• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 22 செப்டம்பர், 2018

    மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு முதல்நாள் நிகழ்வு படங்களுடன்


    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் - சென்னை, அழகப்பா பல்கலைக்கழகம் - காரைக்குடி, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் - இலங்கை ஆகியவற்றுடன் இணைந்தும், ரீ.ஆர்.ரீ தமிழொலி வானொலியின் அனுசரணையுடனும், பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம் - பாரிசு நடத்திய மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் முன்னெடுப்பில் புரட்டாதி மாதம் 08-09 ஆகிய இரண்டு தினங்கள் பாரிஸின் ஐரொஸ்லாவ் வசேக் அரங்கில் நடைபெற்றது. 

                   இம்மாநாடு இலக்கியச் செவ்வியம், விபுலாநந்தம் என்னும் இரண்டு தலைப்புக்களில் இரண்டு நாள் அமர்வுகளாக அமைந்திருந்தன. இந்நிகழ்வுக்குப் பல கல்வியியலாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும், அமைச்சர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.  







                                       
    08.09.2018 இலக்கியச்செவ்வியம் 
     
    பன்னாட்டு உயர்கல்வி நிறுவன ஆசிரியை தேவமாலாவின் குரலிசை வகுப்பு மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. 


    அதன்பின் செல்வன் தே.பிரவீண் பியானோ இசையுடன் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு உயர்கல்வி நிறுவனக் குரலிசை மாணவர்கள் ந.நிதர்ஷன், ச.ஸ்ரெபான் ஆகியோர்கள் தமிழ்மொழி வாழ்த்து இசைத்தனர். அதன்பின் செல்வி.த.ஆதனா யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்து புஷ்பாஞ்சலி நடனத்தை ஆடி மகிழ்வித்தார். 


    அதனைத் தொடர்ந்து  பேராசிரியர் முனைவர் சதாசிவம் சச்சிதானந்தம் அவர்கள் மாநாட்டுக் கருத்துரையும் வரவேற்புரையும் என்னும் தலைப்பில் இதற்கு முன் நடைபெற்ற இரண்டு மாநாடுகள் பற்றியும் இம்முறை நடக்கவிருக்கின்ற மாநாடு பற்றியும் அவற்றில் ஆற்ற இருக்கின்ற உரைகள் பற்றியும் மிக விளக்கமாக உரையாற்றினார். 


          அதனைத் தொடர்ந்து பிரான்சு நாட்டுக்கான கனம் பொருந்திய இலங்கைத் தூதுவர்
    B.K.Athauda அவர்கள்



    தமிழ்மொழியின் பழைமை பற்றியும், தமது தூதரகத்தில் எம்மொழியிலும் பேசக்கூடிய வசதி வாய்ப்பிருக்கின்றது என்று தனது உரையில் எடுத்துரைத்துள்ளார். பின் இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்த செல்வன் அபிஷேக் அமலேந்திரன் அவர்கள் அற்புதமான சங்கப்பாடல் நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திருமொழி சொல்லாய். அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர் வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா என்ற பாடலுடன் இன்னும் 2 பாடல்களை வயலின் இசையில் இசைத்து எம்மையெல்லாம் மகிழ்வித்தார்.
     

            அதனைத் தொடர்ந்து மாநாட்டுத் தலைவரும் தமிழ்நாட்டுத் தமிழ்மொழி அமைச்சர் மாண்புமிகு க.பாண்டியராஜன் அவர்கள் தமிழ்மொழிப் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் கேட்டபோது 1000 ஏக்கர் நிலத்தை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அளித்தமை, 50 தமிழ்சங்கங்கள் அமைக்க வித்திட்டமை பற்றியும், புலம்பெயர் தமிழ்  காட்சிக் கட்டிடம் தமிழகத்தில் அமைக்கப்பட இருப்பது பற்றியும் இந்தியாவில் 229 கோடி தமிழுக்காக ஒதுக்கியுள்ளார்கள் என்பதையும் தமிழ் வளர்ச்சிக்காக 15 அம்சங்கள் உருவாக்கியுள்ளார்கள் என்பதையும் கூறியுள்ளார்கள். தமிழ் வளர் மையம் அமைத்தல், தமிழ் பண்பாட்டு மையம் அமைத்தல், உலகத்தமிழ்ச் சங்கம் அமைத்தல், 36 அருங்காட்சியகம் அமைத்தல், அகழ்வாய்வுகள் அமைத்தல், இந்தியாக்கு உள்ளேயும் வெளியேயும் விருதுகள் வழங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது, தமிழ்க்கலைக்கூடம், சிற்பக்கலைக்கூடம் ஒன்றிணைத்தல், திருக்குறளுக்கு ஐக்கியநாடுகளின் அங்கீகாரம் கிடைக்க வைத்தல், உலகத்தமிழ் மாநாடு 7 நாடுகளில் நடக்கிறது 14 நாடுகளில் இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை நடத்துதல், கலைக்குழுக்களுக்கு வலுச் சேர்த்தல் போன்ற திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். 

                       


    அதனைத் தொர்ந்து வடமாகாண கல்வி அமைச்சர் ப.சர்வேஸ்வரன் அவர்கள் யுத்தம் முடிந்தும் இன்னும் நாடு சகஜநிலைக்குத் திரும்பவில்லை என்றும் அருங்காட்சியகம், தமிழ் ஆய்வு நூலகம், கலைக்கூடம் போன்றன வடமாகாணத்தில் அமைப்பது பற்றியும், தமிழை சிறப்புப் பாடமாகப் பயில்பவர்களுக்கு வருடாந்தத் தொகையாகப் பணம் கொடுப்பது பற்றியும், தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம் சிறப்புக்கல்வி கற்க 50 இலட்சம் ஒதுக்கியுள்ளமை பற்றியும் எடுத்துரைத்தார்.
              
    அதனைத் தொடர்ந்து சீனத்துக் கலைமகள் உரையாற்றும் போது சீனமொழி, தமிழ்மொழி பற்றிய ஒப்பீடு பற்றியும் சீனா, தமிழ்நாட்டு வணிகம் பற்றியும் வசந்தவிழா பொங்கல் விழா பற்றிய ஒப்பீடு பற்றியும் தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.


     அதனைத் அதனைத் தொடர்ந்து மருத்துவக் கலாநிதி சிவ. தியாகராஜா Ph.D இலண்டன் அவர்கள் சங்ககாலத் தமிழகமும் தொல்லியல் கட்டமைப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார். 


    அவ்வுரையில் சங்ககால இலக்கியம், காலக்கணிப்பு, முச்சங்கங்கள், வரலாற்றாய்வு போன்ற அடிப்படையில் இவருடைய உரை நிகழ்த்தப்பட்டது.


    Dr. Jean – Luc, Chevvilard  (Senior Researcher HTL – University De Diderot, Paris   அவர்கள் ஆங்கிலம், தமிழ், பிரான்ஸ் ஆகிய 3 மொழிகளிலும் பேசினார். யாழ்நூல் பற்றியும், பிங்கலம், நிகண்டு போன்ற அகராதிகள் பற்றியும் கொப்பன்ஹாகனிலுள்ள தமிழ், இலத்தின் அகராதிகள் பற்றிப் பேசினார்.
            
      ஆய்வியல் அமர்வு (1) இலக்கியச் செவ்வியம் ஆய்வுக்கட்டுரைகள்
     
    இவ் அமர்வுக்கு வழக்கறிஞர் செ.சிறீஸ்கந்தராஜா (இலண்டன்) அவர்கள் அமர்வுத் தலைவராகப் பணியாற்றினார்.

     
    1.    பேராசிரியர் விசாகரூபன் (யாழ்பல்கலைக்கழகம், இலங்கை):
     

    சங்க இலக்கியத்தில் தனி மனித ஆளுமை உருவாக்கச் சிந்தனைகள்
    என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    2.    பேரா.பெஞ்சமின் இலெபோ (பிரான்ஸ்)
     

    சங்க இலக்கியங்களில் மெய்ப்பொருள் விழுமியங்கள் என்னும் தலைப்பிலே ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    3.    திருமதி வாசுகி நடேசன் (கல்வியாளர், இத்தாலி)
     

    சங்க இலக்கியங்கள் விபரிக்கும் சாதாரணர்கள் என்ற தலைப்பில் பாட்டுடைத்தலைவர்களாக மன்னர்கள் குறுநிலை மன்னர்கள், அன்றி சாதாரண குடிமக்களை எவ்வாறு விபரிக்கின்றன என்று தன்னுடைய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    4.    திருமதி உமாமகேஸ்வரி(பிரான்ஸ்)
     

    சங்க இலக்கியங்களில் தோழி என்னும் இலக்கியக் கதாபாத்திரம் பற்றிய தன்னுடைய கட்டுரையைச் சமர்ப்பித்தார்.
    சங்க இலக்கியங்களில் தோழிகளின் முக்கியத்துவம் பற்றி தன்னுடைய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    5.    முனைவர். அலெக்சு தேவராசு (சேன்மார்க், ஜேர்மனி)

     
    சங்ககால விளையாட்டுக்களை இக்கால விளையாட்டுக்களுடன் ஒப்பிட்டு ஆய்வுரையைச் சமர்ப்பித்தார்.

    ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தவர்களை தமிழ்மொழி வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சரும் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் பொன்னாடை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவித்தார்கள்.

     
      ஆய்வியல் அமர்வு 2 இலக்கியச் செவ்வியம் ஆய்வுக்கட்டுரைகள்

    நடன ஆசிரியை திருமதி. சி. சர்மிலி அவர்களின் மாணவிகளின் நாட்டிய அஞ்சலி குறிஞ்சித்திணை நடனம் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டியது. அதனைத் தொடர்ந்து ஆய்வியல் அமர்வு ஆரம்பமானது
     

    Dr.Jean – Lue, University de Diderot (Senior Researcher, University de Diderot )

    1.    செ.சிறீஸ்கந்தராஜா
    B.Sc, LL.M  (இலண்டன்)

    புறநானூற்றில் கையறுநிலைப் பாடல்கள் - ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    2.    பேராசிரியை கிருஸ்ணவேணி நொபேர்ட் (யாழ்பல்கலைக்கழகம், 
            இலங்கை)

    தமிழ் அழகியல்: சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட நோக்கு

    3.    க. அருந்தவராஜா (கல்வியியல் விரிவுரையாளர், சுவிற்சலாந்து)

    சங்ககாலக் கட்டமைப்பு நவீனகாலத்திலும் தொடர்கிறதா? என்ற தலைப்பில் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    4.    முனைவர் த.ஆனந்தஜோதி (முதுநிலை விரிவுரையாளர், யாழ்பல்கலைக்கழகம், இலங்கை)

    நற்றிணை காதல் உணர்விற்கு தற்காலப் பரதநடனக் காதல் உணர்விற்கும் இடையிலான ஒப்பீடு என்ற தலைப்பில் தன்னுடைய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    5.    முனைவர். சோபனா தர்மேந்திரா (முதுநிலை விரிவுரையாளர்,                 
          யாழ்பல்கலைக்கழகம், இலங்கை)

      சங்க இலக்கியங்களில் அஷ்டவித நாயகிகள் என்ற தலைப்பில்                  தன்னுடைய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

    6.    இரத்தினசாமி இரமேஸ்வரன் (தமிழ்மொழி வளர் ஆர்வலர், ஜேர்மனி)

    சங்ககால இலக்கியங்கள் ஒரு பார்வை என்ற தலைப்பிலே தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை வழங்கினார்.

    கேள்வி பதில் நேரத்தைத் தொடர்ந்து சிறப்புநிலை ஆய்வாக
    M.Pierre Mendi (Professeur du France de I’LLES)

    வீரயுகக் காவிய ஒப்பீடு – ஆபிரிக்க வீரயுகம் - சங்க இலக்கியம் பற்றிப் பிரெஞ்சு மொழியில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து

    Dr.Prof. Geetanjali Pickert (Mainz University, Germany)


    சங்ககால மருத்துவ முறையும் நவீன கால மருத்துவ முறையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

    இத்துடன் முதல்நாள் ஆய்வரங்கம் முடிவுற்றது. ஆய்வாளர்கள் கௌரவிப்பு, சிறப்புரையாற்றியோர் கௌரவிப்பு, நிகழ்ச்சிகள் வழங்கியோருக்கான நினைவுச் சான்றிதழ்கள் வழங்கியமை, தேநீர் இடைவேளை, மதியபோசன இடைவேளை இவை இந்நிகழ்வில் சிறப்பாக அமையப்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


    Jaffne University Vice Chancellor

                                                                                                             


                                    இரண்டாம் நாள் நிகழ்வு தொடரும் ..................



    4 கருத்துகள்:

    1. சிறந்த நிகழ்வுத் தொகுப்பு
      பாராட்டுகள்

      பதிலளிநீக்கு
    2. எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி23 செப்டம்பர், 2018 அன்று AM 12:34

      மாநாடு பற்றியும் அங்குச் சம்ர்ப்பிக்கப்பட்ட உரைகள், கட்டுரைகள், நிகழ்வுகள் ஆகியவற்றைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளீர்கள். சங்ககால வீரயுகத்தையும் ஆப்ரிக்க வீரயுகத்தையும் ஒப்பிடும் புதிய அணுகுமுறை என்னைக் கவர்ந்துள்ளது.

      பதிலளிநீக்கு
    3. தங்களால் விழாவில் நேரில் கலந்து கொண்டஉணர்வு
      நன்றி சகோதரியாரே

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...