போருக்குப் பின் மாற்றம் காணும் உலக வரிசையில் இலங்கை
(பத்திரிக்கை ஆசிரியர்கள், புரவலர் ஹாசிம் உமர், எனது சகோதரர்கள்)
நான் இலங்கை மண்ணில் கழித்த விடுமுறை காலங்களில் நான் அநுபவித்த சில அநுபவப் படிவங்களை என் வாசகர்களுக்கு வழங்குகின்றேன்.
ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் போர் கண்டு மீண்டு தலைநிமிர்த்தி வேறு நாடுகளின் கண்களை விரியச் செய்து திரும்பிப் பார்க்க வைக்கின்றன. அந்த வரிசையில் இலங்கை இன்று வளர்ச்சிப் படிகளில் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை. மனங்களையும் மண்ணையும் மாற்றிமாற்றிப் பார்க்கின்றேன். மண் வேற்று நாடுகளை விஞ்சத் துடிக்கின்றது. மனங்கள் மனிதத்தை மறக்கத் துடிக்கின்றன. இவ்வேறுபாட்டினுள்ளும் அன்புள்ளம் கொண்ட அரவணைப்புள்ளங்களும் இருக்கவே செய்கின்றன.
இவ்வருட (2016) விடுமுறை இலங்கை மண்ணிலே கொழும்பு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலனறுவை போன்ற நகரங்களிலே கழிந்தது. மறக்க முடியாத என் முக்கோண முக்குளிப்புத் தாயக வெளியீடும் அதனுடன் இணைந்து கொண்டது. முதலில் என் நூல் வெளியீடு பற்றி சிறிது தெளித்து விட்டு மண்ணின் மறக்கவொண்ணாச் சுவையையும் தருகின்றேன்.
என் கனவு நிஜமான நாள் 28.08.2016. தமிழ்ச்சங்க மேடை என் எழுத்துக்கு அங்கீகாரம் வழங்குமா? என்னும் கேள்வி என் இளவயதில் இதயத்தில் இருந்தது. அக்கேள்விக்கு அன்றைய நாள் விடை தந்தது. என் நூல் மலேசியா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் வெளியீடு செய்யப்பட்டடிருந்தாலும் கொழும்புத் தமிழ் சங்கத்து மேடையிலே வீற்றிருந்த காட்சியே என் நெஞ்சுக்கு மிக்க மகிழ்வைக் கொடுத்தது. வீரகேசரி சங்கமம் ஆசிரியர் ஜீவா சதாசிவம் நிகழ்ச்சித் தொகுப்பில் நூல் வெளியீடு இடம்பெற்றது. தலைமைப் பொறுப்பை கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் தம்பு சிவா அவர்கள் எடுத்திருந்தார்.
கௌரவ விருந்தினர்களாக ஞானம் சங்சிகை ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களும், தேசிய சம்பளங்கள் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர் திரு. உடுவை தில்லைநடராஜா அவர்களும், தடாகம் கலை இலக்கிய வட்ட அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா அவர்களும், ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்ற செயலாளர் யாழ்பவாணன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அறிமுகவுரை ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் பாரதி ராஜநாயகம் அவர்கள் வழ்ங்கினார். விமர்சன உரையை தகவம் அமைப்புச் செயலாளர் வசந்தி தயாபரன் அவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார். முதலாவது பிரதியை புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் ஹாசிம் உமர் எனது சகோதன் திலகராஜ் இடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
(தமிழ் மொழி வாழ்த்து எனது மருமகள் சதுர்ஷா)
விழா 3 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு முடிவிற்றது. எழுத்தாளர்கள், வாசகர்கள், எழுத்துலக ஜம்பவான்கள் நிறைவில் மண்டபம் சிறப்புற்றிருந்தது. ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்தினர் நவயுக கவிதாயினி என்னும் பட்டத்தை எனக்கு வழங்கிக் கைளரவித்தனர். அதேபோல், தடாகம் கலை இலக்கிய வட்டத்தினர் கவினெழி பட்டத்தினையும் வழங்கிக் கௌரவித்தனர். அவ் இரண்டு அமைப்பினர்க்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்
வரவேற்புரை எனது மகள் மெனுஷா
( நூல் விமர்சனம் திருமதி வசந்தி தயாபரன் )
(திரு. தம்பு சிவா விடம் இருந்து திரு. உடுவை தில்லை நடராஜா நூல் பெற்றுக்கொள்ளுகின்றார்)
(கலைமகள் ஹிதாயா அவர்களிடம் இருந்து நினைவுப் பரிசும் சான்றிதழும் பெற்றுக் கொண்டேன் )
(முதல் பிரதி பெற்றுக் கொண்டமை )
(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் திரு. பாரதி ராஜநாயகம் )
(வீரகேசரி பத்திரிகையில் வெளியான பேட்டி )
தொடர்பற்றுப் போன பல்கலைக்கழக நண்பர்கள், பாடசாலை நண்பர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி, பத்திரிகை நிருபர்கள், ஆசிரியர்கள் இணைந்து இனிதே நிறைவுற்ற நூல்வெளியீட்டு மனநிறைவுடன், இலங்கைப் பத்திரிகைகளில் இடம்பெற்ற விமர்சனங்கள், பேட்டிகள், தொலைக்காட்சி நேர்காணல் என்று என் எழுத்துலக வாழ்வு இலங்கை மக்களால் உணரப்பட இலங்கையின் மற்றைய இடங்கள் நோக்கி என் எண்ணத்திசை திரும்பியது
(வசந்தம் தொலைக்காட்சியில் வெளியான என்னுடைய நேர்காணல் )
பத்திரிகை நிருபர்கள், ஆசிரியர்கள் இணைந்து இனிதே நிறைவுற்ற நூல்வெளியீட்டு மனநிறைவுடன் இலங்கையின் மற்றைய இடங்கள் நோக்கி என் எண்ணத்திசை திரும்பியது.
