• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 14 ஜனவரி, 2020

    சூரியப் பொங்கல்

                    

                       

    தினமும் அரிசிச் சோறை உண்ணுகின்ற நாம், அதனை எமக்கு அளிக்கின்ற விவசாயிகளைப் போற்றாது இருப்பது நன்றி மறந்த செயலாகும். நாளெல்லாம் எமக்காக உழைப்பவர்கள். தாம் பெற்ற முதல் நெல்லை சூரியனுக்குப் பொங்கலாகப் படைத்து கொண்டாடுகின்றார்கள். விவசாயத்திற்கு உதவுகின்ற மாட்டுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் வைக்கின்றார்கள். அதேபோல் இந்த உலகம் உய்ய எதனையுமே எதிர்பார்க்காது எம்மைப் பாதுகாக்கின்ற சூரியனுக்கு நன்றி சொல்வதற்காகவும், விவசாயிகளைப் போற்றுவதற்காகவும் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றோம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றார் வள்ளுவப் பெருந்தகை. இவ் உழவுத் தொழிலுக்கு முக்கிய காரண கர்த்தா சூரியன் அவர் யார்? அவருடைய குணநலங்கள் என்ன என்பதையும் இன்றைய நாளில் சிந்திப்போம்.

    பூமியிலே உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றலைத் தருவது சூரியனே. ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒவ்வொரு சூரியனே. வானவெளியானது யாதுமற்ற ஒரு வெளியாகவே இருந்தது. ஆயிரத்து நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன் திடீரென ஒரு எரிமலை போன்ற ஒன்று வெடித்துச் சிதறியதாம். அவ்வாறு சிதறியவைதான் நட்சத்திரங்கள் என்று சொல்லப்படும் சூரியன்கள் என வானவியலாளர்கள் கூறுகின்றார்கள். அதன்பின் 100 கோடி ஆண்டுகள் கழித்து சூரியனில் இருந்து வெடித்துச் சிதறியனவே கோள்கள். இந்தக் கோள்கள் ஒரு ஈர்ப்பு மூலம் சுற்றுகின்றன. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரம் எவ்வளவு என்று பார்த்தால் 5,600 ஒளி ஆண்டுகள் என்கின்றார்கள். ஒரு ஒளி ஆண்டு என்றால், ஒளி செல்லுகின்ற தூரம். ஒளியானது ஒரு வருடத்தில் 8 இலட்சம் கோடி கிலோ மீற்றர் தூரம் செல்லக் கூடியது. இதேபோல் 5,600 ஒளி ஆண்டுகள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரமாகின்றது. இவ்வளவு தூரம் தாண்டி எம்மை அடைகின்ற சூரியக் கதிர்களையே எம்மால் தாங்க முடியாது உள்ளது. எப்படி எம்மால் நெருங்க முடியும். சூரியன் இல்லாமல் எம்மால் மட்டுமல்ல எந்த உயிரினங்களாலும் உயிர் வாழ முடியாது. 

    இயற்கையின் அற்புதமே சூரியன். பூமியின் ஈர்ப்பு சக்தி போலவே சூரியனிலும் ஈர்ப்பு சக்தி இருக்கின்றது. அது பூமியின் ஈர்ப்பு சக்தியைப் போல 28 மடங்கு அதிகமானது. கிரகங்களை அப்படியே இழுத்து எரித்து பஸ்மமாக்கிவிடும். ஆனால், சூரியமண்டலத்திலுள்ள எல்லாவற்றையும் சூரியன் இந்த ஈர்ப்பு சக்தியால் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது. 

    சூரியகிரகம் இல்லாது எம்மால் வாழவும் முடியாது. அதேபோல் அதனை எம்மால் நெருங்கவும் முடியாது. எட்ட நின்று தன் தீக் கரங்களில் இருந்து எம்மையும் உயிர்களையும் பாதுகாக்கும் சூரியக் கடவுளுக்கு நாம் நன்றி சொல்லி மகிழ்வோம். நீங்கள் நன்றி சொல்லாவிட்டால் சூரியன்  உதிக்க மாட்டாரா? ஒவ்வொரு நாளும் சூரியநமஸ்காரம் செய்கின்றோம்தானே! என்று பலர் கூறுவது கேட்கின்றது. ஆனால், அன்னையர் தினம் என்று ஒருநாள், மகளிர் தினம் என்று ஒருநாள், காதலர் தினம் என்று ஒருநாள், கோயில்களில் திருவிழா என்று நாட்கள் எல்லாம் நடத்துகின்றபோது அவர் இல்லையென்றால், நாம் இல்லை என்று ஒருவர் இருக்கும் போது அவரை மனதார நினைத்துக் கொண்டாடுவது பெரிய விடயமாகவே நான் கருதுகின்றேன். அதைவிட விவசாயிகள் இனித்திருக்கும் நாள் இந்நாள் என்பது உண்மையே. எனவே அரிசிப் பொங்கலிட்டு மகிழ்ந்தின்புறுவோம். இன்றைய நாளைத் தைத்திருநாளாக கொண்டாடி மகிழ்வோம்.



    5 கருத்துகள்:

    1. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

      பதிலளிநீக்கு
    2. சூரிய பொங்கல் என்று விடுமுறை என்பதால்.. கிடைத்த சிறிய இடைவெளியில் ...

      பதிலளிநீக்கு
    3. சிறப்பானதோர் பகிர்வு.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...