• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 6 ஏப்ரல், 2012

    ஆலமரத்தடிப் பிள்ளையார்:



    ஆலமரத்தடிப் பிள்ளையார்: 



    ஆலமரத்துப் பிள்ளையார் 
    பல அற்புதங்கள் காட்டுவார் - என் 
    சொந்தக் கவலை தீரவே 
    சொல்லி அழவே நாடுவேன். 

    ஆலமரத்தடிப் பிள்ளையாரைத் தொழுதால் ஆரம்பிக்கும் கருமங்கள் யாவும் நலம் பெறுமே என அளவிலா நம்பிக்கை கொண்ட பக்தர்குழாம் நாளின் ஆரம்பமே ஆலமரத்தடி என்று வாழ்வது நிஜம். இப்பிள்ளையார் எவ்வாறு இங்கு வந்தமர்ந்தார் என்னும் வினாவிற்கான தேடலின் தெளிவு பெற கீழே தொடருங்கள்.

    ஆலமரத்தின் சிறப்பு அது கீழ்ச்செலுத்தும் விழுதுகளின் அமைப்பு. கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள் அம்மரத்தைத் தாங்கி நிற்பதாகப் பார்ப்பவர்களுக்குக் காட்சியளிக்கும். அம்மரத்தின் அருகாமையில் அற்புதமாய்ப் படர்ந்து செழித்து வளர்ந்திருந்தது அறுகம்புல். இவ் அறுகம்புற்களை மேயவிடுவதற்காக பசுமாடுகளைக் கொண்டுவந்து விடுவது அக்கால மக்களின் வழக்கமாக இருந்தது. இதில் இயற்கையாகவே பல மருத்துவத்தன்மை நிறைந்திருக்கின்றன. விற்றமின் ஏ சத்து நிறைந்த இவ்அறுகம்புல் இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் இரத்தத்திலுள்ள செங்குருதிச்சிறுத்துணிக்கைகளை( சிவப்பணு ) அதிகரிக்கச் செய்வதுடன் இரத்தச்சோகை, இரத்தஅழுத்தம் போன்ற நோய்களையும் தீர்த்து வைக்கின்றது. உடற்சூட்டைத் தணித்து வாயுத் தொல்லைகளை நீக்குவதுடன் நரம்புத்தளர்ச்சி நோய்க்கும் மருந்தாகவும் அமைகின்றது. பெண்களுக்கு மாதவிடாய்க்காலங்களில் வரும் தொல்லைகளும் இதனால் தீர்க்கப்படும். இதைவிட இன்னும் பல நோய்களைத் தீர்த்து வைக்கும் அவ்அறுகம் புற்களைப் பசுமாடுகள் மேய்ந்து அது தரும் பாலைக் குடிப்போர், ஆரோக்கியம் மிகுந்தவர்களாகக் காணப்படுவார்கள். அப் பாற்சுவை நோக்கியும் நிறைபலன் கருதியும் அக்கால மக்கள் அப்பசுமாடுகளை அங்கு மேயவிடுவார்கள். ஆனால், அவ் ஆலமரத்தை நாடி யானைகள் வருவதும் வழக்கமாக இருந்தது. இனச்சேர்க்கையில் விருப்புக் கொண்ட யானைகள் அம்மரத்தை வந்தடைந்தன. ஏனெனில், இனச்சேர்க்கையின் போது ஆண்யானையின் பலத்தைப் பெண்யானை தாங்கமாட்டாத காரணத்தினால், ஆண்யானை தன்னுடைய பலத்தையெல்லாம் ஆலமர விழுதை இழுத்துத் தாங்கி நின்று பலத்தைக் குறைக்கும். இவ் யானைகள் வரும்போதும் போகும் போதும் அருகே படர்ந்து கிடக்கும் அறுகம்புற்களை மிதித்தழித்துச் சேதப்படுத்திவிடும். யானைக்குப் புற்களும் தாவரங்களும் உணவில்லையே பெரிய மரங்களையல்லவா உணவுக்காக அது நாடி நிற்கும். பசுக்களுக்குகந்த அறுகம்புற்கள் சேதப்படுவது பாதுகாக்கப்பட வேண்டுமல்லவா! இதைவிட யானை போடும் லத்திக்கும் யானைகளுக்கும் பயந்த பசுமாடுகள் அவ்விடம் நோக்கி வரமாட்டாது. இதனால், யானையைத் தடுக்க நினைத்த அக்கால மக்கள். மாட்டுச்சாணத்தினால், பல உருவங்களைச் செய்து ஆலமரத்தைச் சுற்றி வைத்துவிடுவார்கள். பின் விளையாட்டாக அருகே படர்ந்து கிடக்கும் அறுகம்புல்லை அதன் மேல் குற்றிவிடுவார்கள். மாட்டுச்சாணத்தின் மணத்திற்கு யானைகள் அவ்விடத்தை எட்டியும் பார்க்காயின. இச்சாணத்தின் வடிவங்களே மெல்லமெல்ல ஆலமரத்தடிப்பிள்ளையார் வடிவங்களாயின. வீடுகளில் பூஜைகள் செய்யும் போது பிள்ளையார் என்று மாட்டுச்சாணத்தையும் அதன்மேல் அறுகம்புல்லையும் குற்றி வைப்பதும் அக்காரணத்தினாலேயே தான்.

