• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 7 மே, 2020

    அம்மா ஒரு ஆச்சரியம்



            

    நீள விழிப் பார்வையின் ஓரங்களில் - உன்
    காட்சிகளின் காயங்கள் மாறவில்லை
    மிதக்கின்ற உன் நினைவுகளை – என்
    நினைவுப்பலகை இன்னுமே அழித்து விடவில்லை


    யாருக்கும் தெரியாமல் ஆயிரம் முறை அம்மா என்று 
    அழைத்துப் பார்க்கிறேன் அணைத்துப் பார்க்கிறேன்
    சித்திரஒளிக் கீற்றாய் சிந்தனைக்குள் ஒரு விம்பம்
    நாசித் துவாரத்துக்குள் நான் சுவைத்த உன் நறுமணம்
    என்னைக் கட்டிப் போட்ட அந்த அழகின்  விம்பம்
    என் உயிர் உலகில் இருக்கும் வரை 
    என்னை விட்டுப் போகாது மனம் விட்டு மாளாது

    எழுதி எழுதிக் குவிக்கிறேன் ஏற்றுக் கொள்ள நீ இல்லை
    திறமைகளுக்கு சில்லுப்பூட்டுகிறேன் கூட வர நீ இல்லை
    அழகழகாய் ஆடை கட்டுகிறேன் மடிப்பெடுக்க நீ இல்லை
    பெற்ற கடன் முடிந்தது நான் விட்ட குறை செய் என்றாய்
    எட்டி எட்டிப் போகிறேன் நான் 
    உன் உயரம்; எட்டவே முடியவில்லை

    சோற்றுப் பருக்கைக்குள் நெய்விட்டு தாளித்த
    சுண்டக்காய் கறி மணம் மூக்குக்குள் நிற்கிறது – நானும்தான்
    சற்றும் மாற்றமின்றி சமைத்துத்தான் பார்கின்றேன்
    சத்தியமாய் புரியவில்லை உன் சாகசக் கறிச்சுவையை

    பரீட்சை இடைவெளியில் பதறியடித்து ஓடி வர 
    சுடுசுடு சோற்றுக்குள் மீன்குழம்பு சேர்த்தெடுத்து
    ஆவென்று கூறிக்கூறி ஊட்டிவிட்ட மணம் மட்டும்
    மூக்கிற்குள் நிற்கிறது ஊட்டிவிட்ட உன் கரங்கள் 
    உருத்தெரியாமல் மறைந்துதான் போனது

    சோளன் முத்துக்களை தனித்தனியே பிரித்தெடுத்து 
    ஒத்தை இரட்டை விளையாட்டை உன்னோடு நானாட
    நான் தோற்றுப் போகும் வேளையெல்லாம் 
    முத்துக்களை மாற்றி வைத்து நீ தோற்றுப் போகும்
    சங்கதியை இப்போது தாயாகித்தான் உணர்கின்றேன்

    அன்பிலும் அழகிலும் அறிவிலும் ஆர்வத்திலும்
    உன்னை வெல்லும் யுத்தியை மந்திரமாய் மறைத்து விட்டாயே
    ஏணிக்கு வழி உண்டு உன்னிடம் எட்டி வர வழியில்லை
    நினைத்துத்தான் பார்க்கி;ன்றேன் வாழ்க்கை பேராச்சரியம்



    07.04.2020  
    சித்ராபௌர்ணமி



















    5 கருத்துகள்:

    1. தங்களின் கவியின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு எழுத்தும் உண்மை, உண்மை, அருமை

      பதிலளிநீக்கு
    2. அம்மாவிற்கான உங்கள் கவிதை நன்று. ரசித்தேன்.

      பதிலளிநீக்கு
    3. அன்னையின் நினைவுகள் ஆளாக்கி விட்டது வரையா அகிலத்தில் இருக்கும் வரையா அல்ல அதையும் கடந்தென அற்புதமாய் உரைத்தீர்.

      அன்னையர் தின வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    4. தாயன்பு உள்ளத்தில் உருள
      தாயவள் நினைவு அடிக்கடி வர
      சிறப்பாக அமைந்த பாவிது

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...