வியாழன், 12 மே, 2022
சித்திரைப் பெருமகனார் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை
காலம் மாறலாம். கருத்துக்கள் மாறலாம், கலாசாரம் மாறலாம், வாழ்க்கை மாறலாம், வாழும் முறைகள் மாறலாம் - ஆனால் மாறாது மனிதன் மனதில் பதிந்து இருக்க வேண்டிய மாபெரும் பண்பு நன்றியென்னும் பண்பு. இது வானத்தை விடப் பெரிது, பூமியைவிடப் பெரிது, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. ஒருவருக்கு உதவி செய்ததன் மூலம் தன்னுடைய துன்பத்தை நீக்கியவர்களின் நட்பை, அடுத்த அடுத்த பிறவிகளிலும் நினைத்துப் போற்றுபவர்களே உண்மையான சான்றோர்கள் என்பார் வள்ளுவர். அந்த வகையிலே கிழக்கின் மைந்தனும், தமிழின் ஒளியும், பேச்சாற்றலின் சிகரமும், ஆன்மீகவாதியும், இலக்கிய கர்த்தாவுமாகிய முன்னாள் அமைச்சர் கலாநிதி செல்லையா இராஜதுரை அவர்களை கெரவிக்கும் முகமாக தமிழ் வான் அவையின் 23 ஆவது மாதாந்த இணையவழி பன்னாட்டு இலக்கியச் சந்திப்பிலே சித்திரைப் பெருமகனாராக இணைந்திருக்கின்ற ஐயா செல்லையா இராஜதுரை அவர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் வணங்கி மகிழுகின்றேன். இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதையிட்டு பெருமகிழ்ச்சி கொண்டு வருக வருக என்று வரவேற்கின்றேன்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளர்களாக இலங்கையில் இருந்து இணைந்திருக்கின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் தம்பிராஜா ஈஸ்வரராஜா அவர்களையும், எழுத்தாளர் தவராஜா இராஜேந்திரன் அவர்களையும், பிரான்சிலிருந்து கலந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் அவர்களையும் வணங்கி மகிழுகின்றேன். வருக வருக என்று வரவேற்று மகிழுகின்றேன்
இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கும் பேராசிரியர் மௌனகுரு சின்னையா அவர்களையும், சுவாமி விபுலானந்த அழகியற்கற்கை நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழக பணிப்பாளர் பாரதி கென்னடி அவர்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர் உஷாந்தி துரைசிங்கம் அவர்களையும், ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய அதிபர் சுதாகரி அவர்களையும், களுவாஞ்சிக்குடி முன்னாள் நூலகர் ரமணி ஜெயபாலன் அவர்களையும், அத்துடன் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்திருக்கின்ற பாடுமீன் ஸ்ரீகந்தராஜா அவர்களையும், இங்கிலாந்திலிருந்து கலந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களையும், செய்தியாளர் சீவகன் அவர்களையும், எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜா அவர்களையும், கனடாவில் இருந்து கலந்து கொண்டிருக்கும் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் அவர்களையும், ஜெர்மனியில் இருந்து கலந்து கொண்டிருக்கின்ற எழுத்தாளர் புத்திசிகாமணி அவர்களையும், தம்பிராஜா பவானந்தராஜா அவர்களையும், எழுத்தாளர் ஜெகதீஸ்வரி மகேந்திரன் அவர்களையும்.. .. .. .. .. .. .. டென்மார்க் இலிருந்து நன்றியுரையாற்ற வந்திருக்கின்ற கலாநிதி ஜீவகுமாரன் அவர்களையும் என் கண்களுக்கு அகப்படாது தவறிவிடப்பட்ட அனைவரையும் அன்புடன் இருகரம் கூப்பி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். வருக வருகவென்று வரவேற்று மகிழுகின்றேன்
இலக்கியம், இலக்கிய கர்த்தாக்கள், இலக்கியம் சார்ந்த இசை, நடனம், நாட்டுக்கூத்து, போன்ற கலைகள் என்று தடம் பதிக்கும் எங்களுடைய தமிழ் வான் அவையிலே இம்முறை சிறந்த அரசியல் வாதியும், இலக்கிய பேச்சாளரும், ஊடகவியலாளருமான ஐயாவைக் கௌரவிப்பதில் மீண்டும் மீண்டும் பெருமை கொள்ளுகின்றது இந்தத் தமிழ் வான் அவை.
