• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 25 அக்டோபர், 2015

    செவ்வரத்தை நூல் வெளியீட்டு விழா (17.10.2015)


    இலக்கியப் பரப்பிலே இனம் காணப்பட வேண்டிய நிகழ்வு. இலைமறை காய்களாய், இலங்கையில் போர் நிமிர்த்தங்களினால் வறுமையில் நலிவடைந்து வாழுகின்ற  எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பணியிலும் உதவி செய்யும் மனப்பாங்கிலும ஜேர்மனி எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில்; 134 பேர்களின் 141 கதைகள் பங்கு பற்றின. 17 வயதிலிருந்து 73 வயது வரையுள்ளோர் சிறுகதைகளை எழுதி அனுப்பியிருந்தார்கள். 

    இதில் தெரிவுக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட முதலாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு 25,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும் இரண்டாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு10,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும், மூன்றாம் பரிசுக்குரிய சிறுகதைக்கு 5,000 ரூபாய்கள் பரிசுத் தொகையும் வழங்கியிருந்தார்கள். அத்துடன் இத்துடன் இணைத்து போட்டியில் பங்குபற்றிய 50 சிறந்த சிறுகதைகளைத் தெரிவுசெய்து செவ்வரத்தை என்னும் நூலாக 17.10.2015 அன்று வெளியீடு செய்திருந்தார்கள். 

    அற்புதமாக நடந்தேறிய இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து வைத்திய கலாநிதி திரு.ஞானசேகரம் அவர்கள் வருகை தந்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக டென்மார்க் நகரிலிருந்து எழுத்தாளர் ஜீவகுமரன் அவர்களும் இலங்கை ஆசிரியர் சங்க ஓய்வு பெற்ற செயலாளர் திரு. சரவணபவானந்தன் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். நூலாய்வினை ஆன்மீக எழுத்தாளர் திருமதி. ஞனம் ஞானசேகரன் அவர்கள் செய்திருந்தார். 

    இந்நிகழ்வின் சில நிழற்படங்கள் 








     










    8 கருத்துகள்:

    1. மிக்க சந்தோஷம்
      புகைப்படங்கள் நிகழ்வை நேரடியாகப்
      பார்ப்பதைப் போன்று இருந்தன
      பரிசு பெற்ற சிறுகதைகளைப் பகிர்ந்தால்
      இந்தியாவில் உள்ள நாங்களும் படிக்க
      வாய்ப்பாக இருக்குமே
      இல்லையெனில் தமிழகத்தில் கிடைக்குமிடம்
      தெரிவித்தால் வாங்கிப் படித்துவிடுவோம்
      வாழ்த்துக்களுடன்...

      பதிலளிநீக்கு
    2. மிகவும் அற்புதமான படங்களை காட்சிப்படுத்தி பகிர்ந்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

      பதிலளிநீக்கு
    3. சிறந்த முயற்சி
      படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எல்லோருக்கும் நன்றி.
      இவ்வாறான முயற்சிகள் தொடர வாழ்த்துகிறேன்.

      http://www.ypvnpubs.com/

      பதிலளிநீக்கு
    4. மிக்க மகிழ்ச்சி..... பெருமைக்குரிய நிகழ்வு..... வாழ்த்துக்கள்....

      பதிலளிநீக்கு
    5. அருமையான செயல்த்திட்டம் இன்றைய தேவையும் கூட இப்படி நூல்கள் வெளிவருவது. பகிர்வுக்கு நன்றிகள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...