    எனவே காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. காரணங்களைக் கேட்காது நாம், காரியங்களை ஆற்றிக் கொண்டிருந்ததனால், காரணங்கள் மறைவாயின. இன்று எதற்கும் ஏன் என்று கேட்கும் பழக்கம் வளர்க்கப்பட்டால், அறிவு தெளிவுபெறுவது நிச்சயம்.



    18 கருத்துகள்:

    1. இந்த தங்கள் கட்டுரை யோசிக்க வைப்பதாக உள்ளது.
      கடைசி பத்தி அருமை. பாராட்டுக்கள்.

      பதிலளிநீக்கு
    2. ஏன் என்று ஒரு வினா தொடுத்தால்..
      ஒன்றனுக்கு பல பொருள் கிட்டும்..
      என உரைக்கும் பதிவு நிதர்சனம்.

      பதிலளிநீக்கு
    3. அரிய தகவல்களுடன் நல்ல பதிவொன்று தந்திருக்கிறீர்கள்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. மிக்க நன்றி .ஏதாவது வேறு அபிப்பிராயம் சொல்வீர்கள் என்று நினைத்தேன்

        நீக்கு
    4. ஏன் என்கிற கேள்வியே ஞானம் பெற முதல் திறவுகோல்..

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. வரவுக்கும்புரிந்துரைக்கும் மிக்கநன்றி

        நீக்கு
    5. நமது பழைய பழக்க வழக்கங்கள் பலவற்றிற்கு அறிவியல் பூர்வமான காரணங்கள் உண்டு.அதை தெரிந்துகொள்ள முற்படுதல் நன்று. நல்ல பதிவு.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. காரணங்கள் புரியாமல் காரியத்தில் இறங்கிவிடல் சிறப்பு இல்லை அல்லவா சகோதரன்

        நீக்கு
    6. இதுவரை தெரிந்திராத தகவல்.
      பகிர்வுக்கு நன்றி

      பதிலளிநீக்கு
    7. ஓ இப்படித்தான் வந்ததா இந்த பக்கம்! நமது பழக்கவழக்கங்களுக்கு இப்படிப்பட்ட நிறைய காரணங்கள் இருப்பதை உணந்திருக்கிறேன்.
      இது ஒர் வித்தியாசமான வேண்டுதல் ஆகிவிட்டது. பழய பழக்கத்தின் ஆணிவேர் பற்றிய புதிய செய்திக்கு நன்றி சந்திரகெளரி அவர்களே!

      பதிலளிநீக்கு
    8. அரச மரத்தில் வைத்த காரணம், குளக்கரையில் வைத்த காரணம்
      என்ன

      5000 பிள்ளையார், 10000 பிள்ளையார் வைத்த காரணம் வேற்று மதத்தினர் கொல்வதற்காக

      பிள்ளையாரால் வாழ்ந்தவனை காட்டிலும் செத்தவன் அதிகம், பெரியார் செருப்பால் அடித்தார், வேறு என்ன செய்தால் மனிதன் சாவதற்கு காரணமான இப்பிள்ளையாரை ஒழிக்கலாம்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. பிள்ளையாரை அழிக்க ஒன்றுமே செய்யமுடியாது சார். மனிதன் அழிந்தாலேயே பிள்ளையார் அழிவார். இன்று ஐரோப்பிய நாடுகளில் மனிதர்கள் உடலில் எல்லாம் பிள்ளையார் உருவம் பச்சை குத்தி இருக்கின்றார்கள். கூகுளே போய் tatoo என்று அடித்துப் பாருங்கள்
        Popular Hindu God Tattoos – Ganesha

        நீக்கு
    9. மனிதன் அழிந்த பின்தான் பிள்ளையார் அழிவார்.
      காக்க முடியாதவன் கடவுள்
      அவன் நீடுடி வாழ வேண்டும்
      அவனால் மனித சாக வேண்டும்

      நன்றி

      பதிலளிநீக்கு
    10. hii.. Nice Post

      Thanks for sharing

      For latest stills videos visit ..

      www.ChiCha.in

      www.ChiCha.in

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...