• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

    கார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்


                       


    11.2. திங்கள் ஜேர்மனி முழுவதும் விடுமுறைநாள். அன்றுதான் Rosenmontag. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். வருடாவருடம் Rosenmontag  என்று அழைக்கப்படும் இந்நாளில் தம்மை வேறுவிதமாகக் காட்டும் மக்கள் விதம்விதமான ஆடைஅலங்காரங்களில் தம்மை மாறுபடுத்தியிருப்பர்.  – பாகை குளிரிலே காட்டு மிருகங்கள் எல்லாம் நாட்டில் நடமாடுவது  போல் காட்சியளிக்கும். அரசி அரசர்கள் எல்லோரும் வீதியில் நடமாடுவது போல் தோன்றும். முகங்களிலே பல வண்ணங்கள் பூசி வலம் வருவார்கள். நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்று எங்கும் கொண்டாட்டம் களைகட்டியிருக்கும். மொத்தத்தில் ஜேர்மனி முழுவதும் கண்கவரும் வண்ணங்களில் காட்சியளிக்கும். சிறியவர்கள், இளையவர்கள், பெரியவர்கள், வயதானோர் என்ற பேதமின்றி அனைவரும் மாறுபட்ட தோற்றத்தில் தம்மை அலங்கரிப்பாகள். எல்லோரும் இப்படிக் காணப்படுவதனால், விசித்திரமாக யாரையும் யாரும் பார்ப்பது கிடையாது.  


           பலவிதமாக இக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஊர்திகள், முகமூடிகள், விநோத ஆடைகள், கலைநிகழ்வுகள் என இந்நிகழ்வு அழகுபெறுகிறது. பற்பல நிறுவனங்களின் ஊர்திகளிலே இனிப்புப் பண்டங்களையும், வேறுவிதமான பொருள்களையும் எறிந்த வண்ணம் பவனி வருவார்கள். வீதியில் பார்வையாளர்கள் அவற்றைப் பொறுக்கி எடுத்து மகிழ்வார்கள். குடைகளை மறுபக்கமாக விரித்து எறிகின்ற பண்டங்களைச் சேகரிப்பதும் ஒரு சுவாரஷ்யமான காட்சியாகும். 
            
           இவ்விழா லத்தீன் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. 5000 ஆண்டுகளுக்கு முன் முன்னோடிக் கலாச்சாரத்தை தோற்றுவித்த மொசப்பதேனியாவில் இவ்விழா கொண்டாடப்பட்டிருக்கிறது என்று அறியப்படுகின்றது. ரோம், கனடாவிலுள்ள கியூபெக், தென் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்விழா நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு காரணங்களுக்காக இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். பழங்கால ரோமாபுரியில் வேளாண்மையைக் கடவுளுக்குக் கொடுத்தவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

       தற்காலத்தில் ஜேர்மனியில் இவ்விழா கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. போரிலே பிரான்ஷ் நாட்டவரைத் தோற்கடித்தமைக்காகக் கொண்டாடப்படுவதாகவும், மாரிகாலத்தைத் துரத்தியடிப்பதற்காகக் கொண்டாடப்படுவதாகவும் காரணங்கள் கூறப்பட்டாலும் ஒரு வலுவான காரணம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக உள்ளது.
            

         ஈஸ்டர் விழா (Osterfest ) விற்கு முன் 6 கிழமைகள் கிறிஸ்தவர்கள் விரதம் அநுஷ்டிப்பார்கள். சாம்பல்பெருநாள் (Aschenmittwoch) அன்று தொடங்கி 6 கிழமைகளின் பின் வரும் பெரியவெள்ளி (Karfreitag) வரை இவ்விரதம் அநுஷ்டிக்கப்படும். அதனால் அதற்கு முதல் இவ்வாறு ஆடிப்பாடிக் குடித்து மகிழ்வார்கள். பின்னே வரும் மனஅடக்கத்திற்கு முன் ஆசைகள் எல்லாவற்றையும் அநுபவிப்பார்கள்.  மனதை இவ்வாறெல்லாம் குதூகலப்படுத்துவார்கள். பியர் விலைப்படும், ஆடைஆபரணங்கள் கடைகளில் நன்றாக விற்கப்படும். 
          
                 விரதம் என்னும்போது சம்பிடாமல் ஆறுகிழமைகளும் கோயிலில் போய் அமர்ந்திருந்து அநுஷ்டிப்பதில்லை. ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிடித்ததுபோல் முடிந்ததுபோல் விரதம் இருப்பார்கள். சிலர் இறைச்சியை, சிலர் மதுபானங்களை, சிலர் இனிப்புப்பண்டங்களை, சிலர் டிஸ்கோ, போன்று ஒவ்வொருவரும் தத்தமக் ஏற்றதுபோல் தவிர்த்து இவ்விரதத்தை அநுஷ்டிப்பார்கள்.


          இது ஒரு சமய சம்பந்தப்பட்ட விழாவானாலும் கொண்டாடுபவர்கள் அனைவரும் இக்காரணத்தை மனதில் பதித்துக் கொண்டாடுவது இல்லை. குடித்துக் கும்மாளமிட்டு கூத்தடித்து மகிழ்ச்சியை வெளிச்சமிட்டுக் காட்டும் மனநிறைவான நிகழ்வாகவே கருதுகின்றார்கள். இன்றையநாள் மனதிலுள்ள மனஅழுத்தங்கள் எல்லாம் என்னை விட்டுவிடு என்று தலையில் கைவைத்து ஓடிவிடும். மொத்தத்தில் இவ்விழா காண்பவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் விழா என்று கூறுவதில் சந்தேகமே இல்லை. 

    2 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...