அழகு காட்டி ஆசை ஊட்டி
பணத்தை அள்ளப் பார்க்கும் கொடுமை
விலைக்குப் போகும் பொருளின் விலையை
விண்ணுக்குயர்த்தும் கொடுமை
மதி மயங்கும் இளமை தன்னை
மயக்கிப் போடும் வலிய புத்தி
மடையர்களாய் மயங்கும் நுகர்வோர் தம்மை
கணக்குப் போடும் முதலாளித் தன்மை
கல்லும் பொன்னிறமும் மலிந்த உடையில்
பணமும் மதிப்பும் மிதந்து நிற்கும்
மயங்கி நிற்கும் இளமை இங்கு
கறந்து நிற்கும் பெற்றோர் பணத்தை
கையில் புரளும் பணத்தின் பலத்தால்
கண்ணைக் கட்டி காசை எறியும்
கண் கெட்ட மனிதர் ஆட்டம்
எண்ணிப் பார்த்தால் ஏனோ வெறுப்பு
புடவைக் கடையிலோர் பெண்ணின் ஆட்சி
அடங்கிப் பணியும் கணவன் போக்கு
ஐரோப்பியத் தமிழன் முதலாளிப் போக்கில்
விற்பளையாளன் பயந்து நிற்கும் பாவக்காட்சி
தொட்ட ஆடை பார்க்க முடியும்
தொட்டு அணிய அநுமதி இல்லை
கட்டிப் பார்க்கா ஆடை வாங்கி
காட்சிப் படுத்தும் இளமையோ அதிகம்
நுகர்வோரை மதிக்காத முறையற்ற விற்பனையால்
ஐரோப்பியர் முன்னிலையில் தலைகுனியும் தமிழன்நிலை
பெருக்கத்து வேண்டுவது பணிவென்று அறியாத
படிப்பறிவற்ற பேதைகளால் தடுமாறும் தமிழனிங்கு
பணம்புரளும் கரங்களுள்ளோர் பணத்தை வழங்க
பாரிலுண்டு பல பரிதாப இல்லங்கள்
பலநாள் அணியா ஆடையின் நாட்டத்தால்
பணமும் மதிப்பும் இழத்தல் தகுமோ
சொல்வீர்! சொல்வீர்! சொல்வீர்!
உண்மை
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை சகோ புகைப்படத்திற்க்கு ஏற்ற சிறப்பான வரிகள்.
ஐரோப்பியர் முன்னிலையில்
பதிலளிநீக்குதலைகுனியும் தமிழன் நிலை - இப்படி
எத்தனை நாடுகளில்...
முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html
அன்புச் சகோதரிக்கு வணக்கம். நமது விழாத் தொடர்பான போட்டிக்கு எழுதியதுதானே இது? அப்படியெனில் “போட்டிக்கு வந்த படைப்புகள்” எனும் இந்த இணைப்பில் உள்ள உறுதிமொழிகளைத் தளத்தில் இணைத்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html நன்றி.
பதிலளிநீக்குகட்டிப் பார்க்கா ஆடை வாங்கி
பதிலளிநீக்குகாட்சிப் படுத்தும் இளமையோ அதிகம்//
என்ன செய்வது..இவைகளைப் பார்த்து
மனம் துன்புற வேண்டியே உள்ளது.