சொல்லொணாத் துயரம் சோலிங்கனில்
கல்லுக்கும் மண்ணுக்கும் இரும்புக்கும்
சொல்லொணாத் துயரம் சோலிங்கனில்
நல்லா இருந்த நகரத்தைப்
பொல்லாத பாடு படுத்துகிறார்
நல்லநல்ல மனிதவலு நாணிக்கிடக்கிறது
வல்லேறு போல் வாகனச்சத்தம்
மெல்லிய காதைத் துளைக்கிறது.
பூமிப்படுக்கையிலோர் புதிய மாற்றத்தைப்
புரியாத பிரமனும் பூரித்து நிற்கின்றார்
பூமாதேவிக்கோர் புதுவித உணர்வு
புழுப்போல் நெளிந்து பாம்பாய்தன்னுள்ளே
புகுந்த விளையாடும் குழாயின்
புகலிட வரவின்நிலை குறித்து.
மெஞ்ஞானம் மறந்த அஞ்ஞானப் புரட்சி
விஞ்ஞான விளிம்பிலே வியத்தகு காட்சி
தன்ஞானம் மறந்த தடிகொண்ட ஆச்சி
தரக்குறைவாய்ப் பேசும் சளிப்பான பேச்சு.
அழகுக்கும் ஆடம்பரத்துக்கும்
அளவில்லாப் பெருமைக்கும்
அரசாங்கப் பணமெல்லாம்
அநியாயமாய்த் தேய்கிறதே
வரியாய்ப் பெற்ற பணமெல்லாம்
மண்தோண்ட விடலாமோ
குறையாத விலையுயர்வு
கொள்கையை மறக்கலாமோ
நல்லதைச் சொல்லும் கவிதை. நன்று. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபூமிப்பந்தில் இதுதான் உலகெங்கும் நடக்கின்றது . முடியாத போது கொந்தளிக்கின்றது
நீக்குமாறி வரும் உலகச் சூழலில்
பதிலளிநீக்குஅத்தனை நிலைப்புத்தன்மைக்குமான
மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் என
அழகாக சொல்லும் கவிதை சகோதரி...
நிச்சயமாக மகேந்திரன் . அதை நாம் தாங்கிக்கொண்டுத்தான் இருக்க வேண்டும்
நீக்குஆதங்கக்கவிதை மிக அருமை..
பதிலளிநீக்குநீண்ட நாள்களின் பின் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. எல்லோரும் ஓட்டத்தில் பலரை மறந்து விடுகின்றோம்.
நீக்குஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக நன்றி ஐயா
பதிலளிநீக்கு120+Best Jumma Mubarak Images HD Jumma Mubarak Wallpaper
பதிலளிநீக்கு120+Best Jumma Mubarak Images HD Jumma Mubarak Wallpaper
பதிலளிநீக்கு