• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 12 ஜனவரி, 2013

    பொங்கல் தினமின்று புகழ்மாலை சூடுங்கள்




    கவிதையை எனது குரலில் கேட்க பச்சை அம்புக்குறியை அழுத்துங்கள்





     
    ஆதி பகவானே உன் ஆட்சியில்
    அண்டமெல்லாம் சுழற்சி
    ஜன்னலினூடு கள்ளத்தனமாய் 
    குடிகொள்ளும் கள்வனே! கதிரவனே! – நீ
    இருளைக் களவாடவில்லையானால்
      செழிக்காது உலகு
    கிழக்கு வானம் வெளுக்காது விட்டால்
     நிலைக்காது உலகு

    கதிரவனே!

    உன் கருணைப் பார்வையினால்
     களிப்படையும் இவ்வுலகு
    கமக்காரன் ஏர் பிடித்தான் - நீ 
     வெயில் பிடித்தாய், மழை கொடுத்தாய்
    ஏற்றம் கண்டது விளைச்சல்
     போற்றிப் பாடினர்; பொங்கல் படைத்தனர்
    புத்தம் புதுப்பானையிலே பூமாலைதனை சுத்தி
     புத்தாடை புனைந்து, புதுக்கோலம் வரைந்து
    புத்தரிசிப் பொங்கலிலே நறுந்தேனும் பாலும்
     சக்கரையும் நெய்யும் கலந்தேவிட்டு
    பொங்கலோ பொங்கலென்று பாடி
     மின்அடுப்புப் பொங்கலினைப் 
    பொங்கி மகிழ்கின்றனர் 


    கமக்காரன் சேற்றில் கால் வைக்க – நாம் 
     சோற்றில் கை வைக்கின்றோம்
    அவன் சேற்றை மிதிக்க – நாடு
     வறுமையை மிதித்து உயர்கிறது
    அவன் வியர்வை சிந்துகின்றான் - நாடு
     உயர்வை ஏந்துகிறது
    அவன் உழைப்பை ஆளுகிறான் - உலகு
     சிறப்பை ஆளுகிறது
    நாடும் வீடும் சிறப்பாய் வாழ
     உழைப்பு சுமந்தவரின்
    உள்ளம் வாட வரி சுமப்பவர்கள்
     நரிபோல் நலமாய் வாழுகிறார்
    கமக்காரரே! சத்திய உழைப்பால்
     சரித்திரம் படையுங்கள்
    பொங்கல் தினமின்று
     புகழ்மாலை சூடுங்கள்
    பொங்கல் தினமின்று
     புகழ்மாலை சூடுங்கள்

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்


    7 கருத்துகள்:

    1. அழகான குரலில்
      அருமையான கவிதை...
      பொங்கட்டும் புதுப் பொங்கல்....
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது
      இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

      பதிலளிநீக்கு
    2. அழகான பாடல். அற்புதமான படைப்பு. குரலிலும் இனிமை.

      பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      புதுமையான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் இதோ:

      பொங்கல் வாழ்த்து
      =================

      செங்கரும்புச் சாறெடுத்து
      இதழினிலே தேக்கி,

      சிந்துகின்ற புன்னகையால்
      துன்பம் நீக்கி,

      மதமதத்த வளையணிந்த
      கைகள் வீசி,

      மங்களாம்
      “தை” என்னும்
      மங்கை வருவாள்!

      பொங்கியெழும்
      புத்தின்ப உணர்ச்சி
      தருவாள்!!

      அன்புடன்
      கோபு

      பதிலளிநீக்கு
    3. அருமையான கவிதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

      இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

      பதிலளிநீக்கு
    4. மகிழ்ச்சி. நன்றி.
      எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    5. சொற்களில் பொதிந்துள்ள உணர்வுகளை சரியாய் வெளிப்படுத்தும்
      காந்தக் குரலில் ஓர் அழகிய வாழ்த்துக் கவிதை வெகு சிறப்பு.
      இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !

      பதிலளிநீக்கு
    6. மிக அழகிய பாடல். பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
    7. சிறப்புப்பதிவு வெகு சிறப்பு

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
      இனிய பொங்க்கல் நல் வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...