நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் நயனங்களின் தேடலும்
முக்கோண முக்குளிப்பு நூல்
அறிமுக விழாவும்
30.04.2016 அன்று நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் இங்கிலாந்து Harrow என்னும் நகரத்திலே நயனங்களின் தேடல் 2016 என்னும் நிகழ்வினை மிகச் சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்விலே முன்னாள் நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரி ஆசிரியராகிய என்னுடைய முக்கோணமுக்குளிப்பு என்னும் நூலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இளைப்பாறிய முன்னாள் அதிபர் திருமதி. அசலாம்பிகை கல்யாண சுந்தரம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். பழைய மாணவனும் நூலகவியலாளருமான திரு. செல்வராஜா நடராஜா அவர்களும் இந்நிகழ்வினில் கலந்து கொண்டது இந்நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சேர்த்தது.
இந்நிகழ்விலே பழைய மாணவர்களின் பிள்ளைகளின் நடனங்கள், வில்லுப்பாட்டு, பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வரவேற்புரையினை திருமதி. ராகினி அருண்குலசூரிய அவர்களும் நன்றியுரையினை திருமதி. சுபா ஜூலியன் அவர்களும் வழங்கினர். தலைவர் வர்மன் மங்களராஜா அவர்கள் தனது தலைமையுரையிலே நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வளர்ச்சிக்கு சென்ற வருடம் கணனிகள் வழங்கியமை பற்றியும் இனி வரும் காலங்களில் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு தங்களின் மேலான ஒத்துழைப்பு இருக்கும் என்று உறுதியளித்தார். பிரதம விருந்தினர் தனது உரையில் பழைய மாணவர்களின் ஊக்கத்தினையும் ஒத்துழைப்பினையும் பாராட்டிப் பேசினார். நான் மாணவர்களைக் கற்பிக்கும் போது ஏற்பட்ட அநுபவங்களையும் இச்சங்கத்தினை வளப்படுத்துவதற்காக மாணவர்களின் ஒத்துழைப்புத் தேவை என்பதனையும் வலியுறுத்திப் உரையாற்றினேன். திரு. செல்வராஜா நடராஜா அவர்கள் இப்பாடசாலை ஆரம்பகால கட்டங்களை நினைவுறுத்திப் பேசினார்.
முக்கோணமுக்குளிப்பு என்ற நூலினை நூலகவியலாளர் செல்வராஜா நடராஜா அவர்கள் விமர்சனம் செய்தார். வாசிப்புப் பழக்கம் அருகி வரும் இன்றைய காலகட்டத்தில் இந்நூல் வாசிப்பின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாகவும் கல்வித்திட்டத்துடன் இணைக்கப்படக்கூடிய தகுதியை உடையதாகக் காணப்படுவதாக எடுத்துரைத்தார். பாடசாலை முன்னாள் அதிபர் திருமதி அசலாம்பிகை கல்யாணசுந்தரம் அவர்கள் முதல் பிரதியை நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார். நான் எனது ஏற்புரையில் இந்நூல் நீர்கொழும்பு விஜயரெத்தினம் இந்து மத்திய கல்லூரியிலே முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள், மத்தியில் அறிமுகம் செய்யப்படுவது இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாகக் கூறினேன். மூன்று பரிமாணங்களை எடுத்துள்ள இந்த நூலின் தோற்றம் உருவான தன்மை பற்றிய சகல விடயங்களையும் நன்றியுணர்வினையும் எடுத்துரைத்தேன். ஒருமேடை இரு நிகழ்வாக நயனங்களின் தேடல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
எனது இந்நூல் பன்னாட்டு எழுத்தாளர் மாநாட்டில் 22.05 மலேசியாவிலும், 25.05 சிங்கப்பூரிலும் அறிமுகம் செய்யப்படுவதாக உள்ளது.
இந்நிகழ்ச்சி நடந்த நேரம் நாம் இலண்டனில் நின்றும்
பதிலளிநீக்குஅதில் கலந்து கொள்ள முடியாமை சிறு குறையாகவே இருந்தது.
நினைவு படுத்தினேன் இன்று கௌசியின் நூல் வெளியீடு என்று.
ஆயினும் நடந்தது மகிழ்வு . மறுபடியும் இனிய வாழ்த்துகள்.
ஆஹா, படங்களும் செய்திகளும் மிகவும் இனிமை.
பதிலளிநீக்குதங்களின் இந்த அருமையான நூல் வெளியீட்டு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.
மிக்க மகிழ்வூட்டும் செய்தியுடன் கூடிய
பதிலளிநீக்குபதிவு, படங்களுடன் விரிவாகப் பகிர்ந்த விதம்
உடனிருந்த் பார்ப்பது போன்று சுகமளித்தது
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குநூல் எங்கு கிடைக்கும் சகோதரியாரே
நன்றி சார். வலையுலகத்தினர் சந்திப்பு ஜூலாய் அளவில் நடைபெறும் என்று ரமணி சார் சொன்னார். அங்கு அறிமுகம் செய்யவுள்ளேன். பின் அட்டையில் ரமணி சாரின் வாழ்த்தும் உண்டு.
பதிலளிநீக்குரமணி சார். நீங்கள் தரும் ஊக்கம் என் றும் என் ஊன்றுகோல். உங்கள் வாழ்த்தும் பின்அட்டையை அழகு செய்கின்றது.
பதிலளிநீக்குகோவைக்கவி, கோபு சார் உங்களை என் நூல் வந்தடையும். மிக்கநன்றி
பதிலளிநீக்கு