• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

    உண்டு உண்டு எல்லாம் உண்டு

    </p
                          
           பாருண்டு பக்தருண்டு படைத்தவனுண்டு
           நீருண்டு நிலமுண்டு நிர்மூலமுண்டு
           காருண்டு காவுண்டு காயுண்டு
           சூடுண்டு சூரியனுண்டு சூரியகாந்தியுண்டு
           காசுண்டு காணியுண்டு காரியமுண்டு
           சீருண்டு சிறப்புண்டு சிந்தனையுண்டு
           தாருண்டு தாரமுண்டு தாயாருண்டு
           நாருண்டு நாமமுண்டு நாதனுண்டு
           வாருண்டு வாரிசுண்டு வாழ்தலுண்டு
           ஊருண்டு உறவுண்டு ஊறுமுண்டு
           ஆருண்டு ஆர்வமுண்டு ஆரோக்கியமுண்டு
           ஏருண்டு ஏற்றமுண்டு  ஏவலுண்டு
           ஏடுண்டு ஏணுண்டு ஏமாளியுண்டு
           ஆடுண்டு ஆற்றலுண்டு ஆற்றாமையுண்டு
           ஈடுண்டு ஈட்டமுண்டு ஈடேற்றமுண்டு
           ஈருண்டு ஈரமுண்டு ஈனலுண்டு
           உண்டு உண்டு அனைத்துமுண்டு – ஆனாலிங்கு
           இல்லை இல்லை நிம்மதியில்லை.
      

    நார் – அன்பு           ஆர் – அழகு        ஈடு - வலிமை
    நாமம் - புகழ்           ஏண் - வலிமை
    வார் - நேர்மை          ஆடு – வெற்றி

                           

    5 கருத்துகள்:

    1. ஆயிரம் உண்டுகள் இருந்தென்ன
      நிம்மதி என்பது இல்லையெனில்
      உண்டுகளை அடுக்கிக்கொண்டு போனவிதமும்
      கவிதையை முடித்த விதமும் மனம் கவர்ந்தது
      மனம் கவர்ந்த பதிவு
      தொடர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    2. நிம்மதி இல்லையென்றால் பிறகென்ன வாழ்க்கை... அருமையான வரிகள்... அதற்கு விளக்கமும் அருமை... வாழ்த்துக்கள்...

      பதிலளிநீக்கு
    3. எல்லாம் உண்டு உங்கள் கவிதையில் இனிமையும் உண்டு. நார் என்பதற்கு அன்பு என்ற பொருளுண்டு என்பதஈன்ருதான் தெரிந்துகொண்டேன்.

      பதிலளிநீக்கு
    4. போதும் என்ற மனம் ஒன்று இருந்தால் ..உண்டுகளுக்கு உயர்வும் ..மனதிற்கு நிம்மதியும் உண்டே ..

      பதிலளிநீக்கு
    5. Ma ,Mika arumaiyana pathivu .This style is the lyrics of PALANIYAPPA in the tamil movie THIRUVILAIYADAL.All the best by DK .

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    திராவிட இலக்கிய கர்த்தாக்களில் பாரதிதாசன்

    தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழ னுக்குத்  தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்  தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை தமிழ்த் தொண்டன்...