப சங்கீர்த்தனம் என்று பெயரிட்ட 63 நாயன்மார்களின் வரலாற்று நூலையும் யேர்மனி ஹம் ஹிந்து சங்கரர் ஸ்ரீகாமாட்சி அம்பாள் சந்நிதியில் வெளியீடு செய்தார்.
இந்நூல் வெளியீட்டுவிழா யேர்மனி தமிழ் கல்விச்சேவை அனுசரனையுடன் நடைபெற்றது. மங்களவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியினை யேர்மனி தமிழ்கல்விச்சேவை பொறுப்பாளர் ஸ்ரீஜீவகன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார். தமிழ்மொழி வாழ்த்து திருமதி. விஜயகலா கிருபாகரனின் மாணவிகளான அர்ச்சனா அம்பிகைபாலன், சாயகி கிருபாகரன் இருவரும் பாடினார்கள். வரவேற்புரையை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான திருமதி சந்திரகௌரி. சிவபாலன் (கௌசி) அவர்களும் இரு நூல்களின் அறிமுக உரையினை ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை செயற்குழு உறுப்பினரும் கவிஞருமான அம்பலவன் புவனேந்திரன் அவர்களும் நூல் ஆய்வு உரையினை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர் சாந்தினி துரையரங்கன் அவர்களும், வாழ்த்துரையை எழுத்தாளர் ஜெகதீஸ்வரி மகேந்திரன் அவர்களும் வழங்கினர். இந்நூல் ஹிந்து சங்கரர் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய குருக்கள் சிவஸ்ரீ பாஸ்கரக் குருக்கள் கரங்களினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை உறுப்பினர்கள் எழுத்தாளர் திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரனை பொன்னாடை போர்த்தி மாலை அணுவித்து கௌரவித்தனர்.
இறுதியில் நூலாசிரியர் சிவ அடியவள் திருமதி. சுந்தராம்பாள் பாலச்சந்திரன் ஏற்புரையை வழங்கினார். சிறப்பான இவ்விழா பல அம்பாள் அடியார்கள் முன்னிலையில் நடைபெற்று இனிதே முடிவுபெற்றது

அருமையான ஆவணப்படுத்தல்
பதிலளிநீக்குபாராட்டுகள்