ஐயாவுக்கு 295 வயதாகின்றது. இந்த மேடை அரசியல் மேடை அல்ல என்பதை நாம் எல்லோரும் மனதிலே பதித்துக் கொள்வோம். அவருடைய சமூகப்பணி, அவருடைய ஆற்றல்கள், திறமைகள், அவரால் நீங்கள் பெற்ற அனுபவங்கள் சாதகங்கள், இவை பற்றிப் பேசுவதன் மூலம் அவரைக் கௌரவித்து மகிழுவோம். அவரின் மனதிலே மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம். உரையாளர்களையும், நடனம், இசை, கவிதை என்று என்னால் இயன்றவரை ஒழுங்குபடுத்தியுள்ளேன். ஐயாவினுடைய இரண்டு புத்தகங்களை அவருடைய மகள் பூங்கோதை அவர்கள் அனுப்பியிருந்தார். அதன் உதவியுடன் ஐயாவைப் பற்றிய ஒரு காணொளி செய்திருக்கின்றேன். அதற்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகி;ன்றேன். ஐயா மலேசியாவில் இருந்து ஆற்றிய உரையினை பத்மநாபன் காண்டீபன் அவர்கள் அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றியைத் தெரிவித்து அதில் ஒரு 6 நிமிடங்கள் வெட்டி உங்களுக்கு ஒளிபரப்புகின்றேன்.
கருத்துரை பகிர்ந்து கொள்வதற்குப் பலர் இங்கு வந்து அமர்ந்திருக்கின்றார்கள். ஐயா கலாநிதி செல்லையா இராஜதுரை அவர்களுக்கும் எல்லோருக்கும் இன்றைய நாள் மறக்க முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நல்லநாளாக அமையும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடைய ஒத்துழைப்பையும் தயவுடன் வேண்டி இன்றைய நிகழ்வை ஆரம்பிக்கின்றேன்.
புதன், 11 மே, 2022
இன்பத் தமிழும் நாமும் sTs தொலைக்காட்சியில் வாசித்த கவிதை
கன்னித் தமிழே நீ காவியத்தில் புரண்டெழுந்தாய்
காளமேகம், கம்பனெனும் கவிஞர்கள் நாவினிலே நடம்புரிந்தாய்
சங்கத்துச் சான்றோர்கள் சபைதனிலே ஆட்சி செய்தாய்
நக்கீரன் சொற்களிலே வற்றாத நதியானாய்
கோவை உலா அந்தாதியென எமை ஆற்றுப்படுத்தினாய்
கலம்பகத்தில் களித்து நின்றாய் பாரதியில் மயங்கிநின்றாய்
வள்ளுவன் வாக்கினுக்கு சாவா மருந்தளித்தாய் - இன்று
என் நாவினிலே எழுந்தருளி நா இனிக்க நான் பாட
தேன் இனிக்க விருந்தாகி தெவிட்டாத துணையாக வருவாய்
தமிழே உனக்கு முதல் வணக்கம்
அன்னைத் தமிழை அரியணையேற்றி அழகுபார்க்கும்
எஸ்.ரி.எஸ் தொலைக்காட்சியினருக்கும் வணக்கம்
அரங்கம் அதிரும் தமிழை அழகாய் அதிரவைக்கும்
தொகுப்பாளர் சின்னராசா கணேஸ் அவர்களுக்கும் வணக்கம்
அன்னைத் தமிழை அழகொழுக அடுக்கி வைக்க
வண்ணமாய் வந்தமர்ந்த கவிஞர்களுக்கும் வணக்கம்
முத்தான தமிழை சொற்சித்திரமாய் சொல் தொடுக்கும்
முல்லை மோகன் அவர்களுக்கும் வணக்கம்
இன்பத் தமிழின் கவியின்பம் பருக இணைந்திருக்கும்
அனைவருக்கும் வணக்கம்
இன்பத் தமிழும் நாமும்
அன்னைத் தமிழே நீ விழியானாய் எம் மொழியானாய்
விழியின் றிவ்வுலகில் ஒளியில்லை
நீயின் றிவ்வுலகில் எமக்கு அறிவில்லை
கருவறையில் களித்திருக்க தாலாட்டாய் உள்நுழைந்தாய்
கன்னித் தமிழாய் காலமெல்லாம் கூட வந்தாய்
தொட்டிலிலே கண்ணுறங்க தோளினிலே சாய்ந்துறங்க
கட்டிலிலே நானுறங்க காலமெல்லாம் கூட வந்தாய்
கட்டிக் கரும்பே கட்டழகுப் பெட்டகமே
கண்ணான கண்மணியே கனியமுது சக்கரையே
கொவ்வைப் பழமே என் கொஞ்சும் மொழியேயென
கொஞ்சிக் கொஞ்சி எம்தாய் கொஞ்சிய மொழிகளெல்லாம்
எம் நெஞ்சினிலே தேனாய் இனித்ததடி
பாகாய் சொரிந்ததடி பக்குவமாய் நாம் வளர்ந்தோம்
துள்ளிவிளையாடித் தோழியரோடாட்டம் போட்டு
வள்ளிக் கிழங்கெடுத்து வரிவரியாய் கவி தொடுத்தோம்
அரிமிளகு திரிமிளகு அன்னம் பிலாக்காய்
அழகழகாய் சமைத்தெடுத்து அதிலுமொரு பாட்டிசைத்தோம்
சங்கத்தமிழினிலே சஞ்சாரம் செய்து
பல்கலைக்கழகமதில் பாட்டோடு கூடவந்தாய்
நற்றிணை நல்ல குறுந்தொகையென
எட்டுத்தொகையாக எமக்குள் நுழைந்தாய்
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லையென
பத்துப் பாட்டாக மனதுள் பதியம் போட்டாய்
சிற்றிலக்கியம் பேரிலக்கியம் சிறப்புமிகு புதுக்கவிதை
வற்றாத நதியாக வழமாக சொரிந்த சொற்கள்
மனமெங்கும் தமிழாய் பூத்துக் குலங்கி பூரிப்புக் கண்டோம்
மனமெங்கும் பொழிந்த மாசறு தமிழே யுனை
தெம்மாங்குத் தமிழாலே மாணவர் மனமெங்கும்
தென்றலாய் தவழ்ந்து வர தேனாகப் பொழிய வைத்தோம்
வாழ்வாங்கு வாழும் உன் உயர்ச்சி கண்டு களிப்படைந்தோம்
பக்குவமாய் நாமிருக்க சுத்திவரும் புவியைப்போல்
சுத்திச் சுத்தி வந்தவர்கள் சுளை சுளையாய்
பாட்டிசைக்க மனசெங்கும் பவனி வந்தாய்
வைரமுத்து கண்ணதாசன் வாலி எனும் கவிஞர்கள்
வரிகளெலாம் வரிசைகட்டி மனதுள் மத்தளம் போட்டன
சக்கர நாற்காலியாய் மனதுள் சங்கீதம் சுழன்றுவர
சாகரமாய் தமிழின்பம் இங்கிதமாய் உள்நுழைய
கன்னிப் பருவத்திலே எமைக் களிப்படையச் செய்தவளே
மான் போலத் துள்ளி மயில் போல நடனமாடி
தேன் போல சுவைத்து செங்கதிர் போல ஒளிவீசி
வான் போல நிறைந்து வளர் மதி போல குளிர்ந்து
குயில் போல இசைத்து என் நாடி நரம்பெல்லாம்
மின்னோட்டமாய் நிறைந்திருக்கும் தமிழே
இன்று
கணனித் தமிழாய் காலெடுத்து வைத்தாய்
தொட்டு எம் கைதட்ட கம்பீரக் காட்சி தந்தாய் - இன்று
கொரானா உலகெங்கும் கொக்கரிக்க
கோலோச்சும் சித்தர்தம் மூலிகைகள்
சித்தர் தமிழாய் சிறந்து நிற்கும் முத்திரைகள்
சித்தமெங்கும் நிறைந்திருக்கும் சிறப்பனைத்தும்
பண்டைத் தமிழைக் காணவைத்து வாழ்க்கைப்
பக்கம் பக்கமாய் எம்மோடு கூடவரும் தமிழே
செம்புலப் பெயல் நீர்போல் அம்புவி யெங்கும்
அரியணையேறி அரசாட்சி செய்து அகிலம் போற்ற
வாழி நீ தமிழே வாழி நீ
ஞாயிறு, 8 மே, 2022
அன்னையர் தின வாழ்த்08.05.20222022
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
-
என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை. வானுயர் என் விளக்கு நீ என் வயிற்றி...