• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 7 மார்ச், 2018

    பெண்ணென்னும் ஒரு அதியப்பிறவி



          





    மகளிர் தினம் என்று எழுதுவதற்கு ஆரம்பிக்கும் போதே மனதினுள் உற்சாகம் பொங்குகின்றது. ஏன்? நான் ஒரு பெண் என்பதனாலா? ல்லை பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் பெறும் பேறு ருக்கின்றது என்னும் பெருமையினாலா? எதை எழுதுவது? அவள் தாய்மைப் பண்பையா? பாசத்தின் பெருமையையா? அவள் உற்சாகத்தையா? அவள் மனத்தைரியத்தையா? அவள் உறவுகளைக்கட்டிக்காக்கும் உன்னதத்தையா?வற்றுக்கெல்லாம் காரணத்தையா? ல்லை த்தனை பண்புகளையும் ஆட்டிப்படைக்க நினைக்கும் ஆண்மையையே ன்று மகளிர் தினம் கொண்டாட வைக்கும் திறமையையா? எதுவாக ருந்தாலும் என் மனப்பதிவுகளை ப்பதிவில் மனம்பதிக்கின்றேன்.


                         ஆண்கள் பல விடயங்களை மனதில் வைத்திருப்பதில்லை. ஆனால், பெண்கள் அதிக விடயங்களை மனதில் பதித்து உறவுகளைப் பேணுகின்ற உன்னத பணிகளைச் செய்கின்றார்கள். பிறந்தநாள், திருமணநாள், பிள்ளைகளின் பாடசாலை விடயங்கள் போன்றவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கும் பெரும்பணி பெண்களுடையதாகவே ருக்கின்றது. ஆண்களை விட பெண்களுக்கு ஞாபகசக்தி அதிகம் என்பதை விளக்குவதற்காக ''why man never  remember and women never forget'' என்னும் நூலை அமெரிக்காவிலுள்ள டாக்டர் Marianne J. Legato என்பவர் ஆய்வு செய்து எழுதியுள்ளார். பெண்கள் ஒரு விடயத்தை அறிகின்ற போது அதனை பிறரிடம் கூறவேண்டும் என்னும் எண்ணத்தில் உள்வாங்குவதினால் அதனை அப்படியே ஞாபகத்தில் வைத்திருக்கின்றார்கள். ஞாபகசக்தியை வளர்ப்பதற்குரிய ஒரு உத்தியும் அதுவே. ஒரு விடயம் எமது ஞாபகத்தில் பதிக்க வேண்டுமானால், அதனைப் பிறருக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டும். ந்தத் தன்மையே பெண்களுக்கு ஞாபகசக்தியை மேம்படுத்துவதற்குக் காரணமாக அமைகின்றது.


                         ஒரு தாய் எத்தனை காததூரம், எவ்வாறான ரைச்சல். அத்தனைக்கும் மத்தியில் தன் குழந்தை அழும் சத்தத்தை ஊகித்துக் கொள்வாள். துவே தாய்மைக்கு அடையாளமாக ருக்கின்றது. அதற்குக் காரணம், ஆணின் மூளையைவிடப் பெண்ணின் மூளை அளவில் சிறியது. அதனால், ஒலிகளைத் துல்லியமாகக் கேட்கும் திறன் மிக்கது என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். தனால்த்தான் என்னவோ ஆண்கள் பெண்கள் எது கேட்டாலும் தெரியாதவர்கள் போல் ருப்பதும், எத்தனை தடவை சொன்னாலும் செவிடன் காதில ஊதின சங்குபோல் ருக்கின்றீர்கள் என்று பெண்கள் ஆண்களை கேட்பதும்!


                        ஓரு தாயானவள், ஓர் ரவு தனது பிள்ளை உணவருந்தவில்லை என்றால், உயிரே போய்விடுமாப்போல் கவலை கொள்வாள். தந்தையோ பசித்தால் சாப்பிடுவார்கள் தானே என்று கூறிவிட்டு மறுவேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவார். ஆனால், பிள்ளைகளுக்கு ஏற்படும் கவலைகளையோ, நோய் வேதனைகளையோ, தனக்கு ஏற்பட்டதைப்போல் மனதில் போட்டு அதனைப் பற்றி எப்பொழுதும் சிந்தித்துக் கவலை கொள்கின்ற தன்மை தாய்மைக்கே சொந்தமானது.


                         ஒரு பெண்ணின் மகத்துவத்திற்கும் பெண்மையின் மனத்தைரியத்துக்கும் எடுத்துக்காட்டாக அமைவது எதுவென்றால், பெண்களுக்கு ஏற்படும் பிரசவவலி 3 தொடக்கம் 4 மணித்தியாலங்கள் தொடர்ந்து ருக்கும். ஒவ்வொரு 10, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை டுப்புப் பகுதியில் தொடர்ந்து ழுத்துப் பிடித்துப் பின்  விடுவதாக ருக்கும். ஒரு மனிதன் தாங்கும் வலி 45 அலகுகளாகவே ருக்க, ஒரு பெண்ணுக்குப் பிரசவவலியானது 52 அலகுகளாக ருக்கின்றது. து 20 எலும்புகள் ஒன்றாக உடைவதுபோன்ற வலியுடையது. வ்வாறு வலி பொறுத்து குழந்தையைப் பிரசவித்துவிட்டு மீண்டும் அடுத்த குழந்தைக்குத் தயாராகும் மனத் தைரியம் பெண்ணுக்கு உண்டு. ஆனால், ஆண்களோ ஒரு தடிமல் வந்தால் போதும் இறக்கும் நிலைமையில் இருப்பது போல் வீட்டையே இரண்டாக்கிப் போடுவார்கள். ஒரு தடிமலையே தாங்க முடியாதவர்கள் இந்த இடுப்புவலி வந்தால் என்ன செய்வார்களோ!


