• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 1 ஜூலை, 2011

    மாமரத்தில் மாங்கனியே பெறமுடியும்



    அன்று அந்தத் தொடர்மாடிக் கட்டிடம் கலகலப்பில் களித்திருந்தது. மேலும் கீழுமுள்ள குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்தாய்விட்டது. தமிழர்கள் விழாவென்றால் ஒருபடி மேல்த் தான் ஒலியலைகள் வருமென்று சில வருடங்களாக அறிந்துதானே வைத்திருக்கின்றார்கள். சகித்துக்கொள்ளும் பொறுமைசாலிகளை அயலில் பெற்ற ஆனந்தத்தில் தனது பதினொராவது பிறந்ததினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தாள், சிறுமி கவிதா. அங்குமிங்குமாகச் சிறுவர்கள் ஓடிக்கொண்டிருந்தனர். அனைத்துக் கருமங்களும் முடிந்து சாப்பாடும் பரிமாறியாயிற்று. சிறுவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தமது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். என்பதே அந்த வேண்டுகோள். இயல்பாகவே எல்லாவற்றிற்கும் முந்திரிக்கொட்டை போல் முன்றியடித்துக் கொண்டு முன்வரும் கவிதா, ஆடல் பாடல் என்று அனைவரையும் கவர்ந்து கொண்டிருந்தாள். ஒருபுறத்தில் ஒரு சிறுமி விக்கிவிக்கி அழுது கொண்டு நின்றாள். பார்ப்பதற்கே அநுதாபமாக இருந்த அந்தச் சிறுமியை அண்டிய நான், ‚''ஓடிவிளையாடிய கால்கள் நோக்கண்டு விட்டதோ? இல்லை கண்ணில் பெரிதாக ஒரு தூசி விழுந்து விட்டதோ? எங்கே சிரியுங்கள் பார்ப்போம்'' என்று சிரிப்பதற்காக சில்மிசம் பண்ணினேன். அழுகை அதிகரித்தது. பக்கத்தில் சர்வாதிகாரி போல் அச்சிறுமியினுடைய தாயார் நின்று கொண்டிருந்தார்.''விடுங்கள் நன்றாக அழட்டும். எதற்காக இவ்வளவு பணத்தைக் கொட்டி இவளைப் படிப்பிக்க வேண்டும். மொக்கு மாதிரி நிற்கிறதைப் பாருங்கள்ஹஹ எந்நெஞ்சில் சுருக்கென்றது அந்தத் தாயினுடைய வார்த்தைகள். ''ஏன் இவள் கெட்டிக்காரி தானே. படிப்பில் நல்ல புள்ளிகள் தானே வழமையாகப் பெறுவாள். சில சிறுவர்களுக்குத் தங்களுடைய திறமையை வெளிக்காட்டுவதில் விருப்பம் இல்லை. அதற்காக இப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் கூடாது. சிலருக்குச் சிலவிடயங்களில் நாட்டமில்லை. எதற்குக் குழந்தை மனத்தைப் புண்படுத்துவான்'' என்று தாயிடம் கூறி அச்சிறுமியைச் சமாதானம் பண்ணிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தேன். 
           அடுத்த வீட்டுக்காரன் பிள்ளை உதைப்பந்தாட்டத்தில் பதக்கம்  பெற்று விட்டால் எனது வீட்டுப் பிள்ளை அதை விடப் பெரிய பதக்கம் பெறவேண்டும்.  அறிந்தவன் வீட்டுப் பிள்ளை வயலின் வாசித்தால், என்வீட்டுப் பிள்ளையிடம் தூக்கி மிருதங்கம் கொடுக்கப்பட்டு விடும் அப்பிள்ளை அதில் ஈடுபாட்டுடன் இருக்கின்றதோ இல்லையோ அதனுடன் மாயத்தான் வேண்டும்.  யாரிடம் என்ன திறமை கொட்டிக்கிடக்கிறது என்று அறியாது சிறுவர்களை ஆக்கினைப்படுத்தும் எமது சமுதாயம், உணரவேண்டியது திறமைகள் வௌ;வேறு விதமாக ஒவ்வொரு சிறுவர்களும் பெற்றிருப்பார்கள்.  அவற்றை அறிந்து அவர்கள் ஈடுபாட்டைப் புரிந்து அவர்களை ஈடுபடுத்தல் மனநிலை மருந்தல்லவா. மாமரத்தில் மாங்கனியே பறிக்கலாம். அனைத்து வகைக் கனிகளையும் மாமரத்தில் பெற நாம் முயற்சிப்பது முறையா? எம்மால் முடியாத காரியத்தை எனது பிள்ளை சாதிக்கவேண்டும், அடுத்தவன் பெருமைப்படும் அளவிற்கு என் பிள்ளை திறமை காட்டவேண்டும் அதன் மூலம் என் பெருமையை விலாசப்படுத்த வேண்டும். என்று நாம் நினைப்பது எந்தவிதத்தில் நியாயம். ஆசையெல்லாம் தீர்த்து வைக்க நம் கைக்கு அகப்பட்ட பொருளல்ல நமது வாரிசுக்கள். அவர்கள் அவர்களுக்காகவே பிறந்தவர்கள். அவர்களுக்கென ஆசாபாசங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்வோம் இரம்யமான உலகை இயல்பாகவும் இன்பமாகவும் வாழ வழிவிடுவோம்.


    இவ் இலக்கியத்தை என் குரலில் கேட்க விரும்பினால் :

        Get this widget |     Track details  | eSnips Social DNA    

    16 கருத்துகள்:

    1. நல்ல பயனுள்ள பதிவு தான். குழந்தைகளை அவரவர் விருப்பப்படி விட்டுப்பிடிக்க வேண்டும். எதையும் அவர்கள் மேல் திணிக்கக்கூடாது தான்.

      பதிலளிநீக்கு
    2. நல்ல பதிவு.
      We are putting more pressure on our children.

      பதிலளிநீக்கு
    3. குட் போஸ்ட் மேடம்

      /......ஆசையெல்லாம் தீர்த்து வைக்க நம் கைக்கு அகப்பட்ட பொருளல்ல நமது வாரிசுக்கள்.

      குட் ஒன்

      பதிலளிநீக்கு
    4. முதலில் பதிவை படித்து முடித்துவிட்டேன்
      மிகச் சிறப்பாக இருந்தது
      பின்னால் தான் தங்கள் குரல் மூலமும்
      பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிந்து
      மீண்டும் ஒருமுறை கேட்டு ரசித்தேன்
      தேனில் ஊறிய பலாச் சுளை போல
      இலங்கைத் தமிழருக்கே உரிய அழகிய
      உச்சரிப்பில் கேட்கக கேட்க மெய்மறந்து போனேன்
      தங்கள் இனி வரும் பதிவுகளை உங்கள் குரல் மூலம்
      கேட்கும் படியாகவே பதிவு செய்யலாம் அருமை அருமை
      தொடர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    5. பெற்றோர்க்குள்ளும் சுயநலம் இருக்கின்றது என்பதை இவ்வாறான சம்பவங்கள் மூலமே அறிகின்றோம்.

      பதிலளிநீக்கு
    6. நன்றி ரமணி அவர்களே. இனிவரும் பதிவுகளை அப்படியே செய்கின்றேன்.

      பதிலளிநீக்கு
    7. பலாத்காரங்கள் பலன் தராது என்பதைப் பலர் இன்றும் கூட புரிந்து கொள்ளாதது துர் அதிஷ்டம் தான்.
      Vetha.Elangathilakam.
      http://kovaikkavi.wordoress.com
      Denmark.

      பதிலளிநீக்கு
    8. சில பெற்றோர் இது போன்ற தவறுகள் செய்கின்றனர், அவர்களுடைய தோற்றுப்போன வாழ்க்கைக்கு ஒரு வடிகாலாக செய்கின்றனர். முக்கியமாக இது போன்ற தவறுகளை செய்பவர்கள் படித்த பெற்றொர்கள்தான். ஆனால் மிக சமீப காலத்தில் இது போன்ற பார்வைகள் மாறியுள்ளது என்று நான் உறுதியாக சொல்வேன். இது போன்ற பதிவுகள் பார்வையை மாற்றியுள்ளன.

      பதிலளிநீக்கு
    9. சொல்ல வெட்கமாயிருக்கிறது. நானும் என் குழந்தையிடம் இப்படித்தான் இருக்கிறேன். எல்லாவற்றிலும் முதலில் வரவேண்டும் என்ற என் எதிர்பார்ப்பை அவனும் பூர்த்தி செய்து விடுகிறான். ஆனால் எப்போதாவது தவறும் போது கடிந்து கொள்கிறேன்.
      --படித்துவிட்டு கண்ணை மூடிக் கொண்டு தங்கள் குரல் பதிவை ரசித்தேன். இயல்பாகவே இலங்கைத் தமிழர்களின் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். கலீல் ஜிப்ரானின் கவிதையை நினைவுப்படுத்தியது இந்த பதிவு.

      பதிலளிநீக்கு
    10. இதெல்லாம் எங்க புரியப்போகுது
      பிள்ளைகளை வேவிக்கு வழக்கும் ஆடு போல எல்லோ வளர்கிறார்கள்

      பதிலளிநீக்கு
    11. நன்றி சிவகுமாரன் அவர்களே! குழந்தை எதிர்காலத்தில் நன்றாக வாழவேண்டும் என்பது இயல்பே. ஆனால், எங்கள் எண்ணங்கள் அனைத்தையும் அதன் மூலம் நிவர்த்தி செய்துவிட வேண்டும் என்று நினைப்பதுவே தவறு. பாவம் அவர்கள். அவர்கள் அவர்களுக்காகப் பிறந்தவர்கள். அவர்களுக்கு என்று ஒரு உலகம் அமைக்க நினைப்பவர்கள்.

      பதிலளிநீக்கு
    12. உண்மைதான் வேள்விக்கு வளர்க்கும் ஆடுகள் போலவேதான்.

      பதிலளிநீக்கு
    13. நல்லதொரு பதிவு .குறிப்பாக புலம்பெயர் வாழ் பெற்றார்கள் தங்கள் பிள்ளைகளை பக்கத்து வீட்டு தமிழ் பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பார்த்து அவர்களின் மனதை புண்படுத்துகிறார்கள்,இங்கு லண்டனில் 7 +,11 + என சிறு வயதினிலே துன்புறுத்துகிறார்கள்.பிள்ளைகள் அந்தந்த வயதில் அவைகளைச் செய்யாமல் தடுக்கிறார்கள் இது குழந்தைகளின் மனோநிலையை பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
      அழகு தமிழை தங்களின் குரலில் கேட்டதில் மகிழ்ச்சி.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...