திருகோணமலை
கெந்தகப் பூமி என்று அழைக்கப்படும் திருகோணமலை நோக்கிய பயணத்திலே சுட்டெரிக்கும் வெயிலில் சூரியனின் தாராள மனப்பாங்கு கச்சிதமாய்த் தெரிந்தது. வெப்பம் அதிகரித்துவிட்டால் ஜேர்மனியில் பாடசாலைகளுக்கு விடுமுறை தந்துவிடுவார்கள். மந்தம் பிடித்து வேலை செய்வதற்கு மக்களெல்லாம் மயங்கிக் கிடப்பார்கள். உண்மையில் திருகோணமலை மக்கள் கெட்டிக்காரர்கள் தான் உச்சி வெயிலிலும் உற்சாகமாகத் தான் தொழிற்படுகின்றார்கள். திருக்கோணேசர் கோயில் அமைப்பும் அழகும் சுற்றாடலை சூழ்ந்திசைக்கும் ஓம்... என்னும் ஓசையும் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இயற்கையின் இரம்பியத்தைப் பறைசாற்ற இம்மலை ஒன்றே போதும். இராவணன் வெட்டு, தாயாருக்கு ஈமக்கடமைகள் புரிந்ததாகச் சொல்லப்படும் புராணக்கதையை விளக்கும் வரைபடங்கள் ஆலயத்தினுள் அழகாகக் காட்சியளித்தன. திருகோணமலைப் பயணத்திலே குறிப்பிடத்தக்க பாரிய குறைபாடாகக் காணப்படுவது திருகோணமலையிலிருந்து நீர்கொழும்பு செல்லுகின்ற பாதையில் சாப்பாட்டுக் கடைகளே கண்ணில் தென்படவில்லை. பாதை ஓரம் தேடிய படி வாகனத்தைச் செலுத்தி இறுதியில் குருநாகலிலே தான் உணவகத்தைக் காணக்கூடியதாக இருந்தது. அப்போதுதான் அங்கு நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை கேட்டறிந்தேன். சிறு கைக் குழந்தையுடன் பிரயாணம் செய்த ஒரு தாய் பசியை அடக்க முடியாமல் ஒரு கடையில் பனிஸ் என்று சொல்லப்படும் பாண் வகையைச் சாப்பிட்டிருக்கின்றார். தொண்டை வரட்சியால் உள் சென்ற பனிஸ் தொண்டையில் அடைத்து உயிர் துறந்திருக்கின்றார். நெடிய தூரப்பயண வீதிகளில் (திருகோணமலை கொழும்பு வீதி) உணவகங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை மக்கள் உணர வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான விண்ணப்பமாக இருக்கின்றது.
திருகோணமலை புறாத்தீவு
நிலாவெளி கடற்கரை
( இராவணன் வெட்டு )
மறுபதிவில் தொடரும் யாழ்நகர், மட்டக்களப்பு , சரித்திரத் தளம் பொலநறுவ
இனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குVetha.Langathilakam
Denmark.
இனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குvetha.Langathilakam.
படங்களுடன் இந்தப்பதிவு மிக அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குமனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மேலும் பல வெற்றிமேல் வெற்றி கிடைக்க வாழ்த்தி மகிழ்கிறோம்.
அன்புச்சகோதரி கௌசி!
பதிலளிநீக்குகட்டுரை வாசித்தேன்.நன்றாகவே எழுதியிருக்கின்றார்கள்.வாசிக்கும்போது சந்தோசமாக இருக்கிறது.எழுத்தாளன் வேண்டுவது இதுஒன்றைத்தான்.இதுஒரு ஊக்கமருந்தும் கூட.
வாழ்த்துக்கள்.
புத்தி அண்ணன்.
அருமையான பதிவு
பதிலளிநீக்குநூல் வெளியீட்டு நிகழ்ச்சித் தொகுப்பு அருமை