• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 26 அக்டோபர், 2011






    http://esnips.com/displayimage.php?pid=32947296

    அகவிருளில் அறியாமை சுகங்காணு முலகில்
    திரைவிலக்கி ஒளிபெருக்கி 
    அகமது ஒளிர்ந்து புறமது பரவி 
    பகலவன் ஒளியென அறிவதன் சுடரது
    பரவியொளி பாரெல்லாம் பரிமளிக்க
    பண்பெலாம் நிறைந்துலகில் படர்ந்திருக்க
    வஞ்சனை தீர்ந்துலகில் வஞ்சினம் நீறாக
    நெஞ்சமதில் பொறாமை இஞ்சியளவு தேங்கிடாது
    வந்தனை புரிந்தெமைப் பெற்றோர் அடிபணிந்து
    இத்தீபத் திருநாளதனில் நல்லனவெலாம் பெற்று 
    வாழ்கவென வாழ்த்துகிறேன்.

    10 கருத்துகள்:

    1. நல்ல வாழ்த்துப்பா. வாழ்க வளமுடன்.

      பதிலளிநீக்கு
    2. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தங்கைக்கு ! வாழும் காலங்களில் இயற்கைய நேசிப்போம் ...அடுத்த தலைமுறைக்கு நல்லவைகளை விட்டுச் செல்வோம் ...வாழ்க வளமுடன் !

      பதிலளிநீக்கு
    3. மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    4. ஏம்மா, இந்தப் பதிவுக்கு தலைப்பு வைக்கலியா?

      பதிலளிநீக்கு
    5. தீமையும் இருளும் அகல
      நல்லவனவற்றை நமக்குள் ஏற்பதுவும்
      அதனால் உள்ளத்தில் உண்டாகும் தூய ஒளியை
      புறத்தே பரவவைத்து களித்தலுமே
      தீபாவளியின் பொருள் என்பதனை
      உள்ளடக்கமாகக் கொண்ட உங்கள் கவிதை
      அருமையிலும் அருமை.வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்,கெளரி.

      பதிலளிநீக்கு
    7. சிறப்பான பா உளம் நிறைந்த பாராட்டுகள்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...