பசுபதிராஜா அவர்களின் வாழ்த்துக் கவிதை
🔻
காலக் கனிரசத்தின் கருவாய் உருவாகி
அகத்தியன் அகத்திலே சிந்தித் தேன் ஊறி
வள்ளுவன் உளியிலே வாய்மைப் பண்பாடி
கம்பன் வீட்டுத்தோட்டத்தில் கவிதைப் போராடி
என் முற்றம் வந்த முத்தமிழே வணங்குகிறேன் வாழி
உனையன்றி எனைக்காக்க ஏது அம்மா இங்கு நாதி
கிழக்கு மாகாணம் அப்பழுக்கற்ற கல்விக்கும் கலைக்கும் பிரதானம் - நீங்கள்
அழகு தமிழின் ஆற்றல் சொல்ல ஊற்றாக வந்த இனிய தமிழ்ப் பிரவாகம்
உலவும் தென்றல் வந்து தேன் தொட்டு உங்கள் தமிழ் மீது முத்தமிடும்
பலவும் தெரிந்த பலமும் உள்ளமும் இன்று மன்றம் வந்து மாற்றம் காட்டும்
பூமி மகள் பூந்தமிழ்க்கோர் இனிய புன்னகையால் இட்டபொட்டு
தேவி இவர் சிந்தனைகளாய் சீர்பரப்பி நிற்கும் திசைகள் எட்டும்
வாவி மகள் வாய் திறந்து வாழ்த்து மழை வரம்புயரக் கொட்டும்
வியத் தமிழப்பெண் கௌரியக்காவின் ஆற்றல் கேட்டு எங்கள் கரங்கள் தட்டும்
தாயகத்தில் தொடங்கிய தமிழ் ஆர்வம் என்னும் இனிய பேராறு
தயக்கமும் தடையுமின்றி மேலை மண்ணிலும் நின்றாடும் பலவாறு
உயர்வும் ஊக்கமும் மிக்க ஆசிரியப் பணி உங்கள் பெரும்பேறு
பெயர்ந்த புலத்திலும் அயராது உழைத்தால் இங்கு வாழும் தமிழ் அடலேறு
ஓடிவிளையாடு பாப்பா மூலம் பிள்ளைகளுக்குப் பாடஞ்சொன்ன பெண்பாரதி
நாடிவந்த நட்புக்காக என்னையே நானறியேன் என்ற நாவல் அன்பின் ஆரத்தி
தாடியற்ற பெரியாராய் என்னோடு தர்க்கிக்கும் அறிவின் பெருமைக் கைகோர்ப்பு
படிக்கப் படிக்க வரும் பரம்பரையே விழிக்கும் முக்கோண முக்குளிப்பு
இலக்கியம் என்பது காலத்தின் முகங்காட்டும் முக்கிய கண்ணாடி
துலங்கியது உங்கள் படைப்புக்கள் யாவும் இணையற்று மக்கள் முன்னாடி
எழவேண்டும் வீழ்ந்த தமிழ்மானம் உங்கள் எண்ணங்களே ஏணிப்படி
ஆளவேண்டும் ஆற்றல்களால் அனைத்து நெஞ்சங்களில் அன்பே முதற்படி
ஆண்கள் படைப்பது முகவரிக்கான சுயநல சுயவரம்பிற்காய்
பெண்களே எல்லாப் பிரசவத்திற்கும் இயற்கை வழங்கிய மருந்தாய்
ஆதிக்க மனப்பாங்கு பெண்ணை வாயுக்குள் நாவாய் அமைத்து முடித்தது
சாதிக்கப் பிறந்த பெண்மை மோதித் தன் முழுமை காட்டிக் கனிந்தது
கல்லும் சாந்தும் கொண்டு கட்டிவிட்டால் அவை கல்விக்கூடம் ஆகாது
பக்கங்களும் பாகங்களும் புத்தகம் நல்ல புதையலாய் விளங்கிவிடாது
நோக்கங்களும் நல் ஆக்கங்;;களும் அமைந்துவிட்டால் காலச்சரித்திரம் ஆகும
பூக்கும் புரட்சிக்கு முக்கோண முக்குளிப்பு வீரவிதை நிலம் உருவாக்கும்
பொய்மை புறங்காட்டி ஓடும் உங்கள் படைப்புக்கள் பல அறிந்தவன் நான்
உண்மை ஒடுக்கப்பட்ட உலகின் மீட்சிக்கு குரல் கொடுத்தவர் நீங்கள் தான்
அற்புதமான அறிமுகக் கவிதை
பதிலளிநீக்குஇயல்பாக வந்து விழுந்து
அழகு சேர்த்த இயைபுத் தொடைக்காக
மீண்டும் ஒருமுறை படித்து இரசித்தேன்
பகிர்ந்து அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சார்
நீக்குரசித்தேன்...
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரி...
மிக்க நன்றி சார்
பதிலளிநீக்குவரிகள் இரசித்தேன்.
பதிலளிநீக்குஇனிமை - பெருமை- தொரட்டும் வாழ்த்துகள்.
https://kovaikkothai.wordpress.com/
வேதாவின் வலை.2
மிக்க நன்றி
நீக்கு