                    ஒரு விடயத்தை அவதானித்தல், மனநிலை, கவலை போன்றவற்றை வெளிப்படுத்தல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் ஆண்களின் மூளையை விடப் பெண்களின் மூளையே தெளிவாகச் செயற்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூளை தெரியப்படுத்தியுள்ளார்கள். ஒரே சமயத்தில் பல விடயங்களை உள்வாங்கும் தன்மையும் பெண்களுக்கே உண்டு. Frontal Cortex என்னும் மூளையின் முன்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது உள்ளுணர்வு, சுயகட்டுப்பாடுகள் உள்ளவர்களாக ருக்கின்றார்கள். பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே வீட்டுக் கணக்கை சரிபார்ப்பது, சமையல் செய்வது, கணவனின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது போன்றவற்றை ஒரே நேரத்தில் செய்கின்றாள். ஒன்றைச் செய்யமாட்டோம் என்று உறுதி கொண்டார்கள் என்றால், உயிரே போனாலும் பிடிவாதத்திலிருந்து றங்கப் போவதில்லை. தனாலேயே வர்களைப் பிடிவாதகாரர்கள் என்று ஆண்கள் திட்டித் தீர்க்கின்றார்கள்.             


                    உலகுக்கே ஒன்றரை வரிகளில் பொதுமறை தந்த திருவள்ளுவர் 4 வரிகளில் ஒரு பாடல் தனது மனைவிக்காகப் பாடியுள்ளார்.


    "அடியிற் கினியாளே அன்பு உடையாளே

    படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி

    பின் தூங்கி முன்னெழும் பேதாய்

    னிதா(அ)ய் என்தூங்கும் என்கண் ரவு"


    என்று தன் மனைவியின் றப்பில் உலகப்பொதுமறை தந்த மகாமுனிவரே பாடியிருக்கும் போது பெண்ணின் பெருமையினைப் புரிந்தும் புரியாத ஆண்களோ ங்கு அதிகம்.


                 ரேடியத்தை உலகுக்களித்த மேரிகியூரி அம்மையார், விஞ்ஞான உலகில் முத்திரை பதித்தவர். முறையான கல்வி வசதியில்லாத நிலையிலேயே 18ம் நூற்றாண்டு கரோலின் கர்ஷேல் என்னும் விண்வெளி வீராங்கனை 3 புதிய நட்சத்திரக்கூட்டம், 8 வால்நட்சத்திரம் மற்றும் பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளார். ஆயினும் ஐரோப்பிய மண்ணில் கூட அடக்குமுறை தலைவிரித்தாடியது. 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் சூனியக்காரிகள் என்று உயிருடன்  தீ வைத்துக் கொழுத்தப்பட்டனர். அவர்கள் செய்த சூன்யம் என்னவென்றால், ஆண்மருத்துவர்கள் ருக்கும் போதே நோயுற்றவர்களைத் திறமையான முறையில் சிகிச்சையளித்து குணமாக்கியமையே ஆகும்.


                           இவ்வாறு பெண்மையின் யல்பான ஞானத்தில் பொறாமை கொண்ட ஆண்வர்க்கம், பெண் னத்தின் அடக்குமுறையை வளர்த்து கொண்டிருந்த போது 1910ம் ஆண்டு டென்மார்க்கிலுள்ள Koppenhagen என்னும் டத்தில் Clarazetkin என்பவர் ஒரே தொழில்புரியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான வருமானம் கிடைத்தல் வேண்டும், கர்ப்பம் அடைந்த பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படல் வேண்டும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படல் வேண்டும். என்னும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தார். வர் தூக்கிய போர்க்கொடியே மகளிர்தினத்திற்கு அடிகோலியது. 1917ல் ரஷ்யாவிலுள்ள Sanktpetersburg என்னும் டத்தில் ஆரம்பித்த பெண் ஆடைத்தொழிலாளிகளின் வேலைநிறுத்தத்தை நினைவுகூருமுகமாக 1921 பங்குனி 8 ல் சர்வதேச மகளிர்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. தற்பொழுது வருடாவருடம் உலகலாவிய ரீதியில் த்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.



    ‘‘நம்மோடு உயிர் கொண்டு வாழ்ந்தவரை

     மயிர் அளவும் பயன் செய்யாமல் நீர்த்தபின்னே

     தீயதை வைக்குமுன் மயிரதை சரைப்பதால்

     ஏதொன்றும் பயனுன்டோ''


    என்று பாடினார் ஒரு சித்தர்.

    அதனால், உங்களைக் கவர்ந்த சாதனைப் பெண்மணி அன்னை திரோசாவோ Angela Merkel லோ ல்லை. நீங்கள் சந்தோசமாய் ருந்தால் சந்தோசமாய் ருப்பாள். நீங்கள் உடல்வருந்த துடித்துப் போவாள். உங்கள் கவலையைத் தன் கவலையாய் எடுத்துக் கொள்வாள். உங்களை சாதனை மனிதனாய் ஆக்கி வைப்பாள். காலம் முழுவதும் உங்களைப் பற்றியே நினைத்திருப்பாள். அவள் தான் உலகத்திலே உங்களைக் கவர்ந்த பெண்மணி.



    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்




    4 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    உள்ளத்தின் குரல் - பிரேம் ராவத்

      உள்ளத்தின் குரல் ஆசிரியர்:   பிரேம் ராவத் வெளியீடு: 2024 12 அத்தியாயங்களில் 357 பக்கங்கள்   இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியை...