• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 15 மே, 2016

    நூல் அறிமுகவிழா



    இனிய நந்தவனம் பதிப்பகமும் தடாகம் இலக்கிய அமைப்பும் முகவரி அறவாரியம் அமைப்பும் ஏற்பாடு செய்த பன்னாட்டு எழுத்தாளர்கள் மாநாட்டில் எனது முக்கோண முக்குளிப்பு என்னும் கட்டுரை நூல் 21/5/2016 மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் அறிமுகம் செய்யப்படுகிறது. 
                      
                              இந்நூல் கோலாலம்பூரில் அறிமுகம் செய்வதற்கான முழு ஒத்துழைப்பையும் ரூபன் அவர்கள் வழங்கியிருக்கின்றார். கவிஞர்களை பாராட்டுவதற்காக போட்டிகள் வைப்பதுடன் பதிவுகளுக்கு உடனடியாக பின்னூட்டம் இடுவதும் எழுத்தாளர்களைப் பாராட்டுவதும் இவரது தமிழ் மீது கொண்ட ஆர்வத்திற்கு அடையாளமாகப்படுகின்றது. தடாக இலக்கிய அமைப்பு கலைமகள் ஹிதாய அவர்களும் முழு ஆர்வத்தையும் தந்துள்ளார். இவற்றுக்கெல்லாம் மேலாக இத்தொடர்புகளுக்கு மூல காரணகர்த்தா ரமணி சார் தான். இந்நூலுக்கான பின்னட்டைக் கவிதைகூட அவரே தந்துள்ளார்.

                                          எழுத்தை நேசிப்பவர்கள் இதய சுத்தியுடன் இருக்கும் வரை தமிழ் வாழும். தொடர்புகளும் இணைவுகளும் தாமாக வந்து சேர்வதில்லை. நற் தொடர்புகள் நன்மையிலேயே சென்றடையும். இவ்விழா நிச்சயமாக நன்றாக நடைபெறும் என்று நான் நம்புகின்றேன். இந்தியாவில் ரமணி சார் ஒத்துழப்புடன் வலையுலக சந்திப்பு நிகழ்விலும் இந்நூல் அறிமுகமாவதற்கு  ஆவன செய்வதாகவுள்ளார். 

    12 கருத்துகள்:

    1. எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோ

      பதிலளிநீக்கு
    2. ரூபன் அவர்களின் சிறந்த பணியை நானும் பாராட்டுகின்றேன்.
      தங்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்!

      பதிலளிநீக்கு
    3. சிறந்தவைகள் எப்போதும் எங்கும் எவராலும்
      அங்கீகரிக்கப்படும் ,கௌரவிக்கப்படும்

      சிறந்தவர்கள் எப்போதும், எங்கும், எவராலும்
      அங்கீகரிக்கப் படுவர்,கௌரவிக்கப்படுவர்

      அந்தக் கௌரவிக்கும் கூட்டத்தில் ஒருவராக
      இருக்கத்தான் வாய்ப்பும் அதிர்ஸ்டமும்
      வேண்டும்

      நூலின் உள்ளடக்கம் போலவே
      வடிவமைப்பும் மிகச் சிறப்பாக இருக்கிறது

      பதிப்பகத்தாருக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும்
      மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    4. யாதோ ரமணி

      சிறந்தவைகள் எப்போதும் எங்கும் எவராலும்
      அங்கீகரிக்கப்படும் ,கௌரவிக்கப்படும்

      சிறந்தவர்கள் எப்போதும், எங்கும், எவராலும்
      அங்கீகரிக்கப் படுவர்,கௌரவிக்கப்படுவர்

      அந்தக் கௌரவிக்கும் கூட்டத்தில் ஒருவராக
      இருக்கத்தான் வாய்ப்பும் அதிர்ஸ்டமும்
      வேண்டும்

      நூலின் உள்ளடக்கம் போலவே
      வடிவமைப்பும் மிகச் சிறப்பாக இருக்கிறது

      பதிப்பகத்தாருக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும்
      மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    5. நூல் வெளியீடு வெற்றிவிழாக்காண வாழ்த்துக்கின்றேன்.

      பதிலளிநீக்கு

    6. மேலும் சிறப்படைய இனிய வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...