ஆணே ஜாக்கிரதை உன் கடிவாளமோ பெண்ணின் கையில்
உடல்பலம் உன்னிடம் மனபலம் பெண்ணிடம்
உடல் பலம் ஒருநாள் குன்றிப்போம்
மனபலம் குன்றுவதில்லை புரிந்துகொள்
உன் அருகே அவள் இருந்தால் நீ அழகு
அவளின்றி நீ செல்லும் விழாக்கள் அழகோ சொல்
அவளின்றி நீ வாழும் இல்லமும் அழகோ சொல்
தூண்டி விளங்கிடும் விளக்குப் போல்
உலகில் நீ விளங்கிட தூண்டுபவள் அவளே – உன்னைத்
துலங்கச் செய்பவள் அவளே
பெண்ணின் திறம் குறைந்திடில்
உந்தன் நடையும் நிமிருமோ சொல்
அழகாய் இருப்பாள் அழகைக் கொடுப்பாள்
அறிவாய் இருப்பாள் அறிவைக் கொடுப்பாள்
நிலையாய் உன் பெயர்
உலகில் நிலைத்திட
உனக்காய் வாரிசை திடமாய்ச் சுமப்பாள்
சுற்றம் சேர்ப்பாள் சொந்தம் காப்பாள்
இயங்கா உன்னை இயங்க வைப்பாள்
வற்றாத கடலென வாழ் இன்பம் தருவாள்
தன்னைத் தாழ்த்தி உன்னை உயர்த்துவாள் – நீ
தேடிப்பெற்ற செல்வம் அவளே – உன்னைத்
தாங்கி நிற்கும் பூமியும் அவளே
பொறுமையும் பண்பும் புகழிடம் கொண்டதால்
பூமியை விஞ்சியும் வாழ்ந்திடத் துணிவாள் – அவள்
பூகம்பமாய் வெடித்துப் பொங்கி எழுந்தால்
பூமியில் நீயும் வாழ்ந்திடத் தகுமோ
புழுதியில் விழுந்து சாக்கடையாவாய்
புரிந்து கொண்டு பரிந்து வாழ்ந்தால் – இப்
பூமியே உனக்கு சொர்க்கம் ஆகும்
-///உடல்பலம் உன்னிடம் மனபலம் பெண்ணிடம்
பதிலளிநீக்குஉடல் பலம் ஒருநாள் குன்றிப்போம்
மனபலம் குன்றுவதில்லை புரிந்துகொள்///
அருமை சகோதரியாரே
அவளின்றி அணுவும் அசையுமோ ?
பதிலளிநீக்குஅருமை. பெருமை.
அருமை... வரிகள் பெருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
இத்தனை அவளும் துவளாது நிமிர ஓரு
பதிலளிநீக்குஉத்தம ஆணன்றோ தேவை.
நல்ல கருத்தகள்.
இனிய வாழ்த்து
Happy new year 2014.
வேதா. இலங்காதிலகம்.