நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீட்டாளர் : ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்,
பக்கங்கள் : 194.
*****
முகநூல் தோழி சந்திரகௌரி
சிவபாலன் அவர்கள், நான் எழுதும் நூல் விமர்சனங்களை இணையத்தில்
படித்து விட்டு என்னுடைய முகவரியை பெற்று இந்த நூலைஜெர்மனியில்
இருந்து அனுப்பி இருந்தார்கள். புலம்பெயர்ந்த வலி மிகுந்த வாழ்க்கையிலும்
தமிழுக்காக தமிழ் இலக்கியத்திற்கே நேரம், பணம் செலவழித்து
நூல் வெளியிடுவது குறித்து முதல் பாராட்டு.
நூல் ஆசிரியர் சந்திரகௌரி
சிவபாலன் அவர்கள் இந்நூலை பெற்றோருக்கு காணிக்கையாக்கி உள்ளார். அருமையான கவிதையும் எழுதியும் உள்ளார். அதில் இருந்து சில துளிகள்.
“என்னுள் வாசம் செய்து, எனக்குள்
ஓர் எழுத்தாளனை,
எனக்குள் ஒரு வைத்தியனை,
எனக்குள் ஓர் உழைப்பாளியை,
எனக்குள் ஒரு
தாய்மையை,
எனக்குள் ஒரு பகுத்தறிவாளியை ;
எனக்குள் ஒரு சிந்தனைவாதியை
எனக்குள் நான் எல்லாமாய் வாழ அச்சாணியானவர்களே!
இக்கவிதையின் நூலாசிரியரின்
பன்முக ஆற்றலும் அதற்கு முழுமுதற் காரணமானவர்கள், பெற்றோர்கள்
என்பதையும் உணர்த்தி உள்ளார்.
இது ஒரு வித்தியாசமான நூல்
புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் ஆன்மிகவாதியாகவே
இருப்பார்கள். சென்ற நாடெல்லாம் கோயில் கட்டி
வணங்குவார்கள். இந்த நூல் ஆசிரியர் சந்திர கௌரி
அவர்கள் பகுத்தறிவாளர். வித்தியாசமாக சிந்திந்து எழுதிய
ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. 57 கட்டுரைகள் உள்ளன. பழைய பழக்கவழக்கங்களை கண்மூடி ஆதாரிக்காமல் ஏன்?
எதற்கு? எப்படி? என
ஆராய்ந்து நன்மை இருந்தால் ஏற்றுக் கொள்ளவும், தீமை என்றால்
புறந்தள்ளவும் விழிப்புணர்வு விதைத்து உள்ளார், பாராட்டுகள்.
நூல் ஆசிரியர் சந்திரகௌரி
சிவபாலன் ஒய்வுக்கு ஒய்வு தந்து விட்டு சிறப்பாகச் சிந்தித்துஎழுதிய கட்டுரைகளின்தொகுப்பு இலக்கியத்தில் ஈடுபட்டு முத்திரை
பதித்து வருகிறார். முகநூலில், வலைப்பூவில், இணையத்தில் இவரது படைப்புகளைப் படித்தி
இருக்கிறேன். அவற்றை மொத்தமாக நூலாகக்
கண்டதில் மகிழ்ச்சி. ஒய்வுக்கு ஒய்வு தந்து விட்டு சிறப்பாகச் சிந்தித்துஎழுதிய
கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து படித்து
உள்ளார். பட்டப்படிப்பு தமிழ் இலக்கியம் பயின்று உள்ளார்.
மடை திறந்த வெள்ளமாக திருக்குறள்
உள்ளிட்ட பல இலக்கியங்களை மேற்கோள் காட்டி கட்டுரைகள் வடித்து உள்ளார். வால்மீகி இராமாயணம் வரை படித்துள்ளார். நூலாசிரியரின் இரண்டாவது படைப்பு இந்நூல். www.gowsy.com என்ற இணையம் சொந்தமாகத் தொடங்கி எழுதி வரும்
எழுத்தாளர். இந்நூலிற்கு திருமதி P.S.M. சார்லஸ், வைரமுத்து
சிவராசா (பொன். புத்திசிகாமணி) ஆகியோர் சிறப்பான அணிந்துரை வழங்கி உள்ளனர்,
பாராட்டுகள்.
‘நிலவும் யாழ் நூலும்’ என்ற முதல் கட்டுரையில் யாழ் பற்றிய ஆய்வு மிக
நன்று. யாழின் வகைகள் பற்றி பிரமிப்பில்
ஆழ்த்தி உள்ளார்.
“7 தந்திகளுடைய செங்கோட்டி
யாழும், 21 தந்திகளுடைய பேரியாழும் ஆகும். இவை பற்றிப் பத்துப்பாட்டு அழகாக
எடுத்துக்காட்டுகின்றது. அதன்பின் சிலப்பதிகார காலத்தில்
14 தந்திகளுடைய சகட யாழும், 17 தந்திகளுடைய மகர யாழும்
வழக்கத்திற்கு வந்தன. அதன்பின் 1 தந்தியுடைய மருத்துவ
யாழும், 1000 தந்திகளுடைய நாரத பேரியாழும், 100 தந்திகளுடைய கீசயாழும், 9 தந்திகளுடைய தும்புரு
யாழும் வழக்கத்திற்கு வந்தன.. அழகான வேலைப்பாடுகளுடனும், இரத்தினக்கற்கள்
பதித்தும் இந்த யாழ் வகைகள் காணப்பட்டன எனவும், மேலும் அவை
பற்றிய விளக்கங்களும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,
சிலப்பதிகாரம், கல்லாடம் ஆகிய நூல்களில்
தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கின்றது”.
பதச்சோறாக இங்கு எழுதி உள்ளேன். இது போன்று பல ஆய்வுத் தகவல்கள் நூலில் உள்ளன.
தகவல் சுரங்கமாக உள்ளது. கட்டுரைக்குப் பொருத்தமான படங்களும், நல்ல கவிதைகளும் நூலில் இருப்பதால் சற்று பெரிய நூலாக இருந்தாலும் படிப்பதற்கு ஆர்வமாக மிக நல்ல நடை.
‘பகுத்தறிவு’ என்ற கட்டுரையில் ‘எப்பொருள்...’ என்று தொடங்கும் இரண்டு திருக்குறளையும்
மேற்கோள் காட்டி பகுத்தறிவு விதை விதைத்தது சிறப்பு. கட்டுரையின் தொடக்க வரிகள் இதோ!
“ஏன் என்று கேட்காது விட்டால்,
மடையர் நாம் என்று காட்டி விடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில்
ஐந்தறிவு மிருகங்களா? என்று புரியாது போய்விடும்”.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை
பெரியார், அறிஞர் சாக்ரடீஸ் ஆகியோர் அறிவுறுத்திய ஏன்?
எதற்கு? எப்படி? எதனால் ?
என்ற கேள்விகளைக் கேட்டதன் வெளிப்பாடே இந்த நூல் எனலாம். அந்த அளவிற்கு எதையும் பகுத்தறிவு கண்ணோட்டத்துடன்
கட்டுரைகள் வடித்துள்ளார். பாராட்டுகள். அட்டைப்பட வடிவமைப்பு, உள்
அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. அச்சிட்ட
அன்றா பிரிண்டேர்ஸ் (யாழ்ப்பாணம்) அச்சகத்திற்குப் பாராட்டுகள்.
தமிழ் இலக்கியங்களில் உள்ள
பகுத்தறிவு கருத்துக்களை மேற்கோள் காட்டி உள்ளார். கட்டுரையின் முடிவில் முடிவுரை போல வடித்த வைர
வரிகள் இதோ!
“காலத்தைக் காண இலக்கியங்களைப் புரட்டாதீர் –
அங்கு!
அங்கீகரிக்கப்படாத தலைவர்களும்
அங்கீகரிக்கப்படாத தலைவர்களும்
தெய்வங்களாக்கப்பட்ட
போலி மனிதர்களும்
போலி மனிதர்களும்
கோடீஸ்வர்ர்களால் குத்தகைக்கு
எடுக்கப்பட்ட கோயில்களும்
எடுக்கப்பட்ட கோயில்களும்
காலத்தை அலங்கோலமாயக்
காட்டிக் கொண்டிருக்கும்”.
காட்டிக் கொண்டிருக்கும்”.
மகாகவி பாரதியார் பாடிய புதுமைப்பெண்ணாக
நெஞ்சில் உரத்துடனும், நேர்மைத்
திறத்துடனும், கவிதைகளுடன் கட்டுரைகள் வடித்துள்ளார்.
தமிழ்மொழியின் சிறப்பை, பெருமையை, அருமையை பல கட்டுரைகளில் வடித்துள்ளார்.
தாய்மொழியின் முக்கியத்துவத்தை விளக்கி உள்ளார். இலக்கிய இன்பம் என்ற கட்டுரையில் சங்கப்பாடல்
தொடங்கி கவியரசு கண்ணதாசன் பாடல் வரை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை நன்ற.
வள்ளுவர் பெருமையும், திருக்குறளும் கட்டுரையில்
உலகப்பொதுமறையின் மேன்மையை உலகறிய வைத்துள்ளார்.
ஆடி அமாவாசை, திருநீறு, சந்தனம், சித்ரா பௌர்ணமி, தாலி இவற்றை அறிவியல் பார்வையுடன்
பார்த்து தந்த விளக்கங்கள் அருமை. பாதணி
பற்றியும் எழுதி உள்ளார். தமிழர்களின் பண்பாடான வணக்கம்
செலுத்துதல் பற்றியும் எழுதி உள்ளார். சிறந்த சிந்தனையாளர் என்பதால்
இன்றைய கல்விமுறை பற்றியும்,
மலர்களின் நேசம், எழுத்தாளனை மதிக்காத அவல
நிலை பற்றியும், அறப்பணி ஆசிரியர் பணி அதற்க்கே உன்னை அர்ப்பணி "என்பார்கள். ஆசிரியர்
கடமை பற்றியும் விரிவாக எழுதி உள்ளார்.
குழந்தை வளர்க்கும் விதம் பற்றி தாய்மொழியாம்
தமிழ்மொழியைப் பேசத் தயங்குவது ஏன்? என்ற கேள்வி கேட்டு
விளக்கம் தந்துள்ளார். மணம் முடிக்காத கன்னிகளுக்கு
ஆலோசனை வழங்கி உள்ளார். திருமணம் என்ற கட்டுரையில்
வாழ்வியல் சிந்தனை விதைத்து உள்ளார். தமிழர்
திருநாளாம் பொங்கல் பற்றியும் கட்டுரை உள்ளது. குழந்தைகளின் உலகை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.
அவரது படைப்புகள் பற்றி அவரது
வரிகளில் காண்போம்.
எனது படைப்புகள்
எனது எழுதுகோல் செதுக்கிய சிற்பங்கள்
கணினித் துணையுடன் பிரசவித்த குழந்தை
இணையங்கள் அணைத்த வாரிசு
இனிப்பு தடவாத எலுமிச்சை.
எனது எழுதுகோல் செதுக்கிய சிற்பங்கள்
கணினித் துணையுடன் பிரசவித்த குழந்தை
இணையங்கள் அணைத்த வாரிசு
இனிப்பு தடவாத எலுமிச்சை.
எழுமிச்சை இனிப்பாக
இல்லாவிட்டாலும் உடல் நலத்திற்கு நல்லது. இவருடைய
எழுத்து சமுதாயத்திற்கு நன்மை தரும்.நூல் ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன்
அவர்களுக்கு பாராட்டுகள் .புலப்பெயர்ந்து ஜெர்மனியில் வாழ்ந்த போதும் தமிழ் மீதும்
தமிழர் மீதும் பற்றுக் கொண்டு சிந்தித்து பல கட்டுரைகள் வடித்து, அவற்றை தொகுத்து நூலாக வழங்கி, தமிழன்னைக்கு அணி
சேர்த்து வருவதற்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் .வாசகரை
நெறிப்படுத்தும் மிக நல்ல நூல் .
அருமையான கண்ணோட்டம்
பதிலளிநீக்குதொடருங்கள்
தங்கள் பதிவுகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/
பதிலளிநீக்கு