• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 13 டிசம்பர், 2013

    பற்று



            
    பற்றின் பற்று பற்றே
    பற்றில்லா வாழ்வில் பற்று தூசே
    பண்பான வாழ்வதனை
    பற்றுப்போல் பற்றுக்கொள்


    பொருள்:

    இல்வாழ்க்கையின் ஆதாரம் நட்பே. ஆசையற்ற வாழ்வில் செல்வம் தூசாகவே கருதப்படும். பசைபோல் பண்பான வாழ்வை ஒட்டிக்கொள்.

    1.    இல்வாழ்க்கை
    2.    ஆதாரம்
    3.    நட்பு
    4.    ஆசை
    5.    செல்வம்
    6.    பசை
    7.    ஒட்டிக்கொள் விளக்கம்:


    தெளிவுரை:
    இல்லறம் என்னும் நல்லறத்திலே இணைகின்ற ஆண்பெண் என்னும் இருவரும் தம்பதிகளாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உண்மை நட்புடன் உறவாடவேண்டும். உண்மை நட்பு கணவன் மனைவியிடம் இணையவில்லை என்றால், அவ்வாழ்க்கையில் அடிமைத்தனம் உருவாகும். பாசவுணர்வு அற்றுப்போம். ஆண்ஆதிக்கம் அதிகரிக்கும். ஒளிவுமறைவின்றி  சுகதுக்கங்களை பறிமாறி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நட்புடன் பழகும்போது  இல்வாழ்க்கையானது கட்டுக்கோப்புடனும்  உறுதியுடனும் அமைந்து கொள்ளுகின்றது. எனவேதான்  இல்வாழ்க்கைக்கு  நட்பு ஆதாரமாகக் கருதப்படுகின்றது.

                        அடுக்கடுக்காய் ஆசைகளை அடுக்கிக் கொள்ளும் மனிதர்களுக்கு அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காகச் செல்வம் தேவைப்படுகின்றது. பணமென்றால், பிணமும் வாய் திறக்கும் என்பது பழமொழி. செல்வத்தைத் தேடித்தான் மனிதன் கடல்கடந்து நாடுவிட்டு நாடு மாறிப் பெற்றோர்  உற்றோரைப் பிரிந்து செல்கின்றான். நாம் புகழைத் தேட ஆசைப்படுகின்றோமா? அதற்கும் பணம் தேவை. நண்பர்கள், உற்றாரை மகிழ்ச்சிப்படுத்த ஆசைப்படுகின்றேமா? அதற்கும் பணம் தேவைப்படுகின்றது. ஆசைப்பட்ட பொருள்களைக் கொள்வனவு செய்ய ஆசைப்படுகின்றோமா? பணம் தேவைப்படுகின்றது. உங்களை உங்கள் இல்லத்தை அழகு செய்யவேண்டுமா? அதற்கும் பணம் தேவை. எனவே ஆசைகள் பெருகப்பெருக அதை நிறைவற்ற செல்வம் எமக்கு அவசியமாகின்றது. எப்படித்தான் இதை யாரும் மறுத்தாலும் அதை அவர்கள் மனதளவில்புரிந்து கொள்ளாமல் இல்லை. எமக்கு எத்தனையோ ஆசைகள் இருக்கும்போது அதற்கான செல்வங்களைத் தேடிச் சேகரிக்கும் போது ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அதுவே   பண்பு, மனிதப்பண்பு. இப்பண்பு நிலை தடுமாறுகின்ற போது எவ்வளவு செல்வங்களைக் குவித்து வைத்தாலும் மனைவியை நண்பியாகக் கருதி வாழ்ந்தாலும் உலகத்தின் முன்னே வெறும் தூசியாகவே கருதப்படுவோம். எம்மைத் தட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்காது உலகம் சென்றுவிடும்.

                            கெட்டவழியிலே சேகரிக்கும் செல்வமோ, நட்போ, சுகங்களோ நிலப்பதில்லை. அதைப் பண்பட்ட வழியில்  திருத்தமான, கள்ளமில்லா மனதுடன் சேகரிக்கும்போதே நின்று நிலைக்கக் கூடிய தன்மையைப் பெறுகின்றது. அதனாலேயே பசையைப் போல் பண்பை எம்முடன் ஒட்டிக் கொள்ளவேண்டும் என்று கூறினேன். பண்பானது பசைபோல் எம் வாழ்வில் ஒட்டிக் கொள்ளும்போது பண்பற்ற காரியங்களில் ஈடுபடத் தலைப்படமாட்டோம். இதனையே வள்ளுவர் பண்பில்லாத ஒருவர் ஈட்டிய பெருஞ்செல்வம், நல்ல பாலானது அது ஊற்றி வைக்கப்பட்ட கலத்தின் தீமையால் கெட்டாற்போன்றது என்கின்றார்.

    "பண்பு இலான் பெற்ற பெரும்செல்வம் நன்பால்
     கலம்தீமை யால்திரிந் தற்ற" 


    எனவே மனைவியுடன் நட்புடன் இல்லறவாழ்க்கையில் ஈடுபடும் ஒருவன், தன் தேவைக்காக ஆசையுடன் செல்வத்தைத் தேடும்போது  பண்புடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஆசையற்ற மனிதன் தன் வாழ்வில் செல்வத்தைத் தூசாகவே கருதுவான் என இப்பொறிக்கவிதை கூறுகின்றது.

               

    7 கருத்துகள்:

    1. அருமையான செய்திகள் சகோதரியாரே
      நன்றி

      பதிலளிநீக்கு
    2. //
      கெட்டவழியிலே சேகரிக்கும் செல்வமோ, நட்போ, சுகங்களோ நிலப்பதில்லை. அதைப் பண்பட்ட வழியில் திருத்தமான, கள்ளமில்லா மனதுடன் சேகரிக்கும்போதே நின்று நிலைக்கக் கூடிய தன்மையைப் பெறுகின்றது. அதனாலேயே பசையைப் போல் பண்பை எம்முடன் ஒட்டிக் கொள்ளவேண்டும் //

      அருமையான விஷயத்தை எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

      பதிலளிநீக்கு
    3. நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரி.

      பதிலளிநீக்கு
    4. பண்பு + பற்று பற்றி அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

      இந்தப்பதிவுக்கு ஏற்கனவே கருத்து எழுதி அனுப்பிய ஞாபகம் உள்ளது. ஏனோ அது வெளியாகவில்லை. ஸ்பேமில் உள்ளதா என சரி பார்க்கவும்.

      பதிலளிநீக்கு
    5. ஆசையற்ற வாழ்வு
      அழகாகதான் இருக்கிறது
      ஆயின் மனம்
      ஆசையில் வாழ்கிறது

      பதிலளிநீக்கு
    6. பாடலும் பாடலின் விள‌க்கமும் அருமை!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...