ஒரு புத்தகம் படிக்கும் போது கலாசாரம், மொழி, வரலாறு, மனித உணர்வுகள் போன்றவற்றை வெகுவாக நாம் கற்றுக் கொள்ளலாம். அதற்கு உதாரணமாக திகழ்கின்ற புத்தகம் தான் யாத்வஷேம். இந்த நூலை நேமிசந்த்ரா என்னும் கன்னட எழுத்தாளர் எழுதியுள்ளார். இதனைத் தமிழில் கே. நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது இந்த நூலுக்கு கிடைத்திருக்கின்றது.
இந்த நூலின் பெயர் யாத் வஷேம் என்பது மரணம் அடைந்த ஆறு மில்லியன் யூதர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற இடம் வாலன் பேர்க் என்பவர் தான் இதனை அமைத்திருந்த
இது ஹிட்லருடைய யுத்த காலத்தில் ஜெர்மனி பெர்லினில் இருந்து தப்பித் தன்னுடைய தந்தையுடன் வந்த ஒரு பத்து வயது சிறுமி ஹ்யானா கூறுகின்ற கதை. வந்த ஒரு வருடத்தில் தந்தை இறந்து விடுகின்றார். தனித்து நின்ற பிள்ளையை கன்னட மொழி பேசுகின்ற ஒரு குடும்பம் எடுத்து வளர்க்கின்றது. அந்தக் குடும்பத்திலேயே இருக்கின்ற விவேக்கை ஹ்யானா திருமணம் செய்கின்றாள். திருமணமாகி குழந்தை பெற்றெடுக்கின்றாள். தமிழ் பெண்ணாகவே அனிதா என்ற பெயருடன் அவர்களுடன் வாழுகின்றாள். அவளுடைய எழுபதாவது வயதில் மகன் பல வருடங்களாக கனவு சுமந்த அனிதாவை அவருடைய அம்மாவையும் சகோதரர்களையும் தேடிச் செல்ல விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கின்றான். தனது மனைவியின் சுமையை இறக்கி வைப்பதற்காக விவேக் ஹ்யானாவை அழைத்துக் கொண்டு இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி, ஆம்ஸ்ரடாம், என்று தேடுகின்றான். தன்னுடைய தாய் சகோதரர்களை அவள் கண்டுபிடிக்கின்றாளா என்பது தான் இந்த கதையின் முடிவு. இதை அறிவதற்கு நிச்சயமாக நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு இடமாக அவள் செய்கின்ற போது அந்த இடத்தில் நடந்த சம்பவங்கள் காட்சிகள் மனதை உருக்குகின்ற சம்பவங்கள் அனைத்தையுமே வாசிக்கக் கூடியதாக இருக்கும். ஜெர்மனியில் யூதர்கள் பற்றிய எத்தனையோ திரைப்படங்களை தொலைக்காட்சியில் நான் பார்த்திருக்கின்றேன் ஆனால் இந்த புத்தகத்தை வாசிக்கின்ற போது நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒரு அழுத்தத்தை இந்த புத்தகம் ஏற்படுத்துகின்றது.
ஜூதர்கள் பாதிக்கப்பட்டார்கள் யூதர்களால் பாலஸ்தீனர் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று இறுதி பகுதியில் அனிதா என்ற கதாபாத்திரம் சொல்லுகின்ற போருக்கு எதிரான நியாய தீர்ப்புகள் மிக சிறப்பாக அறிவுறுத்தலாக அமைந்திருக்கின்றன.
இறுதிப் பகுதியில் அவசியம் இல்லாத யுத்தத்தையும் மனிதநேயமற்ற கொலையையும் கண்டிக்கும் வண்ணமாக இக்கதையின் நாயகி ஹ்யானா பேசுவதாக கதை முடிந்திருக்கின்றது.
இப்போது இஸ்ரேல் வந்திருக்கின்றாள். இஸ்ரேல் என்றால் 3000 ஆண்டுகள். பழமையான வரலாறு இருக்கின்றது. வெற்றி கொண்ட அரசன் என்பதுதான் அதன் பொருள். ஹீப்ரோ மொழியில் பாலஸ்தீனம் என்றால் பாலஸ்தீனர்களின் பெருமை என்று பொருள்.
யூத மதத்தவர்களுடைய மொழியையும் பழக்கவழக்கங்களையும் இந்த நூலிலே நாம் கற்றுக் கொள்ளலாம் அவர்களுடைய சபாத் என்னும் சனிக்கிழமை விரதம் பார்த் மிஸ்வாக் என்னும் பூப்புனித நீராட்டு விழா போன்ற பல விடயங்களை நாம் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய உடலை எப்படி புதைக்கின்றார்கள்? 60 லட்சம் யூதர்களும் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள்.
பிராமணர்கள் பிராமணர்கள் அல்லாதவர்களில் உள்ள பிராமணர்கள் அதாவது குஞ்சுடிகர்கள், அவர்களுடைய பழக்கவழக்கங்கள் பிராமணர்களுடைய பழக்க வழக்கங்கள், பெங்களூர் கோரிப்பாளையத்தில் காணப்படும் யூதர்களுடைய சமாதிகள் புனித டோராவின் சொல்லப்பட்டிருப்பவை ஆபிரகாமின் பிள்ளைகள் பெற்ற விபரம், ஹீப்ரு மொழி சொற்கள்விஷவாயு, டி கம்ப்ரஷன் அறை, DachauStaft in München. Holocaust Museum I Washington, அழுகைச் சுவர், ஜெருசலேம் பற்றிய விளக்கங்கள்
60 லட்சம் யூதர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டனர்
சில புத்தகங்கள் இதுவரை நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கு ஒரு தீர்ப்பாக அமைவதை நீங்கள் அறியக்கூடியதாக இருக்கும் உங்களுக்கு தீர்ப்பை நீங்களே வழங்குவீர்கள். உன்னையே இந்த புத்தகத்தை வாசித்த போது என்னுடைய பல அறியாமைகள் நீங்கின. ஒரு நூலுக்காக இந்த எழுத்தாளர் சேகரித்த அனுபவங்களையும் அறிவையும் எம் போன்ற வாசகர்களுக்கு பயன்படுத்தியமைக்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.