விண்வீழ் வெண்பனிபோல் மண்மேல் அவதரித்த
தண்ணொளி மைந்தனை தரணியில் போற்றுவோம்
இன்னல்கள் தாங்கியே இறையருள் தந்திட்ட
இறைவனை நேசிப்போம் அவர்புகழ் பாடுவோம்
மாட்டுத் தொழுவத்தில் மார்கழி குளிரினில்
மானிடம் காக்கத் தரணியில் தோன்றிய
மரியன்னை மைந்தனை பரிசுத்த இயேசுவை
மனங்களில் ஏற்றுவோம் இறைமைந்தனைப் போற்றுவோம்
அன்பெனும் மழையில் அகிலமே நனைய
ஆண்டவன் தோன்றினார், அவனியைத் தாங்கினார்
செந்தணல் குருதி வெண்ணுடல் தாங்கியே
எம்துயர் காத்த மைந்தனைப் போற்றுவோம்
கல்வாரி மலையிலே கல்லடி தாங்கியே
சிலுவையை ஏந்தினார் முள்கிரீடித்தைத் தாங்கினார் – எம்
பாவங்கள் நீக்கிய பரிசுத்த ஆண்டவரை
நாளெல்லாம் போற்றுவோம் இந்நாளிலே கொண்டாடுவோம்
அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்
அருமை எமது வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு