• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 25 ஆகஸ்ட், 2012

    உயிருக்கு உறவானாள்




    பக்கம் பக்கமாய் பகரும் பெருமைகளை
     பத்து வரிகளுக்குள் பதிக்கின்றாள் இப்பாவி
    பட்டு மேனியை பவளத்தால் பதிக்கவில்லை
     பாட்டு வரியெடுத்துப் பட்டதைப் பாடுகின்றாள்

    சொத்து சுகமாகச் சொன்ன புத்திமதிகள்
     நெத்தி அடிபோல் நிலைத்து நிற்கின்றது
    சத்தமின்றி சாந்திதான் தேடிச் சென்றாலும்
     சித்தத்தில் என்றும் சிலையாய் நிற்கின்றாள்

    கவிதைகள் எழுதினேன் பாடல்கள் பாடினேன்
     அற்புத வரிகளால் அகிலத்தில் மெச்சினேன்
    சொற்கள் கண்ட அந்தச் சுந்தர வடிவம்
     கண்களில் காணாது கதிகலங்கி நிற்கின்றேன்

    உயிருக்கு உறவானாள், உதிரத்தால் உரமிட்டாள்
     பயிருக்கு நீர்போலே உயர்வுக்கு ஊக்கமிட்டாள் 
    பனியாய் உருகியென் ஆருயிராய் நின்றாள்
     கனிவாய் அணைத்த கையால் தீயை அணைத்துச் சென்றாள் 

    9 கருத்துகள்:

    1. கதிகலங்கி நில்லாமல்
      கருத்தாய் காட்டிய வழி நடக்க
      கவலை தீரும்

      எனினும்
      மன ஆறுதலை
      காலமே கூறும்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி ஐயா . தவறாது தங்கள் உண்மையான மதிப்பீட்டைத்தரும் உங்கள் பின்னூட்டத்தை விரும்புகின்றேன் .உதலில் நன்றி சொல்லுகின்றேன். எத்தனை காலம் சென்றாலும் ஆறாத காயம் . 18 வருடங்கள் கடந்து விட்டாலும் கண்ணுக் குள்ளேயே நிற்கின்றது . உங்கள் ஆறுதலுக்கு நன்றி ஐய்யா

        நீக்கு
    2. This is my first time pay a visit at here and i am genuinely impressed to read everthing at single place.


      http://www.youtube.com/watch?v=DJ2xpbRrPBI&feature=youtu.
      be
      Also see my webpage :: free runescape bot

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உங்கள் பக்கம் பார்த்தேன். திறமையின் வெளிப்பாடு தெரிகின்றது. மிக்க நன்றி . தொடர்ந்து வாருங்கள்

        நீக்கு
    3. கவிதை மிக நன்று..
      யாரைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறீர்கள் என்று தெரியவில்லையே.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உயிருக்கு உறவாக உதிரத்தால் உரமிடுபவர் யார் அந்தத் தாயைத்தவிர வேறு யாராக இருக்க முடியும் . வருகைக்கு நன்றி முரளிதரன்.

        நீக்கு
    4. அருமையான வரிகள்...

      முடிவில் உள்ள நான்கு வரிகளும் மனதை உருக வைத்தன...

      தங்களின் பதிவு கண்டு ரொம்ப நாட்கள் ஆகி விட்டது சகோதரி...

      தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. விடுமுறையை எந்தவித இடைஞ்சலும் இன்றி அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினேன். பதிவு கூட எழுதவில்லை .இப்போதுதான் களம் இறங்கியுள்ளேன். உங்கள் வரிகளுக்கு நன்றி. தொடருங்கள்.

        நீக்கு
    5. How many articles we write or speak ,there is no deeds equal for our parents.But for our satisfaction and gratitution we are to hold this type of contribution.Your santham is very good and nice to bring your thoughts into words and shapes .VAZHUTHUKKAL by DK.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...