• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 26 ஜூலை, 2011

    மூன்று முடிச்சு


    ரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா? எனத் தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள் தாங்களே......



    பிடித்த உறவுகள்:

    பெற்றோரையும் பெற்றொரைப் பெற்றோரையும்
    நான் சுமந்த என் வாரிசு
    சேய் போல் என்னைத் தாங்கும் என் கணவன்

    பிடித்த உணர்வுகள்:

    அன்பு
    பெண்களுக்குரிய நாணம்
    அடுத்தவர் துயருறும் போது உள்ளம் நெகிழ்தல்


    பிடிக்காத உணர்வுகள்:

    அடக்க முடியாத ஆத்திரம்
    கோபம்
    ஆணவம்


    முணுமுணுக்கும் பாடல்கள்:



    எனது தாயாருக்காக நான் எழுதி பாடல்.
    http://www.youtube.com/watch?v=Sm6jpWr9sBo)


    அம்மா என்று அழைக்காத உயிரில்லையே.
    புதிதாக வெளிவரும் கருத்தாழமிக்க பாடல்கள்



    பிடித்த திரைப்படங்கள்:

    ஆட்டோகிராப்
    மதராசுபட்டினம்
    மௌனராகம்


    அன்புத் தேவைகள்:

    எதிர்பார்ப்பில்லாத உறவுகள்
    ஈடு செய்ய முடியாத பாசம்
    எனக்காக ஏங்கும் உள்ளங்கள்.

    வலிமையை அழிப்பவை:

    பொறாமை
    சோம்பல்
    தைரியமின்மை

    குட்டித்தத்துவம்:

    உன்னையே முதலில் நீ காதலி. உலகம் உன்னைக் காதலிக்கும்.
    யார் எது சொல்லிடினும் ஏன் என்று கேட்டுத் தெளிந்தபின் நம்பு.
    மற்றவரைக் குற்றம் சொல்லும் முன் உன்னை நீ ஒரு தடவை சரிபார்த்துக்கொள்.

    பயமுறுத்தும் பயங்கள்:

    இயற்கையின் களியாட்டம்
    முதுமையில் எமது நிலை
    ஐரோப்பியசூழ்நிலையில் வளரும் என் மகள்.


    அடையவிரும்பும் நிலையான விருப்பங்கள்:

    வாழும்வரை புதுமைகளைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
    ஏன் என்ற கேள்வி மூலம் பலவற்றை புரிந்துணரவேண்டும்.
    அறிவுக்கு எட்டியவரை தேடல் தொரடவேண்டும்.

    கற்க விரும்புவது:

    இலக்கிய இன்பம்
    பியானோ
    அலைகள் பற்றிய கல்வி (Mind reading )

    வெற்றிபெற வேண்டியவை:

    மறதி
    நேரம்
    வாழ்க்கைச்சுமை

    சோர்வு நீக்கத் தேவையானவை:

    சூடான கப்புச்சினோ ( Cappuccino) காப்பி
    கண்ணைமூடி தலை பின் சாய்த்து இசையில் இலயிப்பது
    மழலை பேசும் குழந்தை மொழி

    எப்போதும் தயாராக இருக்க வேண்டியது:

    தொலைபேசி
    மனம்
    பணம்

    முன்னேற்றத்திற்குத் தேவை:

    சோர்ந்து போகாத ஆர்வம்.
    ஒத்துப்போகும் மூளை
    ஒத்தழைக்கும் குடும்பம்.

    எப்போதும் அவசியமானது:

    ஆரோக்கியமான உடல்நிலை
    தயாரான மனோநிலை
    தேவையான பணநிலை

    பிடித்த தத்துவம்:

    யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்.
    உன்னைத் திருத்து உலகம் திருந்தும்
    உன் செயல்களே உன் வாழ்வை நிர்ணயிக்கும்

    தெரிந்து தெரியாது குழம்புவது:

    இறப்பின் பின் மனிதனின் நிலை
    யாருமே கண்டறியாத கடவுளும், இயற்கையும்
    உடலின் அமைப்பும் தொழிற்பாடும்


    எரிச்சல்படுத்துபவர்கள்:

    மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடப்பவர்கள். 
    அளவுக்கதிகமாகப் பேசுபவர்கள்.
    தொலக்காட்சிகளில் பார்ப்பவை கேட்பவற்றை வைத்துக் கொண்டு அனைத்தையும் நம்புபவர்கள்

    மனங்கவர்ந்த பாடகர்கள்:

    வளர்ந்துவரும் இளந்தலைமுறையினர்.
    தாலாட்டுப் பாடிய எனது தந்தையார்.
    காலைநேரப் பறவைகள்

    இனிமையானது:

    குழந்தைச் சிரிப்பு
    தென்றல்காற்று
    இலக்கியங்கள்

    சாதித்தவர்களின் பிரச்சினை:

    உனக்கு மேமே உள்ளவர் கோடி என்பதை மாற்றியமைக்கப் போராடல்.
    ஓய்வில்லாத ஓட்டம்
    மற்றவர்களில் குறைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருத்தல்

    பிடித்த பழமொழிகள்:

    மற்றவர் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப்பாராது உங்கள் வாழ்க்கையை ரசியுங்கள் அதில் இன்பமும் இரகசியமும் இருக்கின்றது. 
    யதார்த்தவாதி வெகுசன விரோதி
    உன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் இருக்கின்றது

    பதிவிட அழைக்கும் மூவர்

    1. அப்பாத்துரை http://moonramsuzhi.blogspot.com/
    2. குணா http://zenguna.blogspot.com/2011/07/smart-bird.html
    3. போளுர் தயாநிதி 1.   http://arivan-polurdhayanithi.blogspot.com/











    32 கருத்துகள்:

    1. கீச்சு மூச்சு கம்பளம் நெகிழ வைத்தது. நன்று.

      அழைப்புக்கு மிக நன்றி. ஏற்கனவே இன்னொரு அழைப்பின் பெயரில் இது பற்றி எழுதி விட்டேனே?

      பதிலளிநீக்கு
    2. எதிர்பார்ப்பில்லாத உறவுகள்
      ஈடு செய்ய முடியாத பாசம்
      எனக்காக ஏங்கும் உள்ளங்கள்.


      முத்தான மூன்றுகள்...வாழ்த்துக்கள் சகோதரி...

      பதிலளிநீக்கு
    3. நான் எதிர்பார்த்தபடியே பதிவு மிக மிக அருமை
      ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் மிகத் தெளிவாகவும்
      ஆணித்தரமாகவும் உள்ளது.
      தங்கள் தாய் தந்தையருக்காக
      தாங்கள் இசை அமைத்து பாடியுள்ள
      பாடலைக் கேட்டேன் அருமை
      நான் தற்சமயம் வெளியூரில் உள்ளதால்
      என்னுடைய விரிவான பின்னூட்டப் பதிவை
      தொடர்ந்து பதிவிடுகிிறேன்
      பல்வேறு பணிகளுக்கிடையில் உடன் பதிவிட்டமைக்கு நன்றி

      பதிலளிநீக்கு
    4. வாழும்வரை புதுமைகளைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
      ஏன் என்ற கேள்வி மூலம் பலவற்றை புரிந்துணரவேண்டும்.
      அறிவுக்கு எட்டியவரை தேடல் தொரடவேண்டும். . .
      மனதில் பதிந்த வரிகள். . .அருமையான படைப்பு.

      பதிலளிநீக்கு
    5. //மௌனராகம்//

      இன்று ஒரு முறை சன் டி.வி.யில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு முறை பார்த்தாலும், அலுக்காத அழகான அசத்தலான படம். எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.

      //குட்டித்தத்துவம்:

      உன்னையே முதலில் நீ காதலி. உலகம் உன்னைக் காதலிக்கும்.
      யார் எது சொல்லிடினும் ஏன் என்று கேட்டுத் தெளிந்தபின் நம்பு.
      மற்றவரைக் குற்றம் சொல்லும் முன் உன்னை நீ ஒரு தடவை சரிபார்த்துக்கொள்.//

      ரொம்பவும் அருமை.

      நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
      நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.

      பதிலளிநீக்கு
    6. நல்ல பதிவு.
      வாழ்த்துக்கள்.
      உங்களது தமிழ் மனம் போன்ற திரட்டிகளில் பதிந்து கொள்ளுங்கள்.
      நன்றி.

      பதிலளிநீக்கு
    7. //கிச்சு முச்சு தாம்பலம்
      பல்லாங்குழி ஆட நானும்
      சொல்லாமல் தான் போகும் போது
      சொல்லி சொல்லி அடித்த அடி வலிக்கவில்லை சொல்லாமல் தான் போன அடி நெஞ்சில் வலிக்கிறது விட்டு சென்ற போன துயர் கணக்கிறது...
      என்ன சொல்லி நான் சமைக்க
      கன்னத்திலே முத்தமிட்டு
      தித்திப்பதில் சொன்ன சொல்லை மறக்கவில்லை....தித்திப்பான உணவை தேடி மனம் ஏங்குகிறது...//

      சகோதரி பாடலை கேட்டதும் கண் கலங்கியது... உலகிலயே நமக்கு உண்மையான ரசிகனாக, உண்மையான பக்தனாக, கடவுளாக தாய் ஒருவள் மட்டுமே அவளுக்கு இணை இவ்வுலகில் இல்லை.. தாயின் அருமையை உணர்த்தும் விதமாக பாடலை அழகாக தொகுத்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்..

      பதிலளிநீக்கு
    8. குட்டித்தத்துவம் குட்டியாக இருந்தாலும் பெரிய விசயத்தை அதன் அவசியத்தை அழகாக அமைந்துள்ளது.... அருமை

      பதிலளிநீக்கு
    9. இன்னமும் ஒரு முறை இன்னமும் ஒரு முறை என்று வாசிக்க வைக்கிறது சந்திரகௌரி உங்கள் வரிகள்…. இது தான் உங்கள் வரிகளின் சிறப்பு.. உங்கள் சிந்தனைகள் வித்தியாசமானவை…. கம்பீரமானவை….மதிப்புடன் உங்களை நினைக்க வைப்பவை….
      உங்கள் வரிகளை முதன்முதலில் ரமணி சாரின் முத்தான மூன்று முடிச்சு பதிவுத்தொடருக்கான பின்னூட்டத்தில் பார்த்தேன்… அதெப்படி ஒருவரை பார்த்ததுமே மனதில் சட்டென பிடித்துவிடுகிறதே… ஏன்? தெரியலையே.. என் தங்கையின் அன்பை எழுத்துகளின் ஊடே காண்பதாலா? அம்மாவின் பாசத்தை உணர்வதாலா? என் நண்பனின் எழுத்துக்களை போலவே கம்பீரத்தை காண்பதாலா… சொல்ல தெரியலையே….
      படிக்க படிக்க உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகமாகிக்கொண்டே போகிறது சந்திரகௌரி…. பேரை சரியாக உச்சரிக்கிறேனா என்ற ஒரு பயம் என் மனதில்…. இவ்ளோ அருமையா பதில்கள் எழுதி இருக்கீங்களே…. தைரியப்பெண்மணியாவும் இருக்கீங்க.. இலக்கியங்களை விரும்புறீங்க…வித்தியாசமான பதில் முதல்லயே….
      பிடித்த உறவுகள் / நீங்கள் இந்த உலகைப்பார்க்க காரணமாக இருந்த பெற்றோர், பெற்றவரை பெற்றோரையும் அப்படின்னா மாமியார் வீட்டு ஜனங்களை கூட நீங்க அரவணைப்பதை உணரமுடிகிறதுப்பா…
      இன்னும் எழுதனும் நாளை தொடர்வேன்பா….இப்ப சமைக்க போகனுமே…


      ஹை நான் தான் முதல்ல படிச்சிருக்கேன்பா... எனக்கு ரொம்ப சந்தோஷம்பா... மீதி நாளை தொடர்வேன்பா...

      பதிலளிநீக்கு
    10. வாழ்த்துகள்! கௌரி.
      http://kovaikkavi.wordpress.com

      பதிலளிநீக்கு
    11. படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது
      அழகான மூன்று முடிச்சுகள்

      பதிலளிநீக்கு
    12. மொழி தெரியாத ஊரிலே இருக்கும் பொழுது
      சக இனத்தாரை பார்த்தால் உள் மனதினில் ஒரு உவகையோடு சந்தோசம் பிறக்கும் .
      அது போல் தங்களின் எண்ணத்தின் வெளிப்பாடு
      என் மன ஓட்டத்தை வெளி படுத்துகிறது சில வரிகள்.


      பகிர்வுக்கு நன்றி சகோதரி

      பதிலளிநீக்கு
    13. உங்கள் மூன்று முடிச்சு அருமை. உங்களின் அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன். அடுத்த பதிவில் நிச்சயம் எழுதுகிறேன்

      பதிலளிநீக்கு
    14. >>பிடித்த திரைப்படங்கள்:

      ஆட்டோகிராப் - ஆட்டோகிராஃப்
      மதராசுபட்டினம்- மதராசபட்டினம்
      மௌனராகம்

      பதிலளிநீக்கு
    15. >>பயமுறுத்தும் பயங்கள்:

      இயற்கையின் களியாட்டம்
      முதுமையில் எமது நிலை
      ஐரோப்பியசூழ்நிலையில் வளரும் என் மகள்.

      மூன்றாவதில் உங்கள் அம்மா பாசம் வெளிப்படுகிறது

      பதிலளிநீக்கு
    16. முத்துக்கு முத்தாக மூன்று முடிச்சு

      பதிலளிநீக்கு
    17. செந்தில் குமாருக்கு நன்றி. இதுதான் சொல்வது ஆங்கிலத்தை ஆங்கிலத்திலேயே எழுதவேண்டும் என்று. என்றாலும் வாத்தியாரையாவுக்கு நன்றி. மூன்றுமுடிச்சுத் தொடரை ரமணி அவர்கள் எழுதச் சொல்லி எழுதிய பின்தான் உண்மையில் என்னை நானே எனது எழுத்துக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. அதற்கு முதலில் அவருக்கு வாழ்த்தக்களைக் கூறவேண்டும். வாழ்த்துக்கள் கூறில அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி. மஞ்சு பாஷினியின் எழுத்துக்களில் நல்ல நட்பின் உணர்வைக் காணுகின்றேன். வித்தியாசமான எழுத்துப் படையல்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. எல்லோரும் உலகில் திறமைசாலிகள். எல்லோரும் உயரவேண்டும். நாம் எல்லோரும் எழுத்தால் இணையவேண்டும்

      பதிலளிநீக்கு
    18. பிடித்த உணர்வுகள் / உலகமே அன்பில் கட்டுண்டு கிடக்கும் உண்மை…. கன்னம் சிவக்க தலைகுனிந்து தரையில் கால் கட்டைவிரலால் கோலமிடும் நாணத்தை நீங்க கண்டிப்பா இங்க சொல்லலை… பெண் என்றால் கண்டிப்பாக மென்மையும் நாணமும் இருந்தால் தான் பெண்மைக்கு சிறப்பும் அழகும்…. அம்பாள் போல அழகா அடக்கமாக இருக்கும்போது அமைதியாக புன்னகைக்கும்போது சட்டென்று நம் பிம்பம் நம்மைச்சுற்றியிருப்போர் மனதில் பதிந்துவிடும்…
      அடுத்தவங்க மனசு கஷ்டப்படும்போது நாம மனசு இரங்கலன்னா நமக்குள்ள மனிதத்தன்மையே அடிப்பட்டுவிட்டது என்றே தானே அர்த்தமாகும்…. அடுத்தவர் துடிக்கும்போது சட்டுனு போய் நானிருக்கேன் சொல்லுப்பான்னு சொன்னாலே போதுமே அதிலேயே அவர்களின் பாதி கவலைகள் மறைந்தது போல உணர்வார்கள் உண்மையேப்பா…

      அம்மாக்காக பாடல் எழுதி அதை கம்போஸ் பண்ணி இத்தனை இனிமையாக பாடி… அதில் என்னவோ ஒன்று என் மனதை நெகிழவைக்கிறதே…. என்னவோ பயம்மா இருக்கிறதே… அம்மா அம்மாவைப்பார்க்கணும்போல இருக்கு எனக்கு சந்திரகௌரி…. உங்க பாடலில் என்னவோ ஒரு சோகம் தெரிகிறது உங்க குரலில் அந்த சோகம் சொல்வதன் அர்த்தம் அறிந்து தான் எனக்கு உடனே அம்மாவை பார்க்கவேண்டும் போல் தோன்றுகிறது…. தினமும் ஸ்வாமிக்கிட்ட வேண்டிப்பேன்… நான் உயிரோடு இருக்கும்போது அம்மாக்கு ஒன்னும் ஆகிட கூடாது பயம்மா இருக்கு.. அம்மா நல்லா இருக்கணும்… நீங்க அம்மாக்காக பாடின பாட்டு கண்டிப்பாக எல்லோர் மனதையும் அசைக்கும் என்பது நிச்சயம்…..அம்மா அம்பாளைப்போல் மஹாலக்ஷ்மி போல் அழகு…. அவர்களின் ஆசி என்றும் உங்களை உங்க பிள்ளையை உங்க குடும்பத்தையே காக்கும்பா…

      உங்களிடமிருந்த வந்த பதில்கள் அனைத்துமே வித்தியாசமான பதில்பா.. எல்லோரும் ஒருபோல் சிந்திப்பதும் நீங்கள் யூனிக் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்… வரிகள் வைரங்களாக மின்னுகிறது…..

      சிறப்பான பதில்கள் சந்திரகௌரி எழுத்துலகின் ஜாம்பவான்களில் நீங்களும் ஒருவர் என்று உங்கள் வரிகளை படிக்கும்போதே அறியமுடிகிறதுப்பா…

      என் அன்பு வாழ்த்துகள் என்றென்றும்….

      பதிலளிநீக்கு
    19. தென்றல் கீற்றாய் வீசும் குழந்தையின் சிரிப்பும் ஒரு இலக்கியம்தான்!
      நாக்கின் நுனியில் கவுரவம்....நன்று.

      பதிலளிநீக்கு
    20. எனக்கு வந்த மின் அஞ்சல் பொருள் மற்றும் காரணம் அறிய பதில் எழுதினேன். முதலில் யார் என்று தெரியாமலேயே. பின் கண்டேன் என்னுடன் பேச விருப்பம் என்ற செய்தியை. அங்கும் இங்கும் தேடி வந்தால் ஒரு சிறந்த பதிவாளரை அடையாளம் காண முடிந்தது. உங்கள் எழுத்துக்கள் அருமை. ராமாயண கதாபாத்திரம் அகலிகைக்கு பரிந்து கச்சை கட்டி எழுதும் உங்கள் வேகம் பாராட்டுக்கு உரியது. உங்களுக்கு பிடித்த பிடிக்காத மற்றும் வெவ்வேறு விஷயங்களை படிக்கும்போது சாதாரணமானவர்களில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கிறீர்கள் என் வலைப்பூவின் முகப்பில் நான் எழுதியுள்ளது போல், உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உண்மையில் உயிர் கொடுங்கள். மேன்மேலும் சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

      பதிலளிநீக்கு
    21. தங்கள் அழைப்பை ஏற்று புலவர் அவர்களும்
      போளூரார் அவர்களும் மிகச் சிறப்பாக
      பதிவிட்டிருக்கிறார்கள்
      நேரம் கிடைக்கையில் பார்வையிடவும்

      பதிலளிநீக்கு
    22. உங்கள் எல்லோருடைய அன்புக்கும் மிக்க நன்றி. நான் ஒரு விடயத்தைத் தெரியப்படுத்த வேண்டும். அம்மாவினுடைய பாடல் வரிகளும் படமாக்கமும் என்னால் செய்யப்பட்டது. ஆனால் பாடியவர் இலண்டன் தமிழ் வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றும் சைபா மாலிக் என்பவராகும். அவரது அநுமதியைப் பெறாமல் பெயரை எழுதக்கூடாது என்பதனால் எழுதவில்லை. ஆனாலும், அதில் பெரிய தவறு ஏதும் இல்லை. இருந்தாலும் அவர் என்னை மன்னிப்பார் என்றே இப்போது எழுதுகின்றேன். என் தாயார் தீடீரென எந்தவித நோயும் இன்றி என் திருமணத்தின் பின் 28 ஆவது நாள் இறந்தது இன்றும் என்னால் தாங்கமுடியாத வேதனையாகவே உள்ளது. இது போன்று பலவரிகள் அம்மாவிற்காகவும் அப்பாவிற்காகவும் எழுதியுள்ளேன்.

      பதிலளிநீக்கு
    23. சகோதரி
      அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம்
      போல தங்கள் பதிவைப் படிக்கப்படிக்க குணம்
      ஒளி வீசியது.

      வாழும்வரை புதுமைகளைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
      ஏன் என்ற கேள்வி மூலம் பலவற்றை புரிந்துணரவேண்டும்.
      அறிவுக்கு எட்டியவரை தேடல் தொரடவேண்டும்

      இவை, என்னைக் கவர்ந்த வரிகள்
      என் வலையில் நானும்
      போட்டேன் மூன்று முடிச்சுகள் வந்து பாருங்கள

      புலவர் சா இராமாநுசம்

      பதிலளிநீக்கு
    24. மூன்று முடிச்சுக்கள் அருமையாக
      தந்திருக்கீங்க.. உங்கள் அழைப்பை ஏற்று நானும் மூன்று முத்துக்கள்
      எழுதியிருக்கிறேன் .thanks for post

      பதிலளிநீக்கு
    25. தெளிவான பதில்கள்.
      அந்தப் பாடல் நெகிழ வைத்து விட்டது.
      மஞ்சுபாஷினியின் பின்னூட்டங்களைப் படித்தபின் நான் என்ன தனியாகச் சொல்வது தெரியவில்லை.
      என்னையும் எழுத அழைத்து இருக்கிறார். தங்களின் பதிவையும், அவரின் பின்னூட்டத்தையும் படித்த பிறகு இன்னும் பயம் தொற்றிக் கொண்டது..அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமே.

      பதிலளிநீக்கு
    26. மூன்று முடிச்சுக்கள் முத்தான முத்துக்கள் தான் கௌசி !
      எனக்குப் பிடித்த மூன்று முத்துக்கள்,
      *அடுத்தவர் துயருறும் போது உள்ளம் நெகிழ்தல்
      *மற்றவரைக் குற்றம் சொல்லும் முன் உன்னை நீ ஒரு தடவை சரிபார்த்துக்கொள்.
      *ஐரோப்பியசூழ்நிலையில் வளரும் என் மகள்.

      தொடருங்கள் .............

      பதிலளிநீக்கு
    27. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்!

      பதிலளிநீக்கு
    28. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
      அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
      ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
      தங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க
      மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    29. நன்றி ரமணி அவர்களே! உங்கள் போன்றோரின் ஒத்துழைப்பே ஆக்கங்களை எழுதுவதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. தொடரும் பயணத்தில் இணையும் நல்லுறவுகளின் தொடர்பு என்றும் நிலைக்க வேண்டும்;

      பதிலளிநீக்கு
    30. குட்டித்தத்துவம்:

      உன்னையே முதலில் நீ காதலி. உலகம் உன்னைக் காதலிக்கும்.
      யார் எது சொல்லிடினும் ஏன் என்று கேட்டுத் தெளிந்தபின் நம்பு.
      மற்றவரைக் குற்றம் சொல்லும் முன் உன்னை நீ ஒரு தடவை சரிபார்த்துக்கொள்.
      அபாரமான அபூர்வமான வைரம் கிடைத்த உணர்வு.
      முத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
    31. முடிச்சுக்கள் அனைத்தும் உங்களையே எப்படிஎன்று காட்டி நிற்கின்றது...
      அருமையான முடிச்சு,,,
      அம்மாவின் பாடல் கேட்டேன் அற்புதமாக இருக்கு,,
      பாதிவுக்கு வாழ்த்துக்கள்..

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...