"பெண்ணுக்குள்ளே ஞானத்தை வைத்தான்
புவிபேணி வளர்த்திடும் ஈசன்''
ஞானம் என்னும் பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் பெண் என்பதை மகாகவிபாரதி உலகுக்கு வெளிப்படுத்திச் சென்றுள்ளார். எனவே தான், மனிதனை வாழவைக்கும் இந்தப் பூமியைப் பூமாதேவி என்றும் ஆகாயத்தை ஆகாயவாணி என்றும் கடலைக் கடலன்னை என்றும் நதிகளைக் கங்கை என்றும் காவேரியென்றும் எங்கெங்கும் இயற்கை சக்திகளில் பெண்வடிவம் காண்கின்றோம். கல்வி, செல்வம், வீரம் இம் மூன்றும் பெறக் கலைமகள், அலைமகள், மலைமகள், என முச்சக்திகளான பெண்தெய்வங்களை வழிபட வேண்டியது அவசியமாகின்றது.
ஒரு பெண் வாழும் வீடு சிறப்பாய் அமைந்தாலேயே நாடும் சிறப்புறும் வீடுகள் நிறைந்ததுதான் நாடு. எனவே, இல்லறத்தை ஒரு பெண் நல்லறமாக்காதுவிடில் உலகு உவகை கொள்வது எங்கே? உயர்ச்சியடைவது எங்கே? உலகத்தை வளர்த்து வாழவைக்கும் புத்தகங்களாகவும் கலைகளாகவும் கல்விக்கழகங்களாகவும் பெண்கள் விளங்குகின்றனர்|| எனப் பெண்கள் பற்றிச் ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். எனவே உலகமே அவள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.
இவ்வாறு உலகத்திற்குப் பெருமை சேர்க்கும் பெண்ணைப் பொதுவாகவே கவிஞர்கள், கொடிக்கு உவமைப்படுத்துவார்கள். கொடி மென்மையானது. பூத்துக்குலுங்கும் கொடியானது, ஒரு பற்றுக்கோடு கொண்டே படரும். அந்தக்கொடியான கொழுகொம்பின்றி படராதுவிடுமேயானால், நீண்டு வளராது. புதராகப் படர்ந்து காணப்படும். கொழுகொம்பிலே படரும்போது நிறைந்த பூக்களைத் தந்து கொழுகொம்பையே அழகாக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். கொடி கொழுகொம்பிற்கு அழகைத் தருதல் போல பெண்ணானவள் தன் கணவனைக் களிப்புறச் செய்கின்றாள். பூக்களைத் தந்து கொடி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருதல் போல பிள்ளைகளைப் பெற்று சமூகத்திற்குச் சிறந்த பணியாற்றுகின்றாள். கணவன் என்னும் கொழுகொம்பைப் படர்ந்து வாழுகின்றாள். இளமையில் பெற்றோரில் தங்கித் திருமணத்தின் பின் கணவனில் தங்கி முதுமையில் பிள்ளைகளில் தங்கி வாழும் பண்பு பின்தங்கியவளாகவே அவளை ஆக்கிவிடுகின்றது. பெண்ணின் கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, மென்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இவையனைத்தும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆண்வர்க்கம், அவளை அடிமைப்படுத்துவது காலாகாலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இன்று இந்நிலைகளை உடைத்தெறிந்து பெண்வர்க்கம் துணிந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
ரேடியத்தை உலகுக்களித்த மேரிகியூரி அம்மையார், விஞ்ஞான உலகில் முத்திரை பதித்தவர். முறையான கல்வி வசதியில்லாத நிலையிலேயே 18ம் நூற்றாண்டு கரோலின் கர்ஷேல் என்னும் விண்வெளி வீராங்கனை 3 புதிய நட்சத்திரக்கூட்டம், 8 வால்நட்சத்திரம் மற்றும் பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளார். ஆயினும் ஐரோப்பிய மண்ணில் கூட அடக்குமுறை தலைவிரித்தாடியது. 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் சூனியக்காரிகள் என்று உயிருடன் தீ வைத்துக் கொழுத்தப்பட்டனர். அவர்கள் செய்த சூன்யம் என்னவென்றால், ஆண்மருத்துவர்கள் இருக்கும் போதே நோயுற்றவர்களைத் திறமையான முறையில் சிகிச்சையளித்து குணமாக்கியமையே ஆகும். இவ்வாறு பெண்மையின் இயல்பான ஞானத்தில் பொறாமை கொண்ட ஆண்வர்க்கம், பெண் இனத்தின் அடக்குமுறையை வளர்த்து
கொண்டிருந்த போது 1910ம் ஆண்டு டென்மார்க்கிலுள்ள கொப்பன்காகன் (Koppenhagen) என்னும் இடத்தில் கிளாராசெற்கின் (Clarazetkin) என்பவர் ஒரே தொழில்புரியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான வருமானம் கிடைத்தல் வேண்டும், கர்ப்பம் அடைந்த பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படல் வேண்டும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படல் வேண்டும், என கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தார். இவர் தூக்கிய போர்க்கொடியே மகளிர்தினத்திற்கு அடிகோலியது. 1917ல் இரஷ்யாவிலுள்ள Sanktpetersburg என்னும் இடத்தில் ஆரம்பத்த பெண் ஆடைத்தொழிலாளிகளின் வேலைநிறுத்தத்தை நினைவுகூறுமுகமாக 1921 பங்குனி 8ல் சர்வதேச மகளிர்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. தற்பொழுது வருடாவருடம் உலகலாவிய ரீதியில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகத்தை உய்வடையச் செய்யும் பெண்கள் தமது பொறுப்பை உணர்ந்து கடமை தவறாது கண்ணியமாக வாழ்க்கையை நல்லமுறையில் நடத்தினால், உலகு உவகை கொள்ளும் என்பது திண்ணம்.
பொருத்தமான பாரதியின் பாட்டோடு தொடங்கிய தங்கள் பதிவு அருமை. பெண்ணின் பெருமைகளை பறை சாற்றி இருக்கிறீர்கள்.ஆண்டாண்டு காலமாக ஆனாதிக்கத்தின் பிடி யில் இருந்த பெண்கள் தங்களிடமிருந்து நழுவுவதை ஆண்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மைதான்.
பதிலளிநீக்குஆனால் அதை தடுக்க இயலாது.
மகளிருக்காக நானும் பதிவு ஒன்றை சமர்ப்பித்திருக்கிறேன்.நேரம் இருப்பின் வாசிக்கவும்.
உங்கள் பதிவு படித்தேன். நீங்கள் கூட பொருத்தமான நேரத்தில் பொருத்தமான பதிவு தந்திருக்கின்றீர்கள். உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
நீக்குஅருமையான மகளிர் தின பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குநன்றி அம்மா. என்னுடைய அம்மா பெயர் பரமேஸ்வரி. உங்கள் பெயரை பார்க்கும் போதும் உச்சரிக்கும் போதும் எனது அம்மா ஞாபகம் வரும்
நீக்குபடைப்பதனால் பிரம்மனாகி நிற்கும்
பதிலளிநீக்குபெண் மக்கள் வாழி.....
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..
நிச்சயமாக. படைப்பு மட்டுமன்றி. படைப்பை வெளிக்கொண்டு வருதல்கூட . நன்றி மகேந்திரன்
நீக்குஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குபாரதியில் தொடங்கி...சிறப்பு பதிவு சிறப்பு தான் சகோதரி...
பதிலளிநீக்குபெண்கள் தின நாளின் வரலாற்றை பகிர்ந்து கொண்டமையில் மகிழ்ச்சி. இறுதியில் பல அரிய தகவல்களை தந்